Published:Updated:

சிறப்பா செய்வோம்ல..!

சிறப்பா செய்வோம்ல..!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறப்பா செய்வோம்ல..!

சிறப்பா செய்வோம்ல..!

சிறப்பா செய்வோம்ல..!

பொண்ணுங்களோட ரொம்ப நெருங்கிய சொந்தம் அதாவது அண்ணன், தம்பி, தங்கச்சி கல்யாணம்னா அவங்களைக் கையில பிடிக்க முடியாது. அந்தப் புள்ளைகளோட அலட்டல்களையும், பாவப்பட்ட அப்பாவி ஆண்களின் மனநிலையைப் பற்றியும் லைட்டா அலசித் துவைச்சித் தொங்கப்போடுவோம்...

 முதல்லே புடவை எடுக்குற வைபவம்.நிச்சயத்துக்கு ஒண்ணு, மாப்பிள்ளை அழைப்புக்கு ஒண்ணு, நலங்குக்கு ஒண்ணு, நாள் வைக்குறதுக்கு ஒண்ணு, கல்யாணத் துக்கு ஒண்ணு, ரிசப்ஷனுக்கு ஒண்ணு... `யய்யாடி... கல்யாணம் உனக்கா உன் உடன்பிறப்புக்கா'னு பசங்க கேட்டாங்க... செத்தாங்க. `ஏம்மா, ஏற்கெனவே எடுத்த புடவையெல்லாம்...'னு லோ வாய்ஸ்ல பட்டும்படாமலும் கேட்டா, `அதெல்லாம் அவுட் ஆஃப் ஃபேஷன்ங்க!'னு ஒரு வார்த்தைல முடிச்சுடுறது. நல்லவேளை நம்மளை அவுட் ஆஃப் ஃபேஷன்னு சொல்லாம போறாளேனு மனசை தேத்திக்கோங்க பாய்ஸ்!

 இதுல ஹைலைட் என்னான்னா... `நான் என்ன பொழுதன்னைக்குமா டிரெஸ் எடுக்குறேன்? தீபாவளி, பொங்கல் அம்புட்டுதானே?'னு கேட்டுட்டுக் கண்ணைக் கசக்குற டயலாக். `அப்போ அந்த அமேசான், ஃப்ளிப்கார்ட் காட்டுக்குள்ளலாம் நுழைஞ்சு வாங்கற டிரெஸ்லாம் பேபிமா?'னு சொல்லக்கூடாது. சொன்னீங்க... பழி வாங்குறேன்ற பேர்ல இன்னும் ரெண்டு சேலைக்கு பில்லைப் போட்டுடுவாங்க. ஓடிடுங்க!

சிறப்பா செய்வோம்ல..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்களுக்கு ஏதாவது வேணுமானு மேலோட்டமா கேட்பாங்க பாருங்க... ஆட்டோமோடிக்கா தலை வேணாம்னு ஆடிடும். `நீங்க இன்னும் நம்ம கல்யாணத்துக்கு எடுத்த கோட், ஷெர்வானிலாம் போடவே இல்ல. அன்னிக்கு போட்டதோட சரி'னு நக்கல் வேற பண்ணுவாங்க. அதெல்லாம் அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகலையாமானு கேட்க மனசு கெடந்து அடிச்சுக்கிட்டாலும் பசங்களுக்கு அதைத் தவிர வேறென்னத்தைக் கண்டுபிடிச்சானுக. கேவலம் டிரெஸ்லகூட முன்னேற்றம் இல்லயேப்பா. அப்புறம் எப்படி இந்த நாடு வல்லரசாகும்? சரி சரி... பொங்கக் கூடாது. பந்தி பரிமாறப் போறதுக்கு ஷெர்வானியும் கோட்டுமே அதிகம். மனைவி சொல்லே மந்திரம்!

 `ஷாப்பிங் ஃபுல்லா பண்ணிட்டு இவ்ளோ வாங்கிருக்கோம்ல கடைக்காரர்கிட்டே ட்ராவல் பேக் கேட்டு வாங்கிட்டு வாங்க'னு நாசூக்கா சண்டைக்கு அனுப்புறது. அவிங்க கொடுக்காம மூஞ்சியைக் காட்டுவாய்ங்க. இவ என்னடான்னா வாங்காம போனா துப்புவா. பாவம், பசங்க வாழ்க்கை ஒரே தொயரம்டா சாமி..!

 இப்படி பர்ச்சேஸ் ஆன ஆடைகள் டோராவின் பயணம் போல டெய்லர் - டிசைனர் - எம்ப்ராய்ட்ரர் எல்லாத்தையும் தாண்டி ஒரு வழியா வீடு வந்து சேர்ந்திடும்.

 அடுத்த ரவுண்டு பியூட்டி பார்லர்... பேஸ் க்ளீன் அப், ஃபேஷியல், பெடிக் க்யூர், மெடிக் க்யூர், ஹேர் ஸ்பா இதெல்லாம் சாம்பிள்... ஒன் வீக் முன்னாடி பண்ணிக்கிறது! மெயின் மேக்கப் கல்யாணத்தன்னிக்கு... அம்மம்மா..!

சிறப்பா செய்வோம்ல..!

மெகந்தினு ஒரு ஃபங்ஷன் வெச்சுக்கிட்டுக் கை முழுக்க மெகந்தியையும் வெச்சுக்கிட்டு `ஏங்க, தலை அரிக்குது, கொஞ்சம் சொறிஞ்சு விடுங்க... தாகம் எடுக்குது கொஞ்சம் தண்ணி கொடுங்க'னு ஆண்களை வேலை வாங்குறதெல்லாம் கும்பிபாகம் ஸ்டைல் பழிவாங்கல். இந்த நேரத்துல மாமனார் பார்த்தாலும் அவங்க மேல மரியாதை கூடும். அதுக்கும் வழி இல்ல. ஆனா ஒண்ணு... கை ஃபுல்லா மெகந்தி வெச்சுக்கிட்டு விரல்ல நெயில் பாலிஷ் போடலாம்னு கண்டுபிடிச்சவன் எவன்னு தெரிஞ்சான்... செத்தான். என்னடா(டி) டேஸ்ட் உங்களுக்கு?

 கல்யாணத்தன்னிக்கு ஹேர் மேக்கப், ஃபேஸ் மேக்கப்லாம் போட்டுக்கிட்டு செம்மையா டிரெஸ் பண்ணிக்கிட்டு பார்லர்ல இருந்து வெளியே வருவாங்க பாருங்க... சத்தியமா உங்க ஆளை உங்களுக்கே அடையாளம் தெரியாது. அவங்க ஜாடைல ஒரு பொண்ணுனு வேணா சொல்லிக்கலாம். அப்போ இருந்து `ஏங்க, நான் அழகா இருக்கேனானு' கேட்க ஆரம்பிக்கிறதுதான். கல்யாணம் முடிஞ்சு ஆல்பம் வர்ற வரையும் கேட்டுட்டே இருப்பாங்க. `அழகா இருக்கே’னு சொன்னாலும் நீங்களா சொல்லலைனு திட்டு விழும்.

மேக்-அப்தான் கொஞ்சம் அதிகம்னு சொன்னாலும் செத்தீங்க. அவ்வ்வ்..!

 அப்படியே லேசா செல்ஃபி, க்ரூப்பினு ஆரம்பிச்சுக் கடைசியா கல்யாணத்துக்கு வந்த போட்டோகிராஃபர் போதும்டா சாமின்னு கடையைச் சாத்துற வரைக்கும் போஸ் கொடுக்க அவங்களாலதான் முடியும்.

 வேடிக்கை பார்த்த நீங்களே ரொம்ப டயர்ட்டா இருப்பீங்க. ஆனா, அவங்க ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருப்பாங்க. எப்படின்னு கேட்கிறவன் ரத்தம் கக்கி சாவான். அப்போ நம்மள இழுத்துப் போட்டு ஒரு செல்ஃபி எடுத்து அதை ஃபேஸ்புக்ல புரொஃபைல் பிக்சரா வெச்சு லைக்ஸ் வாங்கினாதான் அவங்களுக்கு சாந்தி.

 ஆனா, இதெல்லாம் நடந்தாதானே அது ஒரு ஃபங்ஷன் நிறைவா இருக்கும். சோ... ஒவ்வொரு பொண்ணும் ஒவ்வொரு இம்சையும் தேவை மச்சி..!

(கரெக்டா என் வேலையைப் பார்த்துட்டேனா... சேம் சைடு ஜிங்குச்சா..!)

- ரூபிணி தேன்மொழி