Published:Updated:

ஜோக்ஸ்

‘‘பேய்ப்படம் பார்க்கிற மாதிரி தெரியலே... பேய், படம் பார்க்கிற மாதிரி இருக்கு.’’

பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

சிறந்த ஜோக்குக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி:

அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 19.10.2021

அவள் விகடன் 12.10.2021 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே... ஒவ்வொன்றும் ரூ.250 பரிசு பெறுகிறது.
ஜோக்ஸ்

``என்னடி, ஏன் இந்த ஆட்டம்?’’

``எங்க காலேஜ்ல கொரோனா மூன்றாவது அலை வைரஸ் வரவேற்பு விழா நடந்துகிட்டிருக்கு, பார்ட்டி கொடுக்கிறோம். டிஸ்டர்ப் பண்ணாதே!’’

- @srividhya

``இப்படி போனுக்கு முன்னாடி ஆடுறதை மாப்பிள்ளை பார்த்தா மானமே போயிடும்டி..”

``நான் போன்ல ஆடுறதை பார்க்குறதே மாப்பிள்ளைதான்மா.”

- வே.வெண்ணிலா, அரூர்.

``என்னடி பண்றே?’’

``பேய்ப்படம் பார்க்கிறேன்மா!’’

‘‘பேய்ப்படம் பார்க்கிற மாதிரி தெரியலே... பேய், படம் பார்க்கிற மாதிரி இருக்கு.’’

- கே.பி.ஜெயந்தி, மதுரை-1

“ஏண்டி... எவ்வளவு நேரமா பேய் டான்ஸை ஆடுவே?’’

``சீக்கிரம் முடி... நானும் போட்டியா பேய் டான்ஸ் ஆடி, யாருக்கு அதிகம் லைக்ஸ்னு பார்க்கணும்!”

- சுடர்கொடி, காட்பாடி.

ஜோக்ஸ்
அவள் விகடன் 12.10.2021 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

சிறப்புப் பரிசு - தவா

“இந்த ஸ்பெஷல் மாஸ்க் போலீஸ் இல்லேன்னா தாடைக்கு தானா இறங்கிடும். போலீஸைக் கண்டா தானா ஏறிடும்.’’

- வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.

பரிசு ரூ.250

“இதெல்லாம் புது மாஸ்க். மேலே மாட்டியிருக்கிறது யூஸ்டு மாஸ்க், பாதி விலைக்குக் குடுப்போம்!’’

- பி.ஜோதிமணி, திருப்பூர்.

பரிசு ரூ.250

“அந்த மாஸ்க் கடையில மட்டும் என்ன அவ்வளவு கூட்டம்?”

“மூன்றாம் அலை வரலைன்னா,

மாஸ்க்கை ரிட்டர்ன் பண்ணி காசு வாங்கிக்கலாமாம்!”

- எஸ்.சாந்தி, சென்னை-56

பரிசு ரூ.250

``அதென்ன ATM மாஸ்க்?’’

``Any Time Matching மாஸ்க் மேடம். போட்டுருக்குற டிரஸ் கலருக்கு மேட்ச்சா அதுவே கலர் மாறிடும்.’’

- ஆர்.கலாராணி, சென்னை-42

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு