Published:Updated:

அவார்ட் கோஸ் டூ...

அவார்ட் கோஸ் டூ...
பிரீமியம் ஸ்டோரி
அவார்ட் கோஸ் டூ...

நம் பிரதமர், ஆற்று, ஆற்றென உரையாற்றியதில் ஆத்மநிர்பார்ன்கிற வார்த்தை கிடைச்சதுதான் மிச்சம்.

அவார்ட் கோஸ் டூ...

நம் பிரதமர், ஆற்று, ஆற்றென உரையாற்றியதில் ஆத்மநிர்பார்ன்கிற வார்த்தை கிடைச்சதுதான் மிச்சம்.

Published:Updated:
அவார்ட் கோஸ் டூ...
பிரீமியம் ஸ்டோரி
அவார்ட் கோஸ் டூ...
`இடுக்கன் வருங்கால் நகுக’ன்னு சொன்ன வள்ளுவரோட ஜடா முடியும், படா தாடியும் பார்க்கும்போது இந்தத் தத்துவத்தையும் வாரக்கணக்கில் க்வாரன்டீன்ல இருந்து அனுபவிச்சுதான் சொல்லிருப்பார்னு தோணுது. ஆகையால், சிரிச்சமேனிக்கு சிலருக்கு விருது கொடுத்து ஜாலியா இருப்போம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அவார்ட் கோஸ் டூ...

சில்வர் ஸ்பூன் ஷில்பா குமார் அவார்டு :

இன்ச்சுக்கு இன்ச்சு தின்ஸா நடக்குற குன்ஸ்கார குமாருக்கு ஹோட்டல்னா டேபிள்ல சோறு, வீடுன்னா பிளேட்ல சோறுன்னு கெத்தா சுத்தின விஜய் பாஸ்கர்கிட்டே, எந்தப் பயபுள்ளையோ `அடுத்த முதல்வரே’ன்னு வித்தியாசமா கூவ, இனி மீடியா கிட்டேயும், மீம் க்ரியேட்டர்ஸ் கிட்டேயும் தனித்திரு, விலகியிரு, கம்முனு இருன்னு கடுப்பாகிடுச்சு மேலிடம். எவனோ எதையோ கொளுத்திவிட்டுப்போக, அதுக்கு அர்த்த ராத்திரியில் உட்கார்ந்து அர்த்தம் விளக்கிட்டு இருந்த விஜய பாஸ்கருக்கு `சில்வர் ஸ்பூன் ஷில்பா குமார் அவார்டை’ பெருமையுடன் வழங்குகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவார்ட் கோஸ் டூ...

விளக்கிய விளக்கே அவார்டு :

`நம்ம பிரதமர் ஒரு விஷயம் சொன்னார்னா, அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கு’ன்னு எட்டாயிரம் கோடி மக்கள், அஞ்சா யிரம் கோடி பங்குன்னு, பங்குனி வெயில் கொடுமையை நமக்கு உணர்த்தினாங்க மேடம் மதுவந்தி. நம் பிரதமர் 9 மணி 9 நிமிஷத்துக்கு விளக்கு ஏத்தச் சொன்னதன் காரணம், `9 ப்ளஸ் 9 பதினெட்டு, அந்நேரம் ஒரே கோட்ல நிக்கும் 9 ப்ளானெட்’னு ஏலியன் லெவல் விளக்கம் கொடுத்தாங்க. இப்படி எல்லாத்துக்கும் விளக்கத்தை எடுத்துட்டு வந்தவங்களுக்கு ‘விளக்கிய விளக்கே’ அவார்டு கொடுப் பதில் 8,000 கோடி மடங்கு ஆனந்தமடைகிறோம்.

அவார்ட் கோஸ் டூ...

சகலகலா சரக்கு மாஸ்டர் அவார்டு :

`திருப்பதிக்கே லட்டா, திருநெல்வேலிக்கா அல்வாவா, ஓ.பி.எஸ்ஸுக்கே மிக்சரா?’ன்கிற மாதிரி, புதுச்சேரி புள்ளிங் களுக்கே சரக்கு வித்து சாதனை பண்ணியிருக்கார் நம்ம முதல்வரய்யா. `மத்திய அரசாங்கம் நாம கேட்ட நிதி தரலை. எனக்கு வேற வழி தெரியலை’ன்னு கடையை லைட்டா திறந்து விட்டதுக்கே கலெக்‌ஷன் அள்ளிடுச்சு. குடிமக்களின் நன்மைக்காக பலர் குடியைக் கெடுக்கப்பார்த்தவர் என்கிற அவார்டுடன், புதுச்சேரிக்கே சரக்கு வித்து `சகலகலா சரக்குமாஸ்டர்’ அவார்டைக் கொடுப்பதில் பேருவகை கொள்கிறோம்.

வல்லவராயனே நாங்கள் வாழ வேண்டுமய்யா அவார்டு :

நம் பிரதமர், ஆற்று, ஆற்றென உரையாற்றியதில் ஆத்மநிர்பார்ன்கிற வார்த்தை கிடைச்சதுதான் மிச்சம். ஆனாலும், `தற்சார்பு, சுயசார்பு’ன்னு மான்ட் ப்ளாக் பேனாவில் எழுதிப்பார்த்து விட்டு, Seiko Astron வாட்சில் மணி பார்த்துப் பேசுறதுக் கெல்லாம் தனி தெகிரியம் வேணும். அப்படிப்பட்ட 56 இன்ச் புஜபலபலாக்ரம சாலியை ஒத்த ட்வீட்ல மிரளவிட்டாரு டிரம்ப். வெள்ளைக்கொடி எடுத்து சரண்டர் ஆனார் பிரதமர். அதே துணியைத்தான் லாண்டரிக்குக் கொடுத்து வாங்கி, சீனாவிடமும் காட்டப் போகிறார் என அரசல்புரசலாகக் கேள்விப்படு கிறோம். அதனால், நம் பிரதமருக்கு `வல்லவராயனே நாங்கள் வாழ வேண்டுமய்யா’ அவார்டைக் கொடுப்பதில் வாடி வதங்கி வருந்துகிறோம்.

அவார்ட் கோஸ் டூ...

அவார்டு கொடுய்யா டிரம்ப்பே அவார்டு :

`அமெரிக்க அதிபர்னாலே ஆயகலைகள் அறுபத்து நான்கையும் கரைச்சுக் குடிச்ச புத்திசாலியாகவும், சைடு வகுடு எடுத்த சரத்பாபுவைப்போல சாஃப்ட்டான ஆட்களாகவுமே இருப்பாங்கன்னு ஹாலிவுட் படங்கள் கட்டிவெச்ச கோட்டையில் ஓட்டையைப் போட்டிருக்கார் டிரம்ப். வேற்றுக்கிரக ஏலியன்கள் கிளம்பிவந்தாலும், சுதந்திர தேவி சிலைமீது ஏறி அதைச் சுட்டுவீழ்த்தும் அமெரிக்கா வைத்தான் பார்த்திருக்கிறோம். `அதெல்லாம் வெறும் பில்டப் புப்பா’ என அமெரிக்காவே புலம்புவதை டிரம்ப் மூலமாக தான் பார்க்கிறோம். அதனால், ‘அவார்டு கொடுய்யா டிரம்பே’ எனும் அவார்டை டிரம்புக்கு வழங்கி, விரைவிலேயே டிரம்புக்கு டிரம்ப் அவார்டு கொடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

அவார்ட் கோஸ் டூ...

சட்டை துவைச்சதும் நானே அவார்டு :

அரசின் எந்த அறிவிப்பு வந்தாலும், `என் கோரிக்கையை ஏற்று’ன்னு ஆரம்பிக்கிறார் அன்புமணியாகிய அவர். பழக்கதோஷத்துல டாஸ்மாக் கடை திறப்புக்கும், `என் கோரிக்கையை ஏற்று’ன்னு ஆரம்பிச்சுடுவாரோன்னு பா.ம.க பீதியில் இருந்த கேப்ல, வேற ஒருத்தர் தன் காலடித் தடத்தைப் பதிச்சார். பல பேருடைய சட்டபூர்வமான முயற்சிகளால் டாஸ்மாக் மூடப்பட்டதுக்கு, `தசாவதாரம்’ கேரக்டர்களுக்கு ஒற்றை ஆளா கிரெடிட் கார்டு ஸ்வைப் செய்வதுபோல, `MNM எம் எண்ணம்’னு கவிதை வாசிச்சார் கமல். `இப்படி லல்லி தோழியும் நானே, அந்தச் சட்டை துவைச்சதும் நானே’ என கேப்பில் புகுந்து அம்புட்டு கிரெடிட்டையும் அடிப்பவர் களுக்குத்தான் இந்த அவார்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism