Published:Updated:

ஜோக்ஸ்: யுவர்ஸ் ஹியூமர்லி!

jokes
பிரீமியம் ஸ்டோரி
News
jokes

ஓவியங்கள்: ஜெயசூர்யா

இந்த ஓவியங்களை ஆனந்த விகடன் சமூகவலைதளங்களில் பதிவிட்டு, வாசகர்களிடம் ஜோக்ஸ் எழுதச் சொல்லியிருந்தோம். வந்து குவிந்ததில் சிறந்த ஸ்மைலிகள்...

“அம்மா... அப்படியே திட்டற மாதிரியே சூப்பரா பர்பாமன்ஸ் பண்ணிட்டியே. டிக் டாக்ல வீடியோ போட்டுட்டேன். லைக்ஸும் வியூவ்ஸும் அள்ளும்...’’

-வீரணம் சரவணன்

சரவணன். @saravankavi

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜோக்ஸ்: யுவர்ஸ் ஹியூமர்லி!

“அப்படி என்னடி சிரிப்பு உனக்கு?”

“நான் உங்களைப் பார்த்து சிரிக்கலே அத்தை. இந்த pdf பார்த்துதான் சிரிச்சேன். கோபக்கார, மாமியாரை அடக்கியாள, 10 ஐடியாக்கள்னு இதுல ரொம்ப அருமையா போட்டிருக்காங்க!”

வி.சி. கிருஷ்ணரத்னம் twitter

"வாட்ஸ் அப்ல வதந்தி பரப்பினா கிரிமினல் குற்றம், தெரியுமா?"

"அதனாலதான் உங்க போன்ல இருந்து மெசேஜ் அனுப்புறேன் அத்தை!"

-சிவம், திருச்சி

சிவம் @absivam

“செல்போன் கவரை வைச்சு ஏன் நோண்டிக்கிட்டு இருக்க?”

“செல்லை சார்ஜில் போட்டிருக்கேன். அது வரைக்கும்!”

Ravikumar Krishnasamy Facebook

மாமியார் : எலி வந்து சோபாவைச் சுரண்டறதுகூடத் தெரியாம அப்படியென்ன பிடிச்சு வெச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்துனு இருக்கே?

மருமகள் : அதுவொண்ணுமில்ல அத்தை... `தனிமையில் ஓர் எலியும் கிளியும்’ன்னு ஸ்டேட்டஸ் போட்டுனு இருக்கேன்.

பூநசி.மேதாவி @poonasimedhav

"அப்பா, என்னை ஆசீர்வாதம் செய்ங்க..."

"எதுக்குடா திடீர்னு?"

"வருடா வருடம் எக்ஸாம் இல்லாமலே பாஸ் பண்றதுக்கு!"

-பழநி

Palani Balaraman

@bpthilakavathi

``அப்பா, மழைக்கும் கொரோனாவுக்கும் என்ன வித்தியாசம்ப்பா?’’

``மகனே, அடுத்த 24மணிநேரம் லீவ் விட்டா அது மழைக்கு... அதே 24நாள் லீவ் விட்டா அது கொரோனாப்பா..

ஹர்ஷாபாStrawberryBanana

@Ntramesh_kpm

“அப்பா, வீட்டிலேயே 21 நாள்கள் இருக்கறதுக்கு ஏன் பயமா இருக்குன்னு சொல்றீங்க?’’

“21 நாள்கள் ஊரடங்கு முடிஞ்சு ஆபீஸ் போனாலும், இதே மாதிரி ஈஸி சேரில் உட்கார்ந்துகிட்டுதான் வேலை செய்யணும் என்று தோன்றும் என்பதால்தான்!’’

M Sriram

@sriram_m20

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``எப்படிப்பா அம்மா எவ்ளோ திட்டினாலும் கவலையேபடாம சந்தோசமாவே இருக்கிங்க?’’

``நான் சின்னப் பையனா இருக்கும்போதும் இதேதான் எங்க அப்பாகிட்ட அடிக்கடி கேப்பேன்.’’

அபிவீரன்

@Akku_Twitz twitter

“ஒன்னாங்கிளாசில் இருந்து ஒன்பதாங்கிளாஸ் வரை அனைவரும் பாஸாம்!”

“அப்போ, தங்கச்சிப் பாப்பாவை ஒன்னாங்கிளாஸ் சேர்க்கிறதுக்கு பதிலா, நேரா பத்தாங்கிளாஸ் சேர்த்திடலாம்ப்பா!”

Ravikumar Krishnasamy Facebook

“ரெண்டு பேரும் ஹோம் ஒர்க் பண்ணாம என்ன பண்றீங்க?”

“நாங்க பாஸாயிட்டோம் அப்பா! நீங்க ஒழுங்கா ஒர்க் ஃபிரம் ஹோம் செய்யுங்க. அப்போதான் கம்பெனிக்கு ‘பாஸ்’ ஆக முடியும்!”

Ravikumar Krishnasamy Facebook

``எதுக்குப்பா சிரிச்சிட்டே இருக்கீங்க?’’

``உங்கம்மா ஊருக்குப் போயிருக்குற நேரமா பார்த்து ஊரடங்கு உத்தரவு வந்திருக்குல்ல, அதனாலதான்.’’

ராமுவேல் கந்தசாமி twitter