Published:Updated:

பேட்ட பெரியப்பா... ராயப்பன் சித்தப்பா... தூக்குதுரை மாமா!

பேட்ட பெரியப்பா
பேட்ட பெரியப்பா

யாரு பெரியப்பா அந்த மங்களம்? அனுவுடைய அம்மாவா! அனு யாரு? அன்வ ருடைய காதலியா! அன்வர் யாரு? மாலிக் பையனா! மாலிக் யாரு?

துளசி... யெஸ் துளசி. துளசியைப் பார்த்தது தப்பு. பேசினது தப்பு. கூட டிக்டாக் பண்ணது தப்பு. அதைவிடப் பெரிய தப்பு, துளசி, அஸ்வகந்தா, அதிமதுரம்லாம் சேர்ந்த டீயைக் குடிச்சது. காலையில் இருந்து நிக்காமல் போயிட்டிருக்கு. யெஸ்... வாய்ஸ் ஓவரும்தான். நான் அரும்பொன். என்னை அரும்பொன்னு கூப்பிடுவாங்க. ஏன்னா, என் பெயர் அதுதான். என் தங்கைக்குக் கல்யாணம். அதான், பத்திரிகை கொடுக்க சின்ன டிராவல் போலாம்னு இருக்கேன். முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில், பின்னில் சில பத்திரிகைகள் மஞ்சப்பையில். வாழ்வில் ஒரு பயணம். இது முடிந்திட விடுவேனா...

நம்ம வீட்டுப் பிள்ளையைக் கிளிப்பிள்ளையா வளர்த்து, கீரிப்பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்குறதுதானே தமிழ் சினிமா வழக்கம். நானும் ஒரு தமிழ் சினிமா ஹீரோங்கிறதால, அதைத்தான் பண்ணப்போறேன். வடக்கூரான் மகன்தான் மாப்பிள்ளை. ஒரு ஜோடி போட்டுத்தான் நீங்கள் போனாலே, கண் பட்டுக் காய்ச்சல்தான் வாராதோ. என் கண்ணே பட்டுடக்கூடாது. கிளம்பிட்டேன் அதான், ஒரு லாங் டிரைவ்...

பெரியப்பா... மை டியர் பெரியப்பா. பேட்ட வேலன் பெரியப்பா. என் பைக் ஹேண்டில்பாரைப் பார்க்கும்போது, உங்க கம்பீரமான மீசைதான் ஞாபகத்துக்கு வருது. நீங்க வார்டனா இருக்குற காலேஜ் பக்கம் இண்டிகேட்டர் போட்டேன். எங்கே இருக்கீங்க பெரியப்பா? தேடிட்டிருக்கேன் நான். 'பேட்ட எங்கே'ன்னு காலேஜ்ல கேட்டா, 'குரோம்பேட்டையா, ராணிப்பேட்டையா'ன்னு கலாய்க்குறானுங்க. காளின்னு பெயரை மாத்திட்டீங்களாமே. 'காளி எங்கே'ன்னு கேட்டால், 'தக்காளியா'ன்னு கண்டிப்பா கலாய்ப்பானுங்க. தாங்கமுடியாது பெரியப்பா. இதோ உங்களைப் பார்த்துட்டேன். சேர்ல மல்லாக்கப் படுத்து, 'பாசமலர்' பாட்டு கேட்டுகிட்டு இருக்குறது நீங்கதானே. எனக்கு கிடார் வாசிக்கணும் போல இருக்கு. அந்த அழகான நாள்கள் மறுபடியும் ஞாபகத்துக்கு வருது பெரிய டாடி.

கண் கலங்கிட்டிருக்கேன் நான். இப்போ இரண்டு நிமிஷத்துல என்னைத் திரும்பிப் பார்ப்பீங்கன்னு மூணு நிமிஷம் முன்னாடியே முடிவு பண்ணிட்டேன். யெஸ். நீங்க பார்த்துட்டீங்க! 'ஹாஹா... அரும்பொன்'னு என்னைக் கட்டிப்பிடிக்குறீங்க. லவ் யூ பெரியப்பா. 'துளசிக்குக் கல்யாணம். கண்டிப்பா வந்துடுங்க'ன்னு பத்திரிகையை நீட்டுறேன். 'கண்டிப்பாடா, அப்படியே நீயும் வந்துடு'ன்னு பதில் பத்திரிகையை நீட்டுறீங்க. என்னையும் கோமால தள்ளிடாதீங்க பெரியப்பா.

சுலைமான் டீக்கடை. கண்டிப்பா இங்கேதான் இருப்பார். தூக்குதுரை மாமா, நினைச்ச மாதிரியே உள்ளதான் இருக்கீங்க! என்னைப் பார்த்ததும் 'சுலைமான், மாப்ளைக்கு ஒரு ராகிமால்ட்'னு பாசமா ஆர்டர் பண்றீங்க. லவ் யூ மாமா!

நிகழும் மங்களகரமான வருடம், மங்களத்துக்கும் எனக்கும் திருமணம்னு ஏதோ சொல்றீங்க. பத்திரிகை வைக்கிறதுல உங்களுக்குத்தான் முதல் மரியாதைன்னு வந்தா, நீங்க இங்கே 'முதல் மரியாதை' படமே ஓட்டிட்டு இருக் கீங்களே. யாரு பெரியப்பா அந்த மங்களம்? அனுவுடைய அம்மாவா! அனு யாரு? அன்வ ருடைய காதலியா! அன்வர் யாரு? மாலிக் பையனா! மாலிக் யாரு? உங்களுக்குத் தம்பி முறையா! அப்படின்னா, மங்களம் உங்களுக்குத் தங்கச்சி முறைதானே வருவாங்க! எனக்குத் தலை சுத்துது பெரியப்பா. நான் உங்களைப் பார்க்கவந்தது தப்புதான். இதோ போறேன், ராயப்பன் சித்தப்பா கிட்டே. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/317x1PT

மைக்கேல் அண்ணன். நான் பாக்ஸர் மாதிரி, அவன் ஃபுட்பால் ப்ளேயர். அவனை மைக்கேல்னு சொல்றதைவிட, பிகில்னு சொன்னால், அதுவும் உன் பெயர் என்னன்னு கேட்கும்போது பிகில்னு சொன்னா... எக்ஸ்ட்ரா மூணு செகண்ட் ஊதிப்பார்ப்பாங்க. ஸாரி... உத்துப்பார்ப்பாங்க. அண்ணன்தான் இப்போ சித்தப்பாவைப் பார்த்துக்கிறான். ராயப்பன் சித்தப்பா. என் வண்டிச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அவர் குரல்தான் நியாபகத்துக்கு வருது. கப் முக்கியம் பிகிலு, கப் முக்கியம் பிகிலுன்னு மைக்கேல் அண்ணன் கிட்டே கரகரன்னு கத்திட்டே இருப்பார்...

'படக்'னு என்னைத் திரும்பிப் பார்த்துட்ட. "டேய், அரும்பொன்னூ..."ன்னு ஆசையா ஓடி வர்ற சித்தப்பா நீ, மைக்கேல் அண்ணன் உன்னைக் காப்பாத்த வர்றேன்னு மூணு மீட்டரை முப்பது நிமிஷமா ஓடிட்டு இருந்தாரே, அதைவிட வேகமாத்தான் சித்தப்பா ஓடிவர்றே. மூச்சிறைக்குது உனக்கு, இந்தா தண்ணி குடி. ஓடி வரும் போதுதான் பார்த்தேன், கால் ஒரு பக்கம் லைட்டா வாங்குதே ஏன் சித்தப்பா? அண்ணன்தான் உருட்டுக் கட்டையால வெளுத்து விட்ருச்சா? அதிர்ச்சியா இருக்கு சித்தப்பா...

பேட்ட பெரியப்பா... ராயப்பன் சித்தப்பா... தூக்குதுரை மாமா!

அடுத்து தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி. அங்கேதான் இருக்கார் தூக்குதுரை மாமா. என் வண்டியை எங்கேயாவது நடுரோட்ல நிப்பாட்டினா, மாமா ஞாபகம்தான் வரும். மாமா அப்படித்தான்! ஆக்‌ஷன் சீன் வந்துடுச்சுன்னா, ரோட்ல நிக்குற வண்டி எவன் வண்டின்னு பார்க்காம எடுத்துட்டுப் போயிடுவார். மாமா எடுக்கணும்னே சாவியோட நிப்பாட்டிட்டுப் போவானுங்க போல. அந்த இலுமினாட்டிங்களைத்தான் தேடிட்டிருக்கேன். தேனி வந்துட்டேன். எங்கேன்னு போய் அவரைத் தேடுறது. டீ குடிச்சு குடிச்சுதான் அவருக்கு முடி நரைச்சதுன்னு 'வீரம்' டீக்கடை பாய் சொல்லியிருக்கார். கண்டிப்பா, இங்கே ஏதாவது பாய் டீக்கடையிலதான் மாமா இருக்கணும்.

இதோ இருக்கே, சுலைமான் டீக்கடை. கண்டிப்பா இங்கேதான் இருப்பார். தூக்குதுரை மாமா, நினைச்ச மாதிரியே உள்ளதான் இருக்கீங்க! என்னைப் பார்த்ததும் 'சுலைமான், மாப்ளைக்கு ஒரு ராகிமால்ட்'னு பாசமா ஆர்டர் பண்றீங்க. லவ் யூ மாமா! இதே லவ்வோட, துளசி கல்யாணத்துக்கும் வந்துடணும்னு பத்திரிகையை நீட்டுறேன். பத்திரிகையை வாங்கிட்டு பரணை எதுக்கு மாமா, வெறிச்சுப் பார்த்துட்டு இருக்கீங்க? ஓ ஃபீலிங்ஸா?!

யெஸ்... இன்னைக்குத்தான் கல்யாணம். முதலமைச்சர் நந்த கோபாலன் குமரன் தலைமையில்தான் கல்யாணம் நடக்கப் போகுது. கல்யாண மண்டபம் முழுக்க சிவப்பு, பச்சை லைட் எஃபெக்ட் இருக்கணும்னு அடம் பிடிக்கிறார் அவர். ஏதோ, காட்சி மொழி, குறியீடாம்!

- இதெல்லாம் என்ன? முழு மேட்டரா இல்லாம பிட்டுப் பிட்டா படிக்கும்போதே என்னன்னு சொல்ல முடியாத ஒரு ஃபீல் கொடுக்குதேன்னு உங்களுக்குத் தோணலாம். அப்படின்னா, ஆனந்த விகடன் இதழ்ல முழுசா படிச்சி முடிக்கும்போது... > நம்மவீட்டுக் கல்யாணம் https://www.vikatan.com/arts/humoursatire/namma-veettu-kalyanam-a-funny-story

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

பின் செல்ல