Published:Updated:

முதல்வரே... வரே... வரே!

முதல்வரே... வரே... வரே!
பிரீமியம் ஸ்டோரி
முதல்வரே... வரே... வரே!

பொழுது சாய்ஞ்சு கோட்டையில இருந்து வீட்டுக்குப் போறப்போகூட தினமும் பீச் விசிட், எழிலகம் விசிட், சென்னைப் பல்கலைக்கழக விசிட்னு பட்டையைக் கிளப்புவாரு

முதல்வரே... வரே... வரே!

பொழுது சாய்ஞ்சு கோட்டையில இருந்து வீட்டுக்குப் போறப்போகூட தினமும் பீச் விசிட், எழிலகம் விசிட், சென்னைப் பல்கலைக்கழக விசிட்னு பட்டையைக் கிளப்புவாரு

Published:Updated:
முதல்வரே... வரே... வரே!
பிரீமியம் ஸ்டோரி
முதல்வரே... வரே... வரே!

'ஸ்டாலின்தான் வந்துட்டாரு... விடியல் கொஞ்சம் தந்துட்டாரு’ன்னு ‘பொன்னாரம் பூவாரம்’ பாட்டு மாதிரி ஹம் பண்ணி உலாத்திட்டு இருக்காங்க உடன்பிறப்புகள். காரணம், அடுத்தடுத்து அறிக்கைகள், செயல் திட்டங்கள் எனக் களமாடிக்கிட்டிருக்காங்க ஸ்டாலின் அண்டு டீம். ‘இருந்தாலும் இவ்ளோ ஸ்மார்ட்டாவா வேலை பார்ப்பாங்க’, ‘இவ்ளோ பெர்ஃபெக்‌ஷன் தான் எங்கேயோ இடிக்குது’ன்னு இப்பவே ‘பாபநாசம் ஐ.ஜி’ போல சிலர் பேச ஆரம்பிச்சிட்டாங்க. போறபோக்கைப் பார்த்தா பிக்பாஸ் ஸ்டைல்ல ஸ்டாலின் இப்படிச் செஞ்சாலும் செய்வாரு, ஆச்சர்யமில்லை மக்களே!

முதல்வரே... வரே... வரே!

எந்தவொரு நீண்ட பயணமும் முதல் காலடியில் ஆரம்பிக்குதுன்னு சும்மாவா சொன்னாங்க. ‘விடிஞ்சிருச்சு வா!’ எனஸ்டாலின் காலை 10 மணிக்கு முதல் ஆளா தலைமைச் செயலகத்துக்குப் போய் ஆபீஸ்ல தன் சீட்டுல உட்கார்ந்து ஃபைல் பார்க்க ஆரம்பிச்சிடுவாரு. 10 மணிக்கு மேல 10:01-க்கு யார் வந்தாலும் அன்னிக்கு ஆப்சென்ட்தான். பயோமெட்ரிக்ல கரெக்ட்டா தம்ப் வைக்கலைனா சம்பளம் கட்னு உத்தரவு வேற போடுவாரு.

பொழுது சாய்ஞ்சு கோட்டையில இருந்து வீட்டுக்குப் போறப்போகூட தினமும் பீச் விசிட், எழிலகம் விசிட், சென்னைப் பல்கலைக்கழக விசிட்னு பட்டையைக் கிளப்புவாரு. ‘`பீச்சிலே சுண்டல் விற்கிற பரமக்குடி, கமுதி பகுதியைச் சேர்ந்த சிறுவர்களுக்காக `கடல் கடலை சிறார் மீட்புத்துறை’ எனத் தனித் துறை என் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஊரடங்கிலும் அடங்காமல் பீச்சுக்குக் காத்து வாங்க வரும் காதலர்களின் சுண்டல் செலவினங்களுக்காக மாதம் 400 ரூபாய் வழங்கப்படும். ‘குறுந்தொகை அகநானூற்றுத் திட்டம்’ என அதற்குப் பெயர் வைக்கப்படும் என்பதையும் மகிழ்வன்போடு அறிவிக்கிறேன்!” என்று சொன்னாலும் சொல்வார்.

முதல்வரே... வரே... வரே!

‘முதல்வன்’ படத்தில் வருவதுபோல ஜெமினி பாலத்தின் அடியில் செம்மொழிப்பூங்காவில் உட்கார்ந்து வாரத்தில் ஒருநாள் ‘என்ன வேணுமோ கேளுங்க!’ மக்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை கலைஞர் டிவியில் ரெக்கார்டட் புரோக்ராமாகச் செய்வார். பெரும்பாலும் ஹாட்லைனில், ‘ஸ்டாலின் தாத்தா உங்களோடு நான் செல்ஃபி எடுக்கணும்!’ என்ற கொட்டாம்பட்டி கோவிந்தசாமி மகன் சுரேஷின் கோரிக்கையை நிறைவேற்றவோ, ‘எனக்கு ஒரு கால்குலேட்டரும் ஜாமிட்ரி பாக்ஸும் வேணும் சி.எம்!’ போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றவோ செய்வார். அதோடு லோக்கல் எம்.எல்.ஏ மூலம் பொருள்களைக் கொடுத்தனுப்பி வீடியோ கால் பேசுவதை மறக்காமல் நிகழ்ச்சியில் காட்டுவார். ‘ஸ்டாலின் தாத்தா வேண்டாம். ஸ்டாலின் அங்கிள்னு சொல்லு!’ என்று செல்லமாய் குட்டீஸிடம் ரெக்வெஸ்ட் வைப்பார்.

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற அண்ணா கொள்கையை அநியாயத்துக்கு ஃபாலோ செய்வார். இதற்காக எடப்பாடியை சட்டமன்றத்திலே புகழ்ந்து தீர்மானம் நிறைவேற்றி, எடப்பாடிக்கு வியர்க்க வைப்பார்.

முதல்வரே... வரே... வரே!

‘அண்ணன் எடப்பாடியார் 1,540 நாள்கள் முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்தவர். அதிக நாள்கள் தமிழகத்தை ஆண்டவர்களின் பட்டியலில் 5-ம் இடத்தில் காமராஜருக்கு அடுத்து, பக்தவச்சலத்தைவிட 250 நாள்கள் அதிகமாக உட்கார்ந்த பெருமைக்குச் சொந்தக்காரர் என்பதால், அவரைப் பாராட்டுவதில் உள்ளவாறே உளமாற பெருமைப்படுகிறேன்!’ என்று புள்ளிவிவரத்தோடு புகழ்வார்.

டெல்லிக்கு டஃப் கொடுக்கலைன்னா எப்படி? “மாநில சுயாட்சிப் பயணமாக நாளை தனி விமானத்தில் காட்மாண்டு செல்கிறேன். நேபாள அதிபரைச் சந்தித்து ஊரடங்கு இரண்டாம் அலையெல்லாம் முடிந்தபிறகு தமிழகத்திற்கு வர அழைப்பு விடுப்பதோடு, வரும்போது 200 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ‘தற்சார்புத் தமிழகம்’ திட்டத்துக்காகக் கொண்டு வரவிருக்கிறேன் என்பதைத் தெரிவிக்கிறேன்!” என வீடியோ அறிக்கை ஸ்டாலின் தந்தாலும் தரலாம். சிலிண்டர், தடுப்பூசி மட்டுமா..?“தமிழ்நாட்டுக்கு பெட்ரோல், டீசல் இறக்குமதிக்காக வளைகுடா நாடுகளோடு ஒப்பந்தம் போடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்துவருகிறோம். இதற்காக வருவாய்த்துறை அமைச்சர் தலைமையில் தனிக்குழு அமைத்திருக்கிறோம்!” என்று சொன்னாலும் ஆச்சர்யமில்லை.

முதல்வரே... வரே... வரே!

கல்வித்துறை... அது பள்ளிக் கல்வித்துறையோ உயர்கல்வித்துறையோ, அன்பில் மகேஷோ பொன்முடியோ, அடிக்கடி ஆன்லைன் வகுப்புகளுக்குள் பிரின்சிபல் ஐ.டி-யிலிருந்து இனி எட்டிப்பார்ப்பார்கள். சிறப்பாக வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கும், பாடமெடுக்க வைக்கும் நிர்வாகத்துக்கும் ஊக்கத்தொகை அறிவிக்கப்படும். ஆளே இல்லாமல் டீ ஆத்தி பீஸ் கறக்கும் கல்விநிலையங்களுக்கு சீல் வைக்கப்படும் என்ற உத்தரவும் வரும்.

இப்படி எல்லாத்துறைகளுமே சுறுசுறுப்பாகச் செயல்பட ஸ்டாலின் ஒரு திட்டம் கொண்டு வருவார். ‘சுறுசுறு ச.ம.உ’ என்ற அந்தத் திட்டத்தின்மூலம் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களில் யார் யாரெல்லாம் சுறுசுறுப்பாக இயங்குகிறார்களோ அவர்களில் பெஸ்ட்டாகச் செயல்படும் ஒருவருக்கு ‘ஸ்டார் ஆஃப் தி வீக் அவார்டு’ கொடுப்பார். அதிக ஸ்டார் அவார்டு வாங்குபவர்களுக்கு மந்திரி பதவி, துணை முதல்வர் பதவி என்று அறிவித்து எல்லோரையும் சுறுசுறு ச.ம.உ-க்களாக மாற்றிவைத்திடுவார்.

முதல்வரே... வரே... வரே!

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்களை மட்டும் சொந்தச் சித்தப்பாக்கள் போல சாஃப்ட்டாக விமர்சிக்கும் சீமான், தி.மு.க என்று வந்தால் மட்டும் கட்டுச்சோறு கட்டி வந்துவிமர்சிக்கிறாரல்லவா, அதற்காக அவரைக் கூல் பண்ண, ஸ்பெஷல் திட்டங்களைப் போடுவார். நா.த.க உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்குக் கட்டணமில்லா மின்சாரம், ரேஷன் எக்ஸ்ட்ரா அரிசி, இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை அறிவிப்பார். அதேபோல தப்புனா தட்டிக் கேப்பேன், முட்டியப் பேப்பேன் என்று டிவியை உடைத்த நம்மவர் கமலுக்கு புது எல்.இ.டி டிவி வாங்கிக் கொடுப்பதோடு, கமலுக்கு ஆயுட்கால இலவச சட்டமன்ற பாஸ் வழங்கி அவரது ஆசையை நிறைவேற்றி வைப்பார் ஸ்டாலின்.

முதல்வரே... வரே... வரே!

இதெல்லாம் சும்மா காமெடிக்குத்தான். உள்ளபடியே நல்ல பெயர் வாங்கி ஸ்டாலின் நல்லாட்சி தரவேண்டும் என்பதுதான் என் விருப்பமும். வுடு ஜூட்!