Published:Updated:

கிளம்பிட்டாங்கய்யா!

கிளம்பிட்டாங்கய்யா!
பிரீமியம் ஸ்டோரி
கிளம்பிட்டாங்கய்யா!

டீக்கடையில போய் நின்னா இப்பல்லாம் ‘சுகர் ஜாஸ்தியா ஒரு டீ!’ எனச் சொல்லி ஒருவித பெருமிதப் பார்வை பார்க்கிறார்கள் சில பூமர் அங்கிள்ஸ்.

கிளம்பிட்டாங்கய்யா!

டீக்கடையில போய் நின்னா இப்பல்லாம் ‘சுகர் ஜாஸ்தியா ஒரு டீ!’ எனச் சொல்லி ஒருவித பெருமிதப் பார்வை பார்க்கிறார்கள் சில பூமர் அங்கிள்ஸ்.

Published:Updated:
கிளம்பிட்டாங்கய்யா!
பிரீமியம் ஸ்டோரி
கிளம்பிட்டாங்கய்யா!

‘தக்கன பிழைக்கும்’ என்ற டார்வினின் கோட்பாட்டை அப்படியே தங்களோட நாடி நரம்புகள்ல ஏத்திக்கிட்டு அதை மட்டுமே வெறித்தனமா ஃபாலோ செய்ற ஆட்களைப் பார்த்திருக்கீங்களா? என்ன ஒண்ணு, இப்ப அது ஒரு பெருங்கூட்டமா மாறிடுச்சு. அப்படி தினமும் நாம பார்க்குற அந்த அட்டென்ஷன் சீக்கிங் ஆசாமிகளைப் பத்தி உங்களுக்குச் சொல்றேன்...கவனமாக் கேளுங்க!

* காலையில எழுந்ததும் சோஷியல் மீடியா டைம்லைன்ல கண்ணு மேய்ஞ்சா ‘இந்தப் பனங்கிழங்கு ஓவர் ரேட்டட், இஞ்சி டீ ஓவர் ரேட்டட், சாம்பார் இட்லி ஓவர் ரேட்டட்னு ஆரம்பிச்சு, அப்படியே ஏ.ஆர்.ரஹ்மான் ஓவர் ரேட்டட், இளையராஜா ஓவர் ரேட்டட் வரைக்கும் கொண்டு போய் நிறுத்தியிருக்கானுங்க. டேய் யார்ரா நீங்கெல்லாம்? உலகத்துல இருக்கிற எல்லாத்தையும் ‘ஓவர் ரேட்டட்’னு சொல்ற நீங்கதான் ஓவர் ரேட்டட்னு புரியுதா இல்லையா?

கிளம்பிட்டாங்கய்யா!
கிளம்பிட்டாங்கய்யா!

* அதே சோஷியல் மீடியால, ‘கொண்டாட மறந்துட்டோம்’ என்ற டேக்லைன்ல பழைய வித்யாவோட அம்சமான படங்களைஷேர் செஞ்சிருந்தாங்க. உடனே, கமலா காமேஷ், பபிதா, ஒய்.விஜயா எனப் பழைய நடிகைகள் போட்டோக்களைப் போட்டு ‘கொண்டாட மறந்துட்டோம்’ சீரிஸே ஆரம்பிச்சு கலாய்ச்சிருந்தாங்க. அதுல ஒரு ஆள் சீரியஸா அதே டேக்லைன்ல த்ரிஷா போட்டோவை ஷேர் செஞ்சிருந்தார். த்ரிஷாவைக் கொண்டாடாம என்னய்யா செஞ்சிட்டு இருந்தேன்னு கேட்கத் தோணுச்சு. சரியாத்தான் பேசறேனா?

* டீக்கடையில போய் நின்னா இப்பல்லாம் ‘சுகர் ஜாஸ்தியா ஒரு டீ!’ எனச் சொல்லி ஒருவித பெருமிதப் பார்வை பார்க்கிறார்கள் சில பூமர் அங்கிள்ஸ். அட, கவனிச்சிட்டோம்யா நீங்க பெரிய ஆளுதான்னு. கைகொடுக்கணும்போல இருக்கு போதுமா?

கிளம்பிட்டாங்கய்யா!
கிளம்பிட்டாங்கய்யா!

* ஃபிட்னெஸ் ஃப்ரீக்னு உங்களைப் பார்த்து வியக்கணும். செஞ்சிடுறோம். அதுக்காக ஃப்ளோரெசண்ட் கலர்ல டீசர்ட்- பெர்முடாஸப் போட்டுட்டு வாக்கிங் போறதையும், சைக்ளிங் போறதையும் அப்படியே டீக்கடையில டீயும் வடையும் நீங்க வாய்ல அதக்கிக்கிற தைலாம் ரசிக்கணும்னா எப்படி? அப்புறம் சமோசாவும் கிரீன் டீயும் குடிக்கிற உங்களைலாம்... என்ன பண்றதுன்னு தெரியலையே!

* ட்ரெண்டிங்ல வியாபாரம் பார்க்குற வியாபாரக் காந்தமாவே இருந்துட்டுப் போங்க. அதுக்காக மாஸ்க் பரோட்டா, மஞ்சப்பை இடியாப்பம்னு உங்க ஓட்டல் மெனுவுல புது ஐட்டங்களைச் சேர்த்துக்கிறதெல்லாம் எப்படி இருக்கு தெரியுமா? ‘ஜென்டில்மேன்’ படத்துல செந்தில் போடுற முக்கோண அப்பளம் மாதிரிதான் இருக்கு!

அப்புறம் மார்க்கெட்டிங் தந்திரம்னு கறுப்புக் கலர்ல இட்லி, பச்சைக் கலர்ல பாயசம்னு ஆரம்பிச்சிடாதீங்க, கடை காலியாகிடும்!

கிளம்பிட்டாங்கய்யா!
கிளம்பிட்டாங்கய்யா!

* புல்லட்ல போனா எல்லோரும் திரும்பிப் பார்ப்பாங்கன்னு ராயல் என்ஃபீல்டா வாங்கி ஓட்டுனீங்க சரி... ஒழுங்கா சர்வீஸ் பண்ணி ஓட்ட முடிஞ்சதா உங்களால..? பெட்ரோல் காலியானா வண்டிய கவுத்தித் தூக்கி பெட்ரோல் பங்க் வரை ஓட்ட முடியுதா? இல்லை, உருட்டத்தான் முடியுதா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க. உங்களால புல்லட்டை ரசிச்சு ஓட்ட முடியுதா? பெட்ரோல் போட காசு பத்துதா? என்ன தலை தொங்கிடுச்சு?!

* ஒருத்தன் கொத்தா சிக்கிரக்கூடாதே. உடனே வெச்சு செஞ்சு எல்லா இடத்துலயும் அலற விட்ருவீங்களே. என்ன புரியலையா... யூ டியூப்ல எந்தப் படத்தோட பாட்டு டீஸர், ப்ரொமோ வந்தாலும் முதல் கமென்ட்டா, ‘படம் வெற்றிபெற ஸ்லீப்பிங் ஸ்டார் அஸ்வின் ரசிகர் மன்றத்தின் சார்பாக வாழ்த்துகள்!’ என்று கமென்ட் செய்யவும், அதை லைக்ஸ் செஞ்சு டாப் கமென்டாகக் கொண்டு வரவும் ஒரு கூட்டமே இருக்கு.

பாவம்யா விட்ருங்கய்யா...இப்ப அதிலயும் கிரியேட்டிவிட்டி லாரியை விட்டு ஏத்துறாய்ங்க பசங்க.

‘படம் வெற்றிபெற கமென்ட்டில் வாழ்த்துகள் தெரிவிக்கும் ரசிகர் மன்றங்கள் சார்பாக வாழ்த்துகள்!’ இதெப்படி இருக்கு?!

அதேபோல ஒரு யூடியூப் வீடியோவை அப்லோடு செஞ்ச பத்தாவது நிமிஷமே அந்த வீடியோல ‘3.02 நிமிஷத்துல பேட்டி கண்டவர் ஏப்பம் விட்டதை யார்லாம் கவனிச்சீங்க?’, ‘4.08 நிமிஷத்துல சுவத்துல வர்ற பல்லிக்கு வாலே இல்லை. எத்தனை பேரு அதைப் பார்த்தீங்க?’ என்று சொல்லும் அளவுக்கு பக்கா டீட்டெய்லிங் கமென்ட் செஞ்சு கதிகலங்க வைக்கிறீங்களே, உங்களுக்கு வேற வேலையே இல்லையா?

கிளம்பிட்டாங்கய்யா!
கிளம்பிட்டாங்கய்யா!

* பொண்ணுங்கள்ல ஒரு அரிய வகை இருக்காங்க. அல்ட்ரா லெஜண்ட்ஸ் வகையறா... ‘ஹா ஹா ஹாசினி’ போல எது பேசினாலும் முதல்ல சிரிச்சிட்டு அப்புறம் பேசுறதாகட்டும், ‘எனக்குப் புது மழை மண் வாசனை பிடிக்காது. ஆனா, மழைல நனைஞ்சுட்டே ஐஸ்க்ரீம் சாப்பிடப் பிடிக்கும். மல்லிகை வாசனை பிடிக்காது, ஆனா பெட்ரோல் வாசனை பிடிக்கும். குழந்தைங்கன்னா அலர்ஜி, பூனைக்குட்டி பிடிக்கும், நாய்க்குட்டி உவ்வேக். ஹ்ரித்திக்தான் என்னோட க்ரஷ், மீசை வெச்ச ஹீரோஸ் பிடிக்காது, பிங்க் கலர் பிடிக்காது, ஒயிட் பிடிக்கும். பிடிஎஸ் பிடிக்கும், ஜஸ்டின் பெய்பர் பிடிக்காது. குளிக்கிறதுனா அலர்ஜி, ஹாட் வாட்டர்லதான் குளிப்பேன்... இப்படிச் சொல்லிட்டே போகலாம். இதுல உனக்கு என்ன பிரச்னைன்னு கேக்குறீங்களா? இதுல பாதி சும்மா அட்டெண்ஷன் சீக்கிங்காகப் பொய் சொல்றது. நாங்க கேட்டோமா முருகேசா?

பசங்கள்லயும் சிலர் இருக்காங்க... ஹிப்ஹாப் ஆதிணா ரசிகனாக ‘கடைசியா நான் பார்த்த இங்கிலீஷ் படம் ‘டெனட்’ எனப் பீலா விட்டுட்டு!

உங்க பூசாரித்தனமும் வேணாம் பொங்கச் சோறும் வேணாம். ஆள விடுங்கய்யா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism