Published:Updated:

அப்பாடக்கர் பதில்கள்!

அப்பாடக்கர் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அப்பாடக்கர் பதில்கள்!

அப்பாடக்கர் பதில்கள்!

அப்பாடக்கர் பதில்கள்!

உங்களுக்கு வந்ததிலேயே மிகவும் குழப்பமான கேள்வி எது? - தனசேகர்.

இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் தீவிரமடையும் முன்பு தே.மு.தி.க சார்பில் அலங்காநல்லூரில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய விஜயகாந்த்,``பீட்டா என்றால் இந்தியில் சின்னக் குழந்தை என்று அர்த்தம். அதனால்தான் அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்கள்'' என்று பேசியிருந்ததாக பேப்பரில் படித்தேன். (விஜயகாந்த் பேசுவதைப் புரிந்து அதை பேப்பரில் எழுதுபவர்களுக்குக் கண்டிப்பாக பாரத ரத்னா தர வேண்டும்!) எனக்குத் தெரிந்து `சோட்டா' என்றால்தான் இந்தியில் `சின்னக் குழந்தை' என்று அர்த்தம். கேப்டன் எப்பவுமே இப்படித்தானா, இப்படித்தான் எப்பவுமேவா?

பீட்டாவோட அட்ராசிட்டீஸ் இன்னும் எந்தளவுக்குப் போகும்? - முத்துராஜ்.

நாட்டை விட்டே போகும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அப்பாடக்கர் பதில்கள்!

சசிகலா `சின்னம்மா' எனில் தீபா..... (கோடிட்ட இடங்களை நிரப்புக) - அயன்புரம் சத்தியநாராயணன்.

ஒண்ணு விட்ட சின்னம்மா!

 பெண்களை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்? எப்படி? - மணிரத்னம்.

இப்படிக் காலங்காலமாகப் பெண்களை எப்படிப் பிரிக்கலாம் என்று வெட்டியாக யோசித்துக்கொண்டிருக்கும் ஆண்களைப் பொருட்படுத்தும் பெண்கள், பொருட்படுத்தாத பெண்கள் என்று ரெண்டு வகை.

அப்பாடக்கர் பதில்கள்!

சுப்ரமணியன் சுவாமி திருந்த வாய்ப்பே இல்லையா அப்பாடக்கர்? - முருகன்.

இதுக்கு ஒரு பழமொழி சொல்லலாம். ஆனா, நல்லாயிருக்காது.

சமீபத்தில் உங்களைப் பாதித்த சினிமா கேரக்டர் எது? - வேல்முருகன்.

'பைரவா' படத்தில் விஜய் கேரக்டர். கடைசி வரைக்கும் படத்தில் விஜய் கேரக்டர் பெயர் பைரவாவா இல்லையானு தெரியவே இல்லை பாஸ்!

அப்பாடக்கர் பதில்கள்!

`முரட்டுக்காளை'  படத்தை ரீமேக் செய்தால் இப்போது அதில் யார் நடிக்கலாம்? - நெப்போலியன்.

பாஸ், அதெல்லாம் ரீமேக் பண்ணி சுந்தர்.சி-யும் சினேகாவும் நடிச்சிட்டாங்க. அப்படி ஒரு படம் வந்துட்டுப் போனதே தெரியாததுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க பாவம்!

 இனோவா கார் வாங்குவது போல் கனவு வருகிறதே... என்னவா இருக்கும்? - அசோக்ராஜா.

கார் டயரைத் தொட்டுக் கும்பிடற மாதிரி கனவு வருதா?

அப்பாடக்கர் பதில்கள்!

 ஓ.பி.எஸ் ஓரங்கட்டப்படுவாரா? - அயன்புரம் சத்தியநாராயணன்.

அவர் நாற்காலியிலேயே ஓரமாத்தானே உட்காருவாரு!

வெளிநாட்டுக்கு வேலைக்குப் போறவங்களுக்குக் கிடைக்கிற நல்ல விஷயங்கள் என்ன? - பெரியசாமி.

பெரிய பெரிய கட்டடங்கள் முன்னால் செல்ஃபி!

 அரசு பஸ் - ஆம்னி பஸ்... என்ன வித்தியாசம்? - அயன்புரம் சத்தியநாராயணன்.

அரசுப் பேருந்தில் குலுக்கல் அதிகம்; ஆம்னி பஸ்ஸில் கலெக்‌ஷன் அதிகம்!

அப்பாடக்கர் பதில்கள்!

 டொனால்ட் ட்ரம்புக்கு அப்பாடக்கர் கூறும் அட்வைஸ் என்ன? - திலீபன்.

நான் சொல்றதுக்கு ரெடி. அவரை என் ஆபீஸ் கூட்டிட்டு வாங்க. அவர்கிட்டயே சொல்லிடுறேன்.

நல்லது - கெட்டது. இரண்டுக்கும் நச்னு ஒரு விளக்கம் கொடுங்க பாஸ்.. - காதர் மொய்தீன்.

நல்லதுக்கு ஆப்போசிட் கெட்டது; கெட்டதுக்கு ஆப்போசிட் நல்லது. இப்போ நீங்க கேள்வி கேட்டது நல்லதா... நான் பதில் சொன்னது நல்லதா?

 கோடி கோடியாய் கொள்ளையடிப்பவர்களுக்கு குற்றவுணர்ச்சியே இருக்காதா? - பரமசிவம்.

இருக்குமே, `கம்மியா சம்பாதிச்சிட்டோமோ?' என்ற குற்ற உணர்ச்சி!

அப்பாடக்கர் பதில்கள்!

 `இதெல்லாம் அநியாயம்' என சமீபத்தில் நீங்கள் நொந்துகொண்ட விஷயம் எதுங்க அப்பாடக்கர்? - கார்த்திக்.

துக்ளக் விழாவில் `ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு தமிழகத்தில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது'னு ரஜினி பேசிட்டாராமாம். உடனே சரத்குமாரோட சமத்துவ மக்கள் கட்சி அவருக்கு எதிரா ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க. `இருக்கோம்'னு காட்டிக்கிறதுக்காக என்ன வேணும்னாலும் பண்றதா?

ஒரே நேரத்துல ரெண்டு பொண்ணுங்களை லவ் பண்றது தப்பா? - விக்ரம் குமார்.

அது அந்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் தெரியுமா?

 வேலையே செய்யாம சந்தோஷமா இருக்க டிப்ஸ் கொடுங்க ப்ளீஸ்... - முல்லைவேந்தன்

கார்த்திக் கட்சியிலோ டி.ஆர் கட்சியிலோ சேர்ந்துடுங்க!

 புத்திசாலிகள் எப்படி இருக்கவேண்டும்? - அன்பு

அப்பாடக்கர் பதில்களைப் படித்தபிறகுமா உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம்?