கலாய்
Published:Updated:

டைரக்டர்களின் அன்டோல்டு ஸ்டோரி!

டைரக்டர்களின் அன்டோல்டு ஸ்டோரி!
பிரீமியம் ஸ்டோரி
News
டைரக்டர்களின் அன்டோல்டு ஸ்டோரி!

டைரக்டர்களின் அன்டோல்டு ஸ்டோரி!

டைரக்டர்களின் அன்டோல்டு ஸ்டோரி!

பேரரசு தன் படங்களோட டைட்டிலில் ஊர் பெயரைத்தான் வைப்பார். கெளதம்மேனன் படம்னா காபி ஷாப் சீன் கட்டாயம் வெச்சுப் படம் எடுப்பார்னு எல்லோருக்கும் தெரியும். அதுமாதிரி, இன்னும் சிலர் வேற மாதிரியான வித்தைகளையும் அவங்கவங்க படங்கள்ல இறக்கியிருக்காங்க. அதையெல்லாம் நோட் பண்ணலைனா, பண்ணிக்கோங்க!

‘கில்லி’, ‘தூள்’, ‘தில்’னு வெறித்தனமா இயக்குநர் தரணி கொடுத்த  ஹிட் படங்களையெல்லாம் பார்த்தா, அவர் பட ஹீரோக்களின் பெயர்கள் எல்லாம் முருகனுடைய பெயர்களாகத்தான் இருக்கு. ஆறுமுகம், சரவணவேலு, ஒஸ்தி வேலன், வேலு... இப்படி லிஸ்ட்டு நீண்டுக்கிட்டே போகுது.

டைரக்டர்களின் அன்டோல்டு ஸ்டோரி!

சுந்தர்.சி எடுக்குற பெரும்பாலான படங்கள் ஸ்க்ரீனே ஃபுல்லாகி ஆர்டிஸ்ட் திரையைக் கிழிச்சுக்கிட்டு வெளியில வந்துருவாங்களோனு நினைக்க வைக்கிற அளவுக்கு, கிடைக்கிற நடிகர்களையெல்லாம் வண்டியில ஏத்தியிருப்பார். அதுல, ‘அருணாச்சலம்’ தொடங்கி ‘அரண்மனை-2’ வரைக்கும் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்தான் இவரோட சாய்ஸே. பின்குறிப்பு : ரொம்பநாளா ரிலீஸ் ஆகாம, கிடப்புல இருக்குற ‘மதகஜராஜா’ படத்துலகூட டபுள் ஹீரோயின்தான்.

நம்ம டி.ஆர் ரைமிங்கா டயலாக் பேசுவார். க்ளாப் அடிக்கிறதுல தொடங்கி, படத்தோட எல்லா வேலைகளையும் அவரே தனி ஆளாகப் பண்ணிடுவார்னு மட்டும்தான் தெரியுமா மக்களே... இன்னொரு ஸ்பெஷலும் அவர்கிட்ட இருக்கு. அவரின் பல படங்களில் (‘வீராச்சாமி’யைத் தவிர) ‘தங்கைக்கோர் கீதம்’ தொடங்கி ‘காதல் அழிவதில்லை’ வரை... தலைப்பு எல்லாமே ஒன்பது எழுத்துகள் இருக்கிறமாதிரி வெச்சிருப்பார். ஃப்ரீயா இருந்தா செக் பண்ணிப்பாருங்க.

டைரக்டர்களின் அன்டோல்டு ஸ்டோரி!

எல்லோருக்கும் ஒண்ணு ஸ்பெஷலா இருந்தா, வெங்கட்பிரபுவுக்கு மட்டும் ரெண்டு விஷயம் ஸ்பெஷலா இருக்கு. மத்த இயக்குநர்களோட படங்களில் பிரேம்ஜி நடிச்சிருந்தாலும், அண்ணன் வெங்கட்பிரபுவின் அத்தனை படங்களிலும் பிரேம்ஜி இருப்பார்... இது விஷயம் ஒண்ணு.  வெங்கட்பிரபுவின் எல்லாப் படங்களுக்குமே இசை யுவன் ஷங்கர் ராஜா என்பது இரண்டாவது விஷயம்.

எல்லாப் படத்துலேயும் ஹீரோவோட மண்டையைக் கிரவுண்டா நினைச்சு விளையாடுவார் பாலா... `வேற என்னத்த பண்ணியிருக்கப்போறார்'னு கேட்டுட்டு கிராஸ் பண்ணலாம். ஆனா, அவரோட எல்லாப் படத்தையும் நல்லா நோட் பண்ணீங்கன்னா, ஏதாவது ஒரு பழைய சாமிப் பாட்டு பேக்கிரவுண்டுல ஓடிக்கிட்டே இருக்கும். ‘சேது’ படத்துல மனநலம் பாதிக்கப்பட்ட பொண்ணை டீக்கடையில் சிலபேர் பிரச்னை பண்ணும்போது, ‘பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா...’ பாட்டு ஓடும். ‘பிதாமகன்’ல ‘தக தக தகவென ஆடவா’ ரீமிக்ஸ் இருக்கும். ‘அவன் இவன்’ல போலீஸ்காரர்கள் நடத்தும் விழாவில் ‘பொம்ம பொம்மதா’ பாட்டு. ‘நான் கடவுள்’ல ‘மாதா உன் கோவிலில்’ பாட்டுனு தேடித் தேடி வெச்சிருப்பார்.

ஆனா, இதெல்லாம் பிளான் பண்ணிப் பண்றாங்களா, எதார்த்தமா நடக்குதானு அவங்களுக்குத்தான் தெரியும்!

- ஜெ.வி.பிரவீன்குமார்