Published:Updated:

போன் ஒயர் பிஞ்சு லோன் வருது!

ரஜினி - கமல்
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி - கமல்

என்னோட தேவைக்குப் போக நான் வாங்குற பத்துப் பைசா அடுத்தவருடைய பாக்கெட்ல இருக்குறதுதான்மா... எனக்குப் பனையூர்ல பங்களா இருக்கு

போன் ஒயர் பிஞ்சு லோன் வருது!

என்னோட தேவைக்குப் போக நான் வாங்குற பத்துப் பைசா அடுத்தவருடைய பாக்கெட்ல இருக்குறதுதான்மா... எனக்குப் பனையூர்ல பங்களா இருக்கு

Published:Updated:
ரஜினி - கமல்
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி - கமல்

ஒரு நாளுக்குப் பத்துத் தடவையாவது பேங்கிலிருந்து ‘பெர்சனல் லோன் வேணுமா?’ என்ற அழைப்பை எதிர்கொள்ளாத மனிதர் இல்லை. தமிழ் சினிமா பிரபலங்களுக்கு அப்படி தொ(ல்)லைபேசி அழைப்பு வந்தால் எப்படி பதில் சொல்லி சமாளித்திருப்பார்கள்? சின்னதாய் ஒரு கற்பனை..!

போன் ஒயர் பிஞ்சு லோன் வருது!

ரஜினி

‘‘ஆண்டவன் கிருபையில எனக்கு சகல சௌபாக்கியங்களும் இருக்கு. மகாவதார் பாபாவோட பவரால பணத்தேவை எனக்கில்லை. அப்புறம் ஏன் நான் லோன் வாங்கணும்... என்னது, விருந்து கொடுக்க லோன் தர்றீங்களா? நான் சொன்ன எதையும் செய்யமாட்டேன்னுதான் என் ரசிகர்கள் எதிர்பார்ப்பாங்க. அவங்களை நான் ஏமாத்திடக் கூடாதில்லைய்யா? அதனாலே விருந்து இல்ல. வேணும்னா வாசல்ல வச்சு பேட்டி தர்றேன். அதுல சொல்ல ஒரு குட்டிக்கதைகூட இருக்கு.

அதாவது பாத்தீங்கன்னா... ஒரு ராஜா அழகான குதிரை வளர்த்து வந்தார். அந்தக் குதிரைக்குத் தான் இன்னும் அழகாகணும்னு ஆசை வந்துச்சு. பாபாகிட்ட வேண்டிக்கிச்சு. பாபா அந்தக் குதிரைக்கு ஏழு வரம் தந்தார். அந்த ஏழு வரம் என்னங்கிறது இப்போ முக்கியமில்ல. ஆனா அந்தக் குதிரை தன் தேவைக்கு உங்களை மாதிரி பேங்க்காரங்க கிட்ட வரலையே. கடவுள்கிட்டதானே போச்சு. நானும் அப்படித்தான். கடவுள் பார்த்துக்குவார்.

அப்படியே எனக்குப் பணம் வேணும்னாலும் நான் அதைத் தமிழ் மக்கள்கிட்ட கேப்பேன். அவங்க மாபெரும் புரட்சி செஞ்சு பணத்தைக் கொண்டுவந்து என்கிட்ட கொடுப்பாங்க. ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் கொடுத்தவங்கதானே அவங்க. பிரதியுபகாரமா நான் சிறுத்தை சிவாவோட இன்னொரு படத்துல நடிப்பேன். போதுமா தங்கம்ம்ம்ம்ம். ஹல்லோ... ஹல்லோ... போயிட்டீங்களா?’’

போன் ஒயர் பிஞ்சு லோன் வருது!

விஜய்

“என்னோட தேவைக்குப் போக நான் வாங்குற பத்துப் பைசா அடுத்தவருடைய பாக்கெட்ல இருக்குறதுதான்மா... எனக்குப் பனையூர்ல பங்களா இருக்கு. ஏற்கெனவே பக்கத்து ஏரியாவுக்கெல்லாம் செலவில்லாம சைக்கிள்ல போயி பெட்ரோல் காசை சேமிப்புல போட்டு வெச்சிருக்கேன்.

என்னது... ‘வரிகட்ட பணம் வேணுமா’வா? ஆமா... வரி கட்டுறேன்னுதானே சொன்னேன். அதுக்கு ஏன் அவர் அப்படிப் பேசணும்... நீதிபதினாலும் ஒரு நியாயம் வேணாமா? வாழ்க்கை ஒரு வட்டம்... இங்கே சம்பாரிக்குறவன் வரி கட்டுவான். வரி கட்டுறவன் சம்பாரிப்பான். எவ்வளவோ வரி கட்டிட்டேன். இதைக் கட்டமாட்டேனா? எனக்கு பெர்சனல் லோன்லாம் வேணாம். பொலிட்டிக்கல் லோன் மட்டும்தான் வேணும். ஏது... அதுக்கு என் அப்பாதான் ஜாமீன் கையெழுத்து போடணுமா? தந்தை மகற்காற்றும் உதவினு சொல்வாங்களே. அவர் எனக்குப் பண்ற பெரிய உதவியே, உதவி பண்ணாம இருக்கிறதுதான். உங்களுக்கே தெரியாம உங்க பேருல லோன் எடுத்து, அதுக்கு ஈ.எம்.ஐ மட்டும் உங்களைக் கட்ட வச்சா எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்கு எனக்கு! கடுப்பேத்துனா கம்முனு எல்லாம் இருக்கமாட்டேன். போனை வைங்க!”

போன் ஒயர் பிஞ்சு லோன் வருது!

கமல்

“வணக்கம்... எனக்குப் பணம் தேவையாக இருந்ததில்லை. தேவையாக இருந்தால் அது பணமாக இருக்க வேண்டும் என்ற அவசியமுமில்லை.

தேவை என்பதே குறைவின் நீட்சி என்பேன். சமயோசித புத்திக்கூர்மை உள்ளோர் யாவரும் தேவை பற்றிக் குறைப்பட்டுக்கொள்ள மாட்டார்கள். ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ என்று பாட்டுப்பாடி நடையைக் கட்டியிருப்பார்கள்.

இப்போது நீங்கள் கேட்கலாம், ‘பணத்தேவை இல்லையென்றால் ஏன் பிக்பாஸில் பங்குகொள்கிறீர்கள்’ என. உண்மையில் நான் செய்வது தொகுத்தல் அல்ல, தூது செல்லுதல். தமிழ்ச் சமூகத்தின் பேரங்கமான தூதிலக்கியத்தின் கடைசி மிச்சத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறேன். பாட்டியலைப் பற்றிப் பேசும்போதுதான் நினைவிற்கு வருகிறது. நான் தசாவதாரப் பாட்டியாக நடித்தபோதும் ‘பணம் முக்கியமில்லை, பந்தம்தான் முக்கியம்’ என்பதையே வலியுறுத்தியிருக்கிறேன். நீங்கள் அதை இன்னும் பத்தாண்டுகள் கழித்து ‘அன்றே சொன்னாரே அவர்’ எனச் சொல்லக்கூடும். சொல்ல மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சொல்லிக் காட்டுகிறேன்.

சரி... புரியும்படி சொல்கிறேன். பணம் என்பதைக் காகிதமாகப் பார்த்தால் அது அப்படித்தான். அதைப் பொருள் வாங்கும் கருவியாகப் பார்த்தால் நீங்கள் அந்த எந்திரத்தில் சிக்கிக்கொள்வீர்கள். எனக்குக் கருவி தேவையில்லை. காரணம், நானே இங்கு கருவிதான். நாகேஷ் சார் சொல்வார். ‘டே கமல், நீ கருவியா இரு...கருமியா இருக்காதே’ன்னு! நான் பெரும்புள்ளி கிடையாது. இந்த மில்க்கி வே கேல்க்ஸி எனும் பால்வெளிப் பிரபஞ்சத்தில் சிறு புள்ளி நான். அவ்வளவு ஏன்... நான் என்பதே நானல்ல... நான் இப்போது உங்கள் நான்!”

போன் ஒயர் பிஞ்சு லோன் வருது!

அஜித்

“ஹல்லோ, நான் இப்போ பைக் ரைடிங்ல இருக்கேன். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்ல இருக்கேன். ஓட்டிட்டே பேசுறது தப்பு... இருங்க சென்டர் ஸ்டேண்ட் போட்டுக்குறேன்... இப்ப சொல்லுங்க.

என்னது, ட்ராவல் லோன் தர்றீங்களா? நீங்க லோன் தருவீங்கன்னு நம்பியா நான் ட்ராவல் பண்ண ஆரம்பிச்சேன்? யாரும் யாரை நம்பியும் இல்ல. லோன் எல்லாம் ஹைவேல வர்ற ஸ்பீடு பிரேக்கர் மாதிரி. திடீர்னு நம்மள கவுத்துப் போட்ரும். சேமிப்பு அதே ஹைவேல வர்ற தாபா மாதிரி. தேவைப்படுற நேரத்துல பசியாத்தும். அட, இது நல்லாருக்கில்ல. இருங்க, வினோத்துக்கு கால் பண்ணி அடுத்த புரொமோவுக்கு வசனமா வைக்கச் சொல்றேன். நல்லா இருங்க. நானும் நல்லா இருக்கேன். டாட்டா!’’

போன் ஒயர் பிஞ்சு லோன் வருது!

விஜய் சேதுபதி

“ஒரு கதை சொல்லட்டா... ஒரு ஆள் மலைப்பாதைல போய்ட்டு இருந்தானாம். அப்போ ஒரு புலி அவனைத் துரத்துச்சாம். புலி துரத்துறதால கிலில அவன் அள்ளு விட்டு ஓடிட்டே இருக்க, பொடணிக்குப் பின்னாடி புலி அவனை விரட்டிட்டே வந்துச்சாம். என்னது? நீங்க லோன் கொடுக்க கால் பண்ணீங்களா? நான் ஏதோ அறிமுக இயக்குநர் கால்ஷீட் கேட்குறாருன்னு நினைச்சு சீன் சொல்ல ஆரம்பிச்சுட்டேனே. ஏங்க, எனக்கு லோன் வாங்குற அளவுக்கு எல்லாம் கஷ்டம் இல்லீங்க. அப்படியே பணத்தேவைன்னாலும், ‘நீங்கள் இப்படி செய்யலாமா விஜய் சேதுபதி?’ன்னு ஒருத்தர்விடாம எழுதின கடிதங்களே லட்சக்கணக்கான பக்கங்கள் இருக்கு. அதையெல்லாம் எடைக்குப் போட்டாலே என் பணத்தேவை சரியாகிடும்.

புரியலயா..? ஆஸ்ட்ரிச்சோட வலி ஒரு கங்காருவுக்குப் புரியாது. கங்காருவோட கஷ்டம் ஆஸ்ட்ரிச்சுக்குத் தெரியாது. இதுக்கு மேல சுத்தி வளைச்சு லோன் வேணாம்னு பேச எனக்கும் வராது. உங்களுக்கு ரெண்டு நிமிஷம் டைம் தர்றேன். போனை வச்சுடுங்க!”

போன் ஒயர் பிஞ்சு லோன் வருது!

தனுஷ்

“ந்தாரு... சும்மா சும்மா கால் பண்ணிட்டே இருந்தா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா. என்னைலாம் அப்படியே போக விட்ரணும். விருது வாங்கவே டைம் இல்லயாமா... இதுல லோன் வாங்கணுமாம்ல? பேங்க் ஆஃப் புருடாவையே பார்த்தவன் நானு. இனிமே இப்படி போன் பண்ணின, ஹாலிவுட் பீட்சால நம்மூர் சால்னா ஊத்தி சுருளியா மாறி உன்ன சாப்பிட வச்சிடுவேன். ஓடிப் போய்ரு.’’

போன் ஒயர் பிஞ்சு லோன் வருது!

சிவகார்த்திகேயன்

“அசலூரு ஆட்டக்காரியை வச்சு சங்கத்து சார்பா ஆடலும் பாடலும் போடத் தேடினப்போ ஒரு பயலும் லோன் தரல. இப்போ என் பட ஹீரோயின் மாதிரியே விரட்டி விரட்டி வர்றது. படத்துலயே வேலை வெட்டியில்லாத கேரக்டர்ல நான் இப்போ நடிக்கிறதில்ல. நிஜத்துல சிக்குவேனா என்ன? வேணும்னா சொல்லுங்க. ரெண்டு பேருமா சேர்ந்து வேற யாருக்காவது போய் பிளட் பேங்க்ல ரத்தம் லோனா தரலாம். வெச்சிரட்டாங்க?!”