Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

அவள் விகடன் 15.3.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“ஆபரேஷனுக்கு உங்களுக்கு ராசியான கலருலதான் கவுனு வேணும்னு அடம்பிடிச்சா எப்படி... படுங்க சார் ப்ளீஸ்...”

- பானு பெரியதம்பி, சேலம்-30

``வர வர
உங்க ஞாபக மறதி அதிகமாகிட்டே போகுது. நீங்க பேஷன்ட் இல்லை டாக்டர்...’’

- கி.செளமியா, வந்தவாசி

``திரும்பி உட்காருங்க... இழுத்து நல்லா மூச்சு விடுங்க... அப்படி மெதுவா படுங்க... இப்ப சொல்லுங்க...’’

``என் மகளுக்கு கல்யாணம் அழைப்பிதழ் கொடுக்க டாக்டரைப் பார்க்க வந்தேன்மா...’’

- சி.சாந்தி, ஸ்ரீபெரும்புதூர்.

“மயக்க மருந்து ஸ்டாக் இல்லை... நீங்க எதை பார்த்த மயக்கமாவீங்கன்னு டாக்டர் கேட்டுட்டு வரச் சொன்னார்.’’

- கே.ஆர்.சாந்தி, மதுரை-1

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவள் விகடன் 15.3.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“தேர்தல் முடிஞ்சு எல்லாரும் பதவிகூட ஏத்துகிட்டாச்சு. அன்னிக்கு ஓட்டுப்போடாததாலே, இன்னிக்குப் போடுவேன்னு அடம்பிடிக்கிறது எல்லாம் கொஞ்சம் ஓவர் தாத்தா!’’

- பா.ஜோதிமணி, திருப்பூர்

“யாரை தேடறீங்க தாத்தா...”

‘`இந்த கவுன்சிலர் தேர்தல்ல நாலு வருஷத்துக்கு முன்னாடி செத்துப்போன என் பொண்டாட்டி வந்து ஓட்டு போட்டுட்டு போனதா சொன்னாங்க... அது யாரு?”

- எம்.கலையரசி, சேலம்

“பாட்டி பிரச்னை பண்றதையெல்லாம் இங்க வந்து சொல்லக் கூடாது தாத்தா..!”

“நீதானம்மா ஓட்டு கேட்கும்போது, ‘என்ன பிரச்னைன்னாலும் எங்கிட்ட வந்து சொல்லுங்க... நான் தீர்த்து வைப்பேன்’னு சொன்னீங்க..!’’

- ப.சுதாலட்சுமி, கம்பம்

“தாத்தா நீங்க அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிச்சிருக்கீங்க உங்களுக்கு ஊருக்குள்ளே அவ்வளவு பலமா?

“அவ்வளவும் பணம்.''

- பி.ராஜேஸ்வரி, மதுரை-1

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

ஜோக்ஸ்

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது

ரொக்கப் பரிசு!

சிறந்த ஜோக்குக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 22.3.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism