Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

.அவள் விகடன் 26.4.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“பாட்டி உனக்கு டிவி பார்க்கிறதுதான் பொழுதுபோக்கு. சரி... அதுக்காக கரன்ட் போன பிறகும் இப்படி உட்கார்ந்து டிவியை பார்த்துக்கிட்டிருக்கியே... இது உனக்கே ஓவரா தெரியலே.''

- பி.பொன்காவியா, மதுரை-16

“விசிறியை வெச்சுக்கிட்டு என்ன பாட்டி செய்யுற?”

“மொட்டை மாடியில் காயப்போட்ட வடகத்தை காக்கா கொத்தாம இருக்க சிசிடிவி-யில் காவல் காக்குறேன்!”

- ப.உமாமகேஸ்வரி, நெய்வேலி

“எதுக்கு பாட்டி விசிறிகிட்டே டிவி பார்க்கிறே?”

“கரன்ட் இல்லேன்னாலும் என்னால் டிவி பார்க்காமல் இருக்க முடியாது!”

- க.விண்ணரசி, திருவாரூர்

“என் பெயர்ல ஏதோ படமாமே... போடும்மா டிவியைப் பார்ப்போம்...”

“ `புஷ்பா'னு பெயரை வெச்சுக்கிட்டு ரொம்பத்தான் பண்ணறே!”

- ஷாந்தி, திருச்சி-16

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவள் விகடன் 26.4.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

‘‘என்னம்மா... சாக்கு மூட்டைல காசு தர்றே..?”

``காய்கறி விற்கற விலைக்கு எல்லா உண்டியலையும் உடைச்சாதான் வேலைக்காகும் போல இருக்கு.’’

- சாலப்பாளையம் கற்பகம், ஈரோடு-9

‘‘கொசுறா கறிவேப்பிலைக்குப் பதிலா `கொஞ்சம் காய்கறியைத் தாங்க’ன்னு கேக்குறது உங்களுக்கே சரின்னு படுதாம்மா!”

- ஜி.மகாலெட்சுமி, தூத்துக்குடி

‘`ஏம்மா... உடைச்ச தேங்காய் கெட்டுப் போயிருந்தா ரிட்டர்ன் வாங்கிக்கிறேன்னு சொன்னது வாஸ்தவம்தான். அதுக்காக இப்படி ஒரு வருஷமா சேர்த்து வெச்சிருந்து மூட்டையா கொண்டு வந்து கொடுக்கறீங்களே, இது உங்களுக்கே நல்லாயிருக்கா...’’

- எம்.கலையரசி, சேலம்-7

“ஏம்ப்பா... சாக்கு நிறைய பணம் கொண்டு வந்திருக்கேன் காய்கறி கொடுப்பா...”

“சாக்குல பணத்தைக் கொண்டு வந்தீங்க, சரி... காய்கறி வாங்க சின்னதா பை கொண்டு வந்தீங்களா?!”

- ஆர்.இந்துமதி, மன்னார்குடி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது

ரொக்கப் பரிசு! சிறந்த ஜோக்குக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 3.5.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism