Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஓவியம்: ரவி

ஜோக்ஸ்

ஓவியம்: ரவி

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
ஜோக்ஸ்

அவள் விகடன் 28.9.2021 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

சிறப்புப் பரிசு: தவா

“என்னடா... உங்கம்மா, தோசை வாங்கிட்டு வரச் சொன்னாளா?”

“இல்லை பாட்டி... அடுப்பு வாங்கிட்டு வரச் சொன்னாங்க. கேஸ் விலை ஏறிப்போச்சாம். தோசை சுட்டுட்டு திருப்பிக் கொடுத்திடுவாங்களாம்!’’

- ப.உமா மகேஸ்வரி, நெய்வேலி

ரொக்கப் பரிசு ரூ.250

“பாட்டி, நீ வடை சுடறதை வீடியோ எடுத்து யூடியூப்ல போடட்டா?’’

“அடப்போப்பா... நானே யூடியூப் பார்த்துதான் வடையே சுட்டுப் பழகினேன்!’’

- ஜோதிமணி, திருப்பூர்

ரொக்கப் பரிசு ரூ.250

``பாட்டி... தோசை EMI-ல கிடைக்குமா?’’

``கிடைக்கும் பேராண்டி கிரெடிட் கார்டு வச்சிருக்கியா?’’

- கவிதா பாலாஜி, சிதம்பரம்

ரொக்கப் பரிசு ரூ.250

“அதென்ன பாட்டி கொரோனா தோசை?”

“எண்ணெய்க்குப் பதிலா சானிடைஸர் ஊத்திச் சுடுவேன்!”

ஆர்.பூஜா, சென்னை - 1

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஜோக்ஸ்

அவள் விகடன் 28.9.2021 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஒவ்வொன்றுக்கும் ரொக்கப் பரிசு ரூ.250

``45-வது டிவிஷன் ராஜாஜி வீதி கதவு எண் 36-ல் வசிக்கும் பங்கஜம் அவர்களே, கதவு எண் 37-ல் வசிக்கும் கமலம் அவர்களே...’’

``ரெண்டே பேர் கூட்டத்துக்கு வந்ததால மரியாதையை பாருடி!’’

- மஹஜூதா, சேலம்

“என்னடீ... தலைவர் சமையல் குறிப்பு எல்லாம் சொல்றாரு?”

“அவரோட பேச்சைக் கேட்குற நாம ரெண்டு பேரும்கூட

எழுந்து போயிடக் கூடாதுன்னு நினைச்சுட்டார் போல!”

- எஸ்.ஏ.விஜயலஷ்மி, தஞ்சாவூர்

‘‘டைம் கிடைச்சா நம்ம தலைவர் ஓவரா புருடா விட ஆரம்பிச்சிடுவார்...’’

‘‘ஏன்?’’

‘‘நாங்க ஆட்சிக்கு வந்தால் மழைநீரை சேகரிக்க வங்காள விரிகுடாவைத் தூர் வாருவோம்னு உறுதியளிக்கிறேன்னு சொல்றாரு...’’

- ஜி.நிஷா, சென்னை-87

‘‘உங்கள் உடல்நலன்மீது அக்கறை கொண்டவன் என்பதால் சொல்கிறேன்... தயவுசெய்து சமூக இடைவெளிவிட்டு அமர்ந்து, என் பேச்சைக் கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.’’

- கே.பி.ஜெயந்தி, மதுரை