Published:Updated:

ஜோக்ஸ்

தனியா படம் பார்க்க பயமா இருக்கு... போன்ல அப்படியே பேசிக்கிட்டே இரு

பிரீமியம் ஸ்டோரி

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

ஜோக்ஸ்

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

சிறந்த ஜோக்குக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 30.11.2021

அவள் விகடன் 23.11.2021 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

சிறப்புப் பரிசு - தவா

“நம்ம அவசரத்துக்கெல்லாம் வெளியே வர முடியாதுடா. முழுசா படம் பார்த்துட்டுதான் போகணும்னு ஆள் வெச்சு கண்காணிச்சுட்டு இருக்காங்க.” - மு.விஜயா முனிசாமி, பொய்கை கிராமம், வேலூர்

*****
பரிசு ரூ.250


“தனியா படம் பார்க்க பயமா இருக்கு... போன்ல அப்படியே பேசிக்கிட்டே இரு.” - ஷாந்தி, திருச்சி

*****

பரிசு ரூ.250

“தியேட்டர்ல இப்பதான் படம் போட்டு அரை மணி நேரம் ஆச்சு. இன்னும் ரெண்டு மணி நேரத்தில் மொத்த படத்தையும் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ்ல போட்டுடறேன். பார்த்துக்க...” - கி.செளமியா, வந்தவாசி

****

பரிசு ரூ.250

“இன்டர்வெல்லுக்கு அப்புறம் எங்க போயிட்டே டார்லிங்?’’

“மல்டிப்ளெக்ஸுக்கு வந்தாலே இது ஒரு தொல்லை. நீங்கதான் ஸ்கிரீன் மாறிப்போய், வேற படத்துல உட்கார்ந்திருக்கீங்க!’’ - பா.ஜோதிமணி, திருப்பூர்

அவள் விகடன் 23.11.2021 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

சிறப்புப் பரிசு தவா

“இன்னும் சிக்னல் போடாமல் நிறுத்தி இருக்காங்களே... வி.ஐ.பி யாரும் வாராங்களா?”

“இல்லீங்க. பக்கத்துல உள்ள ஏரியில இருந்து தண்ணீரைத் திறந்துவிட்டு இருக்காங்களாம்!” - சகிலா இப்ராஹிம், வேம்பார், தூத்துக்குடி

*****

ரூ.250

“ஏங்க உங்க வண்டி பெட்ரோல்ல ஓடுதா, டீசல்ல ஓடுதா?”

“சென்னையில எது ஓடினாலும் தண்ணியிலதான் ஓடணும்.” - ர.ரேவதி, விழுப்புரம்

****

ரூ.250

``இதுவரைக்கும் எண்ணி பத்து ஏரோபிளேன் போயிருச்சு... இன்னும் இந்த டிராஃபிக் அடங்க மாட்டேங்குதே.’’ - அ.நூருல் ஹுதா, சென்னை-32

****

ரூ.250

“ஆவடிக்கு வழி கேட்டுட்டு, கிட்டத்தட்ட அரக்கோணத்தை நெருங்கிட்டீங்க போல...”

“நானா போறேன்... தண்ணியில வண்டி தானா போகுது!” - ஜி.ஆர்.ராஜேந்திரன், சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு