
``தலைவர் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து எதுல போடுவாராம்?’’
``முதல்ல கையெழுத்து போடக் கத்துக்குவாராம்!’’
- கு.வைரச்சந்திரன்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``எதுக்காக அந்த வெளிநாட்டுப் பயணிகள் அவங்க நாட்டுப் பிரச்னையை நம்ம பிரதமரைப் பார்த்துச் சொல்லணுங்கறாங்க?’’
``நம்ம பிரதமர் அவங்க நாட்டுக்கு அடிக்கடி போனதுனால அவருதான் அவங்க பிரதமர்னு நினைச்சிட்டிருக்காங்க!’’
- அஜித்

``கள்ள ஓட்டு ஒழிப்பு பற்றிய படமாம்.
உனக்கு டிக்கெட் கிடைச்சுதா?’’
``பிளாக்கில்தான்...’’
- எஸ். மோகன்

``என்னது... உன்னோட மனைவிக்கு எதிரா நீதிமன்றத்துல வழக்கு போட்டிருக்கியா, எதுக்கு?’’
``நாள் முழுக்கத் திட்டாமல், ராத்திரி 8 முதல் 10 மணி வரை மட்டும்தான் திட்டணும்னு உத்தரவு போடக் கோரிதான்!’’
- அதிரை என்.ஷஃபாத்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism