பெயர் : குஷ்பு

பிறப்பு : 29 செப்டம்பர், 1970

வயது : 46

இருப்பிடம் : சென்னை

குஷ்பு என்பவர் திரைப்பட நடிகையும், அரசியல்வாதியும் ஆவார்.

திரை வாழ்க்கை :

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்திருக்கும் குஷ்புவை, அந்தக் கால காளையர் சமூகம் கனவுக் கன்னியாகக் கொண்டாடியது. ‘சின்னத்தம்பி’ படத்தில் இவர் கருப்புத்தாவணி கட்டிக்கொண்டு கண்ணாடி துண்டுகள் மேல் நடக்கும் காட்சியை இன்று பார்த்தால் கண்கள் வியர்க்கும். ‘வெற்றிவேல் சக்திவேல்’ படத்தில் வெட்டி பந்தா காட்டிவிட்டு பின்னர், மீன் குழம்பை பொளந்து கட்டும் காட்சியில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் குஷ்பு. ‘அம்மா வந்தாச்சு', `கேப்டன் மகள்', `சின்ன வாத்தியார்', `ஸ்டாலின்’ என அவர் நடித்த படங்களின் பெயர்கள் மூலமாகவே பின்னாளில் அரசியலுக்கு வரப்போவதை குறியீடாய் உணர்த்தியிருக்கிறார் குஷ்பு. இவர் ‘ஜாக்பாட்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் தவறான பதில் சொன்னால் ‘பாம்’ என ஒலி ஒலிக்கும். இதேபோல், நடன நிகழ்ச்சிகளுக்கும் நடுவராய் இருந்து மார்க் போட்டிருக்கிறார். ‘நாட்டாமை’ படத்தில் சம்முவத்தின் மனைவியாக நடித்த இவர், தற்போது தொலைக்காட்சிகளில் பஞ்சாயத்து நடத்தி வருகிறார்.

அரசியல் வாழ்க்கை :

தமிழகத்தின் தவிர்க்கமுடியாத அரசியல்வாதியாக வளர்ந்து வருகிறார் குஷ்பு. ‘அது அவரோட தனிப்பட்டக் கருத்து’ என காங்கிரஸ்காரர்களையும் சொல்லவைத்த பெருமை இவரையே சேரும். இவரைத் தமிழக காங்கிரஸ் தலைவராக ஆக்கினால் ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் சொல்லியிருக்கிறார்கள். இவர் உருவில் இந்திர காந்தியைப் பார்ப்பதாக சொல்லி பதறவைத்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இது அடுத்த தமிழக முதல்வரின் பக்கம் என்ற டேக் லைனோடு ‘வருங்காலத் தமிழகம் குஷ்பு, கொள்கையாளர் குஷ்பு குழுமம்’ என ஃபேஸ்புக்கில் பேஜ்கள் ஆரம்பித்து ரகளை செய்துவருகிறார்கள் இவரது ரசிகர்கள்.

சாதனைகள் :

தட்டு இட்லி, பொடி இட்லி, முறுக்கு இட்லி வரிசையில் ‘குஷ்பு’ இட்லி என ஒன்றும் இருக்கிறது. சாம்பார், சட்னி, இட்லி பொடி போன்றவற்றைத் தொட்டுச் சாப்பிடலாம். ‘கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ... கூடையில் என்ன பூ குஷ்பு என் குஷ்பு’ என இவரைப் பற்றி தமிழ் சினிமாவில் தனிப் பாடலே வந்துள்ளது. ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் ஜோதிடராக வரும் ‘ஃபைவ் ஸ்டார்’ கிருஷ்ணா, தாதா கஜேந்திரனிடம் ‘உங்க மனசுல ரெண்டு பூ நினைச்சுக்கோங்க. அதை நான் சரியா சொல்லிட்டேன்னா... என்கிட்ட ஜோசியம் பாருங்க’ எனச் சொல்லி சிலநேரம் கழித்து, ‘நீங்க மனசுல நினைச்சது மல்லிகைப்பூ, ரோஜாப்பூ’ என்பார். அதற்கு இல்லை எனத் தலையை ஆட்டிவிட்டு, ‘குஷ்பு, பிரபு’ என்பார். அதேபோல், ‘தவமாய் தவமிருந்து’ படத்தில் சேரனின் அண்ணன் மனைவி ‘என் மகளுக்கு குஷ்புனுதான் பேர் வைப்பேன்’ எனச் சரண்யாவிடம் சண்டை போடுவார். `கொட்டைப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டால் வாய் சிவக்கும்' எனத் தமிழ்கூறும் நல் உலகுக்கு தகவல் தந்ததே இவர்தான். எல்லாவற்றுக்கும் மேலாக, உலக அளவில் உயிரோடு இருப்பவருக்கு, அதுவும் ஒரு நடிகைக்குக் கோயில் கட்டவிருந்ததும் குஷ்புவுக்குத்தான்!

வேதனைகள் :

கோயில் கட்டிவிட்டார்கள், கும்பாபிஷேகம் நடத்திவிட்டார்கள் எனக் கிளம்பிய தகல்வகள் அம்புட்டும் பொய். உண்மையில், கோயில் கட்டப்படவே இல்லை. ப்ளான் பண்ணியிருக்காங்க, அப்புறம் விட்டுட்டாங்களாம். நான் சின்னப் புள்ளையாக இருந்தபோது ‘ஒத்த ரூபா தாரேன்...’ பாட்டுக்குத்தான் என்னை ஆடச் சொல்லி டைனிங் டேபிளில் ஏத்திவிட்டு கைக்கொட்டி சிரிப்பார்கள்... ஊரார் சிரிப்பார்கள்.

மேலும் படிக்க :

குஷ்பு இட்லி செய்வது எப்படி?
ஜாக் ஜாக் ஜாக்பாட்
புஷ்கு
நம்ம குடும்பம்

மேலும் பார்க்க :

வில்லு வில்லு வாரான் வில்லு
ராட்சஸ வெற்றி
நகரம் மறுபக்கம்
பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடல்

- ப.சூரியராஜ்