Published:Updated:

‘ஒன்ஸ்மோர் போலாமா டாடி?’

 ‘ஒன்ஸ்மோர் போலாமா டாடி?’
பிரீமியம் ஸ்டோரி
News
‘ஒன்ஸ்மோர் போலாமா டாடி?’

ஸ்கூலுக்கு பைக்கட்டை முதுகில் மாட்டிக்கொண்டு ஸ்போர்ட்ஸ் சைக்கிளில் கெத்தாய் வரும் இந்தக் குழந்தை.

ம்ம பிரபலங்கள் லாக்டௌனுக்குப் பிறகு லன்ச் பேக்கைத் தூக்கிட்டு பள்ளிக்கூடம் போறாங்கன்னு வெச்சுக்கங்க. ஆமாங்க... அதேதான்... தாறுமாறு தக்காளிச் சோறேதான்!

எடப்ஸ்: வகுப்புக்குள் நுழைந்ததும் குனிந்து தவழ்ந்து போய் தனக்கான பெஞ்சில் ஏறி உட்கார்ந்துகொள்வார். யாருக்கும் தன் சீட்டை விட்டுத் தர மாட்டார்.

க்ளாஸ் மிஸ் வந்ததும் பணிவாக வணக்கம் வைப்பார். ‘பழனிசாமி! சிக்ஸ்த் டேபிள் சொல்லு!’ என்று கேட்டதும், ‘மாண்புமிகு மிஸ்ஸின் ஆணைக்கிணங்க ஓராறு ஆறு ஈராறு பனிரெண்டு. மூவாறு பதினெட்டு... நாலாறு தெரியலைங்க!’ என்று கைகட்டி விரல்களை மடக்கியும் நீட்டியும் எண்ணிச் சொல்வார்.

எல்லோரையும் பின்னால் உட்காரச் சொல்லிவிட்டு தனியாகக் கைகட்டி உட்கார்ந் திருப்பார். தன்கூடவே உட்கார்ந்திருக்கும் பெஞ்ச்மேட் பன்னீர்செல்வத்தை பெஞ்சிலிருந்து கீழே தள்ளிவிட்டுச் சிரிக்கும் இந்த ரௌடி பேபி!

 ‘ஒன்ஸ்மோர் போலாமா டாடி?’

ஸ்டாலின்: ஸ்கூலுக்கு பைக்கட்டை முதுகில் மாட்டிக்கொண்டு ஸ்போர்ட்ஸ் சைக்கிளில் கெத்தாய் வரும் இந்தக் குழந்தை. ஆனால், யூனிபார்மை மறந்துவிட்டு டிராக்‌ஷூட்டில் வந்ததால் பி.டி மாஸ்டரிடம் அடிவாங்கும்.

ஸ்கூல் வாசலில் நெல்லிக்காய் விற்கும் ஆச்சி பக்கத்தில் போய் செல்ஃபி எடுத்துக்கொண்டு தள்ளிவிட்டு, ‘ஆக இந்த ஆச்சி விரைவில் கவிழும்!’ என்று கேலி செய்து திட்டு வாங்குவார்.

வாத்தியார் புள்ள மக்கு என யாரும் ‘பல்லுமேல நாக்கைப் போட்டு’ சொல்லிடக்கூடாது என்பதால், ‘உளங்கவர் ஓவியமே, உற்சாக காவியமே, ஓடை நறுமலரே, உடையவள் பொதுநலமே..’ என எல்லாக் கேள்விக்கும் ஒரே செய்யுளை ஒப்பிப்பார். உட்கார்ந்தால் முதல் பெஞ்ச், இல்லைனா நான் வெளில நின்னுக்கிறேன் என வெளிநடப்பு செய்து கோபத்தைப் பதிவு செய்வார். இதனால் கோபமான க்ளாஸ் டீச்சர் கடைசி வரை நீ வெளிலயே நில்லு எனச் சொல்ல, ‘ஆக... ஒன்றிணைவோம் வா!’, ‘தன்மானத்தை மீட்போம் வா!’ என லாஸ்ட் பெஞ்ச் பசங்களைக் கெஞ்சி வெளியில் வர செட் சேர்த்துக்கொண்டு நிற்பார்.

ரஜினி: முதல் ஆளாய் பவுடர் அப்பி, டக் இன் செய்து ஸ்டைலாய் ஸ்கூலுக்குப் போவார். ஆனால், ஸ்கூல் கேட்டின் முன் நின்றுகொண்டு ‘How is it?’ என உள்ளே போகமாட்டார்.

ஸ்கூல் வாட்ச்மேனிடம் ‘அண்ணே, நான் எப்போ போவேன் எப்படிப் போவேன்னு சொல்ல மாட்டேன். ஆனா, போக வேண்டிய நேரத்துக்குப் போவேன்!’ என பில்ட்-அப் கொடுப்பார். க்ளாஸ் டீச்சர் வந்து நாலு அப்பு அப்பி உள்ளே இழுத்துப் போகும்போதும் ‘கொரோனா கொரோனா... நான் வரமாட்டேன்!’ என அழுது அடம்பிடிப்பார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கமல்: 7 மணிக்கே க்ளாஸ் ரூமில் போய் உட்கார்ந்துகொள்வார். ‘ஆரம்பிக்கலாங்களா?’ என பக்கும்பகபகபக பக்கும் பகபகபக என தனியாக பர்பாமென்ஸ் பண்ணிக்கொண்டு இருப்பார். இவ்வளவு ஸ்மார்ட்டான பையன் பரீட்சை பேப்பரில் மட்டும் ‘அவுட் ஆப் சிலபஸ்’ பதில்களை எழுதி டீச்சர்களைத் திக்குமுக்காட வைப்பார். ‘பதில் தெரியலைன்னு சொல்லலை. தெரிஞ்சா நல்லா இருந்திருக்கும்னுதான் சொல்றேன்’ என்றெல்லாம் எழுதி காது திருகு வாங்குவார். இது எல்லாத்தையும்கூட மன்னிக்கலாம். பெயர் எழுதும் இடத்தில், ‘உள்ளும் புறமும் உங்கள் நான்’ என்று எழுதி வைத்துப் படுத்தினால் சும்மா விடுவாங்களா சுகுமாரி..?

சீமான்: தாமதமாக வகுப்புக்கு வருவார். ‘ஏன் டா லேட்டு?’ என்று கேட்டால், ‘ஒண்ணு மட்டும் நீங்க புரிஞ்சிக்கிடணும்... கமலா ஹாரிஸுக்கு தமிழ்நாட்டு அதிரசமும் சுவியமும் பிடிக்கும். அதை அஞ்சல் அனுப்பிவிட்டு வந்தேன். அவங்க எங்க குடும்ப நண்பர். இளையான்குடியில் பெண் எடுத்த துளசேந்திரபுரத்து ஒண்ணுவிட்ட சித்தப்பாவின் மூத்த தாரத்தின் இளைய மைத்துனன் மகன் நான்!’ என்பார்.

வகுப்பில் மாஸ்க் மாட்டி எளிய தமிழ்ப் பிள்ளையாய் உட்கார்ந்திருப்பார். ஆனால், நீதிபோதனை வகுப்பில் மட்டும் கதை சொல்லச் சொன்னால் ‘புஹுஹா’ எனச் சிரித்தபடி ‘கதை’ சொல்லி அப்ளாஸ் அள்ளுவார். ‘இத்தனை நாள்கள் ஊரடங்கில் நான் உங்களைப்போல வீட்டில் இல்லை. காட்டுக்குள் போனேன். புனுகுப்பூனைக்கறி சாப்பிட்டேன்!’ என, தன் காட்டு அனுபவத்தை அள்ளிவிட்டு காட்டு காட்டு எனக் காட்டுவார்.

அன்புமணி: அப்பா ராமதாஸ் பைக்கில் கொண்டுவந்து விட்டு டாட்டா காட்டிச் செல்வார்.’ டாடி டாடி!’ என அழும் அன்புமணி யைத் தட்டிக்கொடுத்து உள்ளே அனுப்புவார் வாட்ச்மேன். ரொம்ப நாள்கள் கழித்து வகுப்புக்குள் நுழைந்ததால் முன்சீட்டுக்காக முண்டியடித்து சண்டை போடுவார். ‘நான் லீடராகணும் மிஸ். இல்லைனா அப்பா திட்டுவாரு மிஸ்!’ எனக் கண்ணைக் கசக்கி அழும்போது பார்க்கவே பாவமாக இருக்கும். அப்படியும் பதவி கிடைக்காவிட்டால் ‘ஒன்ஸ்மோர் போலாமா டாடி?’ என கேவிக் கேவி கதறுவார்.

 ‘ஒன்ஸ்மோர் போலாமா டாடி?’

குஷ்பு: இரட்டைச் சடையெல்லாம் போட்டு சமர்த்துக் கேர்ளாய் செம ஷார்ப்பாய் நேரத்துக்கு ஸ்கூலுக்குப் போவார் இந்தப் பாப்பா.

லாக்டௌனில் கொடுத்த ஹோம் ஒர்க் எல்லாவற்றையும் பக்காவாக முடித்துவிட்டதால் ஸ்பெஷல் பாராட்டெல்லாம் கிடைக்கும் என, புத்தகங்கள், நோட்டுகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வகுப்புக்குள் நுழையும் பிரில்லியன்ட் பாப்பா. ஆனால், இன்டெர்வெல்லில் தான் க்ளாஸ் மாறி வந்திருப்பதைக் கண்டுபிடிப் பார்கள்.‘ எங்கேயிருந்தா என்ன... பாடம் படிக்கிறேன்ல...அதானே முக்கியம்?’ என அப்பாவியாய்க் கேட்பார் இந்த அமுல்பேபி பாப்பா!

விஜய்: க்ளாஸ்மேட்ஸ் எல்லோரையும் ‘அண்ணா வணக்கங்ணா’ என்றபடி வகுப்புக்குள் நுழையும் விஜய்க்கு ஹோம் ஒர்க் என்றால்தான் பிரச்னை. ஆனால் நீங்கள் நினைப்பதுபோல் இல்லாமல் வேறமாதிரி பிரச்னை. தன் நோட்டில் விஜய்க்கே தெரியாமல் இஷ்டத்துக்குக் கிறுக்கி வைத்துவிடும் அப்பாவால்தான் பிரச்னை.

‘ஒருவாட்டி முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன். உன் பேச்சை நான் ஏன் கேட்கணும்?’ என்று கேட்டதால் அப்பா காண்டாகி வில்லத்தனமாய் இப்படிக் கிறுக்கி வைத்துவிடுவதாய் க்ளாஸ் டீச்சரிடம் சொல்லி அழ, ஒட்டுமொத்த வகுப்பும் சேர்ந்து அழும்.