Published:Updated:

ஜோக்ஸ்

“தாத்தா இந்த போனை எப்படி `ஆன்டிவைரஸு’ன்னு சொல்றீங்க?”

பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

மேலே உள்ள படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

சிறந்த ஜோக்குக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 1.11.2021

ஜோக்ஸ்

அவள் விகடன் 26.10.2021 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

சிறப்புப் பரிசு தவா

``ஃபோனை தண்ணில போட்டிங்களா தாத்தா!

``இல்ல சாம்பார்ல விழுந்துடிச்சு. எடுத்து தண்ணில கழுவினேன்!’’

- மஹஜூதா, சேலம்

ரூ.250

“போன்ல பேசறதுக்கு மாசாமாசம் காசு போடணும் தாத்தா. கால் போகலேன்னு ரிமோட் மாதிரி தொடையில் தட்டிப் பேசினா, இப்படித்தான் ரிப்பேர் ஆகும்!’’

- பா.ஜோதிமணி, திருப்பூர்

ரூ.250

“தாத்தா இந்த போனை எப்படி `ஆன்டிவைரஸு’ன்னு சொல்றீங்க?”

“அதுவாப்பா பக்கத்துல கொரோனா பேஷன்ட் வந்தா `கிங்கிங்’ன்னு அடிக்கும்பா.”

- @நூருல்ஹுதா

ரூ.250

``இந்த ஸ்மார்ட்போனுக்கு ஏன் இவ்வளவு விலை சொல்றீங்க?’’

``உங்களுக்குப் பணம் கடன் தந்தவங்க யாராவது போன் செஞ்சா தானாகவே கட் ஆயிடும்!’’

- ஆர்.கீதா, ஆலுவா, கேரளா

****

ஜோக்ஸ்

அவள் விகடன் 26.10.2021 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

சிறப்புப் பரிசு தவா

``நல்ல பேய்ப்படம்னு சொன்னாங்க... ஆனா, தியேட்டர்ல ஆளையே காணுமே...”

``அப்ப பின்னாடி உட்காந்திருக்குற மூணு பேரும் எனக்கு மட்டும்தான் தெரியறாங்களா? உன் கண்ணுக்குத் தெரியலையா?''

- சாமுண்டேஸ்வரி, திருச்சி

ரூ.250

``பாப்கார்ன்கூட தீர்ந்து போயிடுச்சு. இன்னும் இந்த மொக்கை படம் முடியவே மாட்டேங்குதே...’’

- வெ.ராஜம்மாள், அரூர்

ரூ.250

“பாப்கார்ன் டேஸ்ட் வேற மாதிரி இருக்கே..?”

“ஆமாம்... பட்டருக்கு பதிலா சானிடைசர் கலந்திருக்காங்க...”

- ஜீனத் யூசுப், அதிராம்பட்டினம்

ரூ.250

``என்னப்பா எந்தப் படம் பார்த் தாலும் விஜய் சேதுபதி படம் மாதிரியே தெரியுது!’’

``மாதிரியெல்லாம் இல்லை இது. விஜய் சேதுபதி படம்தான்!’’

- எஸ்.சுடர்விழி, புத்தூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு