Published:Updated:

ஹாஸ்டல் வாழ்க்கை எனும் அற்புதம்!

ஹாஸ்டல் வாழ்க்கை எனும் அற்புதம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஹாஸ்டல் வாழ்க்கை எனும் அற்புதம்!

ஹாஸ்டல் வாழ்க்கை எனும் அற்புதம்!

நாம் ஸ்கூலுக்குப் போகும்போது சின்னதா ஏதாவது சேட்டை பண்ணினாலே, `அடுத்த வருஷம் உன்னைக் கொண்டுபோய் ஹாஸ்டல்ல சேர்த்து விடப்போறோம்'னு பயமுறுத்தியே பதறவிடுவாய்ங்க. ஹாஸ்டலை ஏதோ கொடூரக் குகை போலன்னு நினைச்சு, பயத்தில் உறைஞ்சுபோய் நாமளும் கையையும் காலையும் ஆட்டாம கம்முனு இருப்போம். ஆனா, காலேஜ் படிக்க, முதல்முறையாக ஹாஸ்டலுக்குள் அடியெடுத்து வைக்கும்போது ஆரம்பத்தில் கொஞ்சம் அலறினாலும் அப்புறம் அப்படியே `பழகி', போகப்போக லேட்டஸ்ட் பேய்ப்படங்களைப் போல ஜாலி, கேலி ஆகிடும். ரீவைண்ட் பண்ணட்டுமா..?

ஹாஸ்டல் வாழ்க்கை எனும் அற்புதம்!

•  ஹாஸ்டலில் சேர்ந்த புதிதில் வீட்டைவிட்டுப் பிரிந்த ஃபீலிங் இருந்தாலும் ஏழெட்டு எருமைமாடு வயதில் கதறி அழக்கூட முடியாது. காலையில் தூங்கும்போது தலையிலேயே தண்ணியை ஊத்தி எழுப்பிவிட்ட அம்மா அப்போதான் தெய்வமாகத் தெரிவார். காலேஜில் லீவ் கிடைக்கும்போது வீட்டுக்குப் போனால் தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்குப் போகும் மருமகனைக் கவனிக்கிற மாதிரிப் பார்த்துப் பார்த்து பாயசம், அப்பளம்னு விருந்து வைப்பாய்ங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• முறைச்சுப் பார்த்துக்கிட்டே திரிஞ்ச சீனியர்கள் ஒரு வாரம் கேப் விட்டு, அதுக்கு முந்துன வருஷ சீனியர்கள் பண்ணின பாவத்துக்குப் பிராயச்சித்தமா ராத்திரி முழுக்கத் தூங்கவிடாம ராகிங் பண்ணுவாய்ங்க. `பெயரைச் சொல்லும்போது இனிஷியலோட சொல்லணும்', `இ.சி.இ-ன்னு சுருக்கமாச் சொன்னா மூஞ்சியை உடைச்சிருவோம்... எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங்னு சொல்லு', `டேப்ல தண்ணியைத் திருகிக்கிட்டே பல்ப் டான்ஸ் ஆடு'ன்னு உசிரை வாங்குவாய்ங்க. இது கூடப் பரவாயில்ல... ஒரு இஞ்ச் குச்சியை ஒடிச்சுக் கையில் கொடுத்து அந்த ரூமோட பரப்பளவையும், சுற்றளவையும் பார்முலா போட்டுக் கணக்கெடுக்கச் சொல்லுவாய்ங்க. #இப்படியே போய்க்கிட்டுருந்தா சேகர் செத்துருவான் பார்த்துக்கங்க.

• இதுவும் போதாதுன்னு பெட்ஷீட்டைச் சுத்திக்கிட்டு ஐட்டம் டான்ஸ் ஆடச் சொல்றது, பிசினஸ் கேம் விளையாடிட்டு இருக்கும்போது அட்டையில் இருக்கிற ஐயாயிரம் ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்து கேன்டீன்ல போய் பிஸ்கட் பாக்கெட், பேரீச்சம்பழம்னு ஒரு லிஸ்ட்டையே  வாங்கிட்டு வரச் சொல்றதுனு இவிங்க பண்ற அலும்புகளைப் பின்னாட்களில் நினைச்சா கண்ணு எரியும். ஏன்னா... அந்த லிஸ்ட்ல ஸ்டேஃப்ரீ செக்யூர்லாம் சேர்த்து எழுதி வெச்சுருப்பாய்ங்க... #அடேய்களா... இதுக்கு நான் அழுறதா சிரிக்கிறதா..?

• ``ஹாஸ்டல் இட்லியும் பொண்ணுங்க மனசும் கிட்டத்தட்ட ஒண்ணு. ஏன்னா, ரெண்டுமே கல்லு மாதிரி''ன்னு யாரோ ஒரு பாதிக்கப்பட்ட ஜீவன் கதறிக்கதறி ஒரு புதுமொழியையே சொல்லிருக்கு. ஹாஸ்டலில் இருந்தவர்கள் எல்லாம் இட்லியைப் பார்த்து காண்டாகாத தருணங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பீங்கான் பூரி, எடைக்கல் வடை என களைகட்டும். எல்லா ஹாஸ்டலிலும் வாரத்தில் ஒருநாள் பொங்கலை பிரேக்ஃபாஸ்ட் மெனுவாக வெச்சு, நம்மளைச் சோம்பேறியாக்கிருவாய்ங்க. ஆனா, பசிக்கும் ருசிக்கும் வித்தியாசம் தெரியிறதே இந்த மாதிரி பாலிடால் தருணங்களில்தான். #யய்யாடி

ஹாஸ்டல் வாழ்க்கை எனும் அற்புதம்!

• ரூம் மேட் நண்பர்களுக்குள் நடக்கிற கான்வெர்சேஷன் இன்னும் பயங்கர காமெடியா இருக்கும். `என்னோட கை வைக்காத பனியனை எவண்டா எடுத்தது?' `அடேய்... உன்னோட பனியன்ங்கிறதாலதான் அதுக்குக் (யாரும்) `கை வைக்காத பனியன்'னு பேர் வந்திச்சே...'னு கலாய்ச்சிட்டு கூலா அவனோட டி-ஷர்ட்டையே எடுத்துப் போட்டுக்குவாய்ங்க. உள்ளாடைகளைத் தவிர எல்லாத் துணிகளும் பத்துப் பதினைந்து ரூம்களுக்குப் பார்சலாகும். கொடியில் தொங்கும் காட்டன் பேன்ட்டுகள் பூராவும், அழுக்காகி நிறம் மாறிய ஜீன்ஸ் பேன்ட்களை இனம் புரியாத சோகத்தோடு துக்கம் விசாரித்துக்கொண்டிருக்கும். #தட்... அந்த தெய்வத்துக்கே ஒரு சோதனைன்னா மொமென்ட்.

• ரூமில் இருக்கிறவிங்கல்லாம் ஆளுக்கு ஒரு கோடிங்ல புரோகிராம் ஆகியிருப்பாய்ங்க. கூடவே இருக்கிற ஒருத்தனுக்கு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேலதான் படிக்கிற மூட் வரும். நமக்கு லைட்டைப் போட்டிருந்தா தூக்கம் எட்டியே பார்க்காது. சரியா நாம தூங்கப் போகும்போது லைட்டைப் போட்டுப் படிக்க ஆரம்பிப்பான். அப்போவே பரீட்சை பயம் இன்னும் அதிகமாகி, `சரி’ காலையில் சீக்கிரம் எந்திரிச்சுப் படிக்கலாம்’னு ப்ளான் பண்ணி அலாரம் வெச்சுட்டுப் படுப்போம். ஆனா, நம்ம துரதிர்ஷ்டம்... முன்னாடி சொன்ன அந்தப் பயபுள்ளைக்கு யாராவது அலாரம் வெச்சா அதை ஆஃப் பண்ணிட்டுப் படுக்கிற வியாதியும் இருக்கும். #சோனமுத்தா... இந்த செமஸ்டரும் போச்சா?

• வாரத்துல ஒருமுறையாவது வீட்டுக்கு போன்போட்டு அம்மாகிட்டே ரெண்டு நிமிஷம் பேசுவோம். `ஒழுங்காப் படிக்கிறியா... இல்ல, பசங்களோட சேர்ந்து ஊர் சுத்துறியாடா?'ன்னு கேட்கையில் `இல்லம்மா'ன்னு என்னத்தையாவது சொல்லிச் சமாளிச்சுக்கிட்டு இருக்கும்போது வேணும்னே ஒரு பக்கி `டேய், தம்மைக் கீழ போடுடா.. வார்டன் வர்றாரு...'னு ஊருக்கே கேட்கிற மாதிரிக் கத்தும். நம்ம மேல வீட்டில் ஏற்கெனவே பலத்த நம்பிக்கை. இதுல நீ வேறயாடா? #நீங்கள்லாம் எங்கேயிருந்துடா வருவீங்க?

• எவனாவது ஒருத்தனுக்குப் பொறந்தநாள் வந்துட்டா போதும். அவன் வாழ்நாளில் அடுத்துப் பொறந்தநாள் கொண்டாடுறதைப் பத்தி யோசிக்கவே கூடாதுங்கிற அளவுக்கு வெச்சு செஞ்சிருவாய்ங்க. தூங்கிட்டு இருக்கிறவனைத் தூக்கிட்டுப் போய் ஏற்கெனவே ரெடியா வெச்சுருக்குற முட்டை, தக்காளி, ஷூ-பாலிஷ், அமிர்தாஞ்சன் கரைசலில் முக்கியெடுத்துக் குளிரில் நடுநடுங்கக் கும்மியெடுப்பார்கள். அவன்மேல் இருக்கிற ஒட்டுமொத்த வன்மத்தையும் ஒரே நாள்ல அடித்துத் துவைத்துத் தீர்த்துக்குவாய்ங்க. இதுக்காகவே ஹாலிவுட் படங்களிலெல்லாம் சீன் உருவிப் பறந்துபறந்து வந்து முதுகில் மொத்துவாய்ங்க. அந்த சம்பந்தப்பட்ட பர்த்டே பையன் அடுத்தநாள் காலேஜுக்கு வரும்போது ஆக்ஸிடென்ட்ல அரைகுறைக் காயத்தோடு தப்பிப் பிழைச்சவன்போல வீங்கிப்போய் வருவான். மார்கழி மாசம் பொறந்தவனுக்குல்லாம் அப்பவே மோட்சம்.  #மச்சீ... அந்த ட்ரீட்?

ஹாஸ்டல் வாழ்க்கை எனும் அற்புதம்!

• டி.வி ஹாலில் கிரிக்கெட் மேட்ச் பார்க்க விடலைங்கிறதுக்காக வார்டன் ரூமை வெளியில் பூட்டி வைக்கிறது, அவர் கீழே நடந்து போகும்போது மூணாவது மாடியிலிருந்து ஒரு பக்கெட் தண்ணியைத் தலையில் ஊத்திவிட்டுட்டு ஒளிஞ்சிக்கிறது, தீபாவளி சமயத்தில் யானை வெடியைக் கொளுத்தி வார்டன் ரூம் ஜன்னல் வழியா தூக்கி வீசுறது மாதிரியான அஹிம்சை வழி டார்ச்சர்களையும் கொடுத்து வார்டனை மண்டை காய வைப்பார்கள். #என்னா இருந்தாலும் பெரிய மனுஷனாச்சே..!

• ஒன்பது மணிக்குக் காலேஜ் ஆரம்பிக்கிதுன்னா எட்டரை மணிக்கு எந்திரிச்சு அரக்கப்பரக்கக் குளிச்சுக் கிளம்பி காலேஜுக்குப் போவானுக.  முதல் பீரியடுக்கே அட்டெண்டன்ஸ் போட்டுட்டு லாஸ்ட் பீரியட்ல எஸ் ஆவானுக. ஹாஸ்டல் வாழ் மக்களின் வரப்பிரசாதம் என்னன்னா, யுனிவர்சிட்டி பரீட்சைகள் நடக்கும்போதே வார்டனுக்குத் தெரியாமல் மிட் நைட்டில் சரக்கடிப்பது முதல் மிட் நைட் மசாலாப் படங்களைப் பார்ப்பது வரை ஜாலி பண்ணுவதுதான். இப்போ பத்தடி தூரத்துக்கு மணக்குற பாடி ஸ்பிரேவும், ஏ.சி ரூமில் வொயிட் காலர் வேலையுமா இருக்குறவங்கள்ல பாதிப்பேர், ஹாஸ்டல் வாழ்க்கையில, துவைக்காத துணிகளைப் போட்டுக்கிட்டு வாசனைக்காக பாண்ட்ஸ் பவுடரை உடம்பு பூராவும் தூவிக்கிட்டு கிளாஸுக்கு போனவய்ங்களாத்தான் இருப்பாய்ங்க.  #இதெல்லாம் பெருமையா? எரும எரும!

- விக்கி