Published:Updated:

பெயர்: கொரோனா - வயசு: 1

பெயர்: கொரோனா - வயசு: 1
பிரீமியம் ஸ்டோரி
பெயர்: கொரோனா - வயசு: 1

நாம ஸ்கூல் படிக்கிறப்போ ‘அடாத மழையிலும் லீவு விடாத ஸ்கூல்’ எனப் பெயரெடுத்த ஸ்கூல்ல படிச்சு நாம லீவு போடுறதுக்காக செத்துப்போன தாத்தா பாட்டிகளை சாகடிச்சோம்.

பெயர்: கொரோனா - வயசு: 1

நாம ஸ்கூல் படிக்கிறப்போ ‘அடாத மழையிலும் லீவு விடாத ஸ்கூல்’ எனப் பெயரெடுத்த ஸ்கூல்ல படிச்சு நாம லீவு போடுறதுக்காக செத்துப்போன தாத்தா பாட்டிகளை சாகடிச்சோம்.

Published:Updated:
பெயர்: கொரோனா - வயசு: 1
பிரீமியம் ஸ்டோரி
பெயர்: கொரோனா - வயசு: 1
கொரோனாவுக்குப் பிறந்தநாளாம். ஆமாம் மக்களே... சீனாவுல முதல் கொரோனா கேஸ் கண்டறிஞ்ச நவம்பர் 18-ஐத்தான் பிறந்தநாளா கொண்டாடுறானுக. வாங்க கொரோனாவால என்னெல்லாம் நம்ம வாழ்க்கையில மாற்றங்கள் நடந்திருக்குன்னு கொஞ்சம் ஜாலியா ரீவைண்ட் பண்ணிப் பார்ப்போம்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* 100 நாள் ஒரு வீட்டுக்குள்ள ஒண்ணா இருந்துட்டு வெளில வர்ற பிக்பாஸ் சீசன் 4 ஏன் கொஞ்சம் டல்லடிக்கிற மாதிரி தோணுது தெரியுமா..? நாம லாக்டௌனுக்குள்ள வீட்டுக்குள்ளேயே மனைவி(அ)கணவர் என்ற ஒரு ஜீவனை சமாளிச்சு வாழப் பழகிட்டோம். புரியலையா? ‘போங்க தம்பி, நாங்க அடிவாங்காத ஏரியாவே இல்லை’ மொமன்ட்!

* செல்போனைத் தொட்டாலே நம்மவீட்டுச் சுட்டிகளைத் திட்டுவோம். ‘மொபைல் போனைத் தொடுற வயசா இது?’ என்றெல்லாம் ஏசுவோம். ஆனால் என்ன நடந்துச்சு... ஆன்லைன் வகுப்புகளுக்காகப் புது ஆண்ட்ராய்டு போனை நாமளே வாங்கிக் கொடுத்து தேவுடு காத்தோம். சுட்டிகளும் காலையில அட்டெனன்ஸ் போட்டுட்டு மியூட் பண்ணிட்டு யூடியூப்ல குடியிருக்கிறதையும் கண்ணால பார்க்கிறோம். வாழ்க்கை ஒரு வட்டம்டா மொமன்ட்!

* நாம ஸ்கூல் படிக்கிறப்போ ‘அடாத மழையிலும் லீவு விடாத ஸ்கூல்’ எனப் பெயரெடுத்த ஸ்கூல்ல படிச்சு நாம லீவு போடுறதுக்காக செத்துப்போன தாத்தா பாட்டிகளை சாகடிச்சோம். நம்ம வீட்டுச் சுட்டிங்க ஸ்கூலுக்குப் போகாமலே ஆல் பாஸ் ஆகுறாங்க. போதாக்குறைக்கு கல்வியமைச்சர் ‘சிம்டம்’ செங்கோட்டையார் ஒரு அறிக்கை விட, அதை மறுத்து ‘பேண்டமிக்’ பழனிசாமியார் ஒரு அறிக்கை விட என நம்மைக் கிறுகிறுக்க வைத்தார்கள். நடுவில் பேய் இருக்கா இல்லையா என்கிற ரீதியில் ஸ்கூல் இருக்கா இல்லையா என நாம் கேட்டு ஓய்ந்தோம். கடைசியில் சுட்டிகளே வென்றார்கள். விட்டாச்சு லீவு! என்ன கொடுமை சரவணன் மொமன்ட்!

பெயர்: கொரோனா - வயசு: 1

* குடும்பமா தியேட்டருக்குப் போயி படம் பார்க்கிறதுலாம் கட் ஆனது பர்ஸுக்கு நலம் பயத்தது. OTT என்ற விர்ச்சுவல் வஸ்து எல்லோருக்கும் பரிச்சயமானது. கற்பூரம் காட்டுற FDFS என்ற விஷயத்தையே மறந்து நடுசாமத்துல லேப்டாப் முன்னாடி உட்கார்ந்து படம் பார்த்ததுலாம் தகத்தகாய தகராறு வரலாறு! ஆனால், விதி வலியது அல்லவா..! நம்ம கோடம்பாக்கத்து கோமான்களுக்கு என்ன கோபமோ, மொக்கைப்படங்களாக ரிலீஸ் செய்து Over Torture Talent என்று OTTக்குப் புது விளக்கம் கொடுத்து நம்மைக் கதறவைத்தார்கள்.

ஆடிய ஆட்டமென்ன மொமன்ட்!

* கெட்டதுல ஒரு நல்லது நடந்திருக்குன்னா அது நம்ம நடிகர் சிபிராஜுக்குத்தான். ரொம்பநாளா ஓடாத தியேட்டர்களின் வாசலில் நாம பார்த்த போஸ்டர் ‘வால்டர்’ படத்தோடதுதான். போனவாரம்தான் கட் அவுட்டையே கழட்டி வெச்சாங்க. இதெல்லாம் எவ்ளோ பெருமை தெரியுமா? ஆளே இல்ல பெல்லு மொமன்ட்!

* ஜூம் மீட், கூகுள் மீட் என நாம எல்லோருமே விர்ச்சுவல் ஆபீஸ் மீட்டிங்குக்குப் பழகிட்டோம். சரியா வாட்ஸ் அப்ல லின்க்கை க்ளிக் பண்ணி உள்ளே போறதுக்கு முந்தைய நிமிஷம்தான் முகத்தையே கழுவிட்டு வந்து உட்கார்ந்திருப்போம். நாம போடுற மீட்டிங்கை எட்டிப்பார்த்த மனைவியார், ‘ஏய்... இதைத்தான் ஆபீஸ்ல இம்புட்டுநாளா ஓட்டிக்கிட்டு கிடந்தியா?’ என ஒரு பார்வை பார்ப்பார் பாருங்க... டோட்டல் இமேஜ் டேமேஜ்! அது வலி, வேற டிப்பார்ட்மென்ட் மொமன்ட்!

* டிவி அட்ராசிட்டி தனி. ஷூட்டிங் தடை என்பதால் பழைய சீரியல் நெடியால் நம் வீட்டு ஹாலில் தும்மினோம். அரதப்பழைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ஷாக் மேல் ஷாக் கொடுத்தார்கள். ‘சிவகார்த்திகேயனுக்கு ஸ்டேண்ட்-அப் காமெடியனாக நல்ல எதிர்காலம் உண்டு’ என மதன் பாப்பும் தாடி பாலாஜியும் பாராட்டுப் பத்திரம் வாசித்த கொடுமையையெல்லாம் பார்க்க முடிந்தது! ஆணியே புடுங்க வேணாம் மொமன்ட்!

* `கோ கொரோனா... ஜெய் கொரோனா’ எனக் கூட்டம் கூட்டமாய் கொரோனாவைத் தட்டு எடுத்துட்டுப் போயி விரட்டினதெல்லாம் வேற லெவல் சம்பவம்தான். டிவியில் வெண்தாடியோடு மோடி பேச வந்தாலே பழைய சம்பவமெல்லாம் ஞாபகத்துக்கு வந்து கிலியானது போய், ‘இருக்கு, இன்னிக்கு என்டெர்டெய்ன்மென்ட் இருக்கு!’ என மீம் மெட்டீரியலாக்கி விளையாண்டது தனிக்கதை. நம்ம ஜி-யும் சளைக்காமல் கன்டென்ட் தந்தார். சூப்பர்ஜி சூப்பர்ஜி மொமன்ட்!

* `கொரோனாவால் மினிமலிஸ்ட்டிக்காக வாழப் பழகிக்கொண்டோம். ஒரே சாம்பாரை பிரிட்ஜில் வைத்து 3 நாள்கள் தரும் நம்ம வீட்டு சிக்கன சிரோண்மணிகளுக்கு இது கொண்டாட்டமாகிப்போனது. வாரம் முழுக்க ஒரே சாம்பார் தந்து, ‘வீட்டிலேயே இரு... வெறும் வயிற்றோடு இரு!’ என்றார்கள். வீட்டிலேயே கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டவர்கள் பலர், ‘மேலே எடுத்தா ரசம், கீழே எடுத்தா சாம்பாரு, அடியில எடுத்தா கூட்டு!’ என ஜனகராஜ் பார்முலாவுக்கு மாறிப்போனார்கள். கொரோனாவுக்கு முன்பே, ‘பொருளாதாரம் வளர வீட்டில் மட்டும் சாப்பிடுங்கள்... ஓட்டலில் சாப்பிடாதீர்கள்!’ என்று சொன்ன பொருளாதார மேதை நிர்மலா சீதாராமன் ஒரு தீர்க்கதரிசிதான். என்னா அடி மொமன்ட்!

பெயர்: கொரோனா - வயசு: 1

* சும்மாவே போன் எடுக்காத சோம்பேறி நண்பர்கள் மிஸ்டு கால்களை கொரோனா கணக்கில் எழுதினார்கள். ‘ஹோம் குவாரன்டைன்ல இருந்தேன் மச்சி!’ என்று டெம்ப்ளேட்டாக உருட்டினார்கள். 100 ரூபாய் கடன் கேட்டால், ‘பைசர் கம்பெனி வேக்ஸின் கண்டுபிடிக்கிற வரை நாம எக்கனாமிக்கலா ஸ்டேபிளா இருக்கணும்னு டெட்ராஸ் சொல்லியிருக்கார் மச்சி!’ என கந்தர்வக்கோட்டை சமஸ்தானமே ஆடிப்போகும் அளவுக்கு தினுசாய் உருட்டினார்கள். மாரியம்மன் இண்டியன் பேங்க் வடிவேலு கணக்காக அவய்ங்க புது பேட்டில் கிரிக்கெட் விளையாண்டதை பொடனிக்குப் பின்னாடி நின்னு பார்த்துட்டு வந்ததை நாமதான் சொல்லவே இல்லையே..! வலிக்கலையே மொமன்ட்!

* World Health Organisation (WHO) டைரக்டர் டெட்ராஸோட உருட்டுதான் வேற லெவல். வெறும் அவச்சொல்லாவே பேசிட்டு இருக்கார். இதுவரை 50க்கும் அதிகமான அறிக்கை விட்டிருக்கிறார் ‘Covid 19க்கு வேக்ஸின் அவ்ளோ ஈஸியா கண்டுபிடிக்க முடியாது’, ‘கொரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிச்சாலும் பிரயோஜனம் இல்லை’, ‘கொரோனா கிருமி முற்றிலும் அழிந்தாலும் இன்னொரு கிருமி வரும்’ என்றெல்லாம் இந்த ஒரு வருஷமும் உருட்டோ உருட்டு என நெகட்டிவாகவே பேசிக்கொண்டிருக்கிறார். WHO என்றால் World Hazardous Organisation என்று நினைத்துவிட்டார் போல..! யாராச்சும் தண்ணி வைங்கப்பா மொமன்ட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism