பிரீமியம் ஸ்டோரி

"எனக்குப் பின்னால் ஒரு பெருங்கூட்டமே உள்ளது..!"

"ஆமாம் தலைவரே, மேடைக்கு முன்னாலதான் ஒரு பயலையும் காணோம்...!"

ஜோக்ஸ் - 2

- கோவை.நா.கி.பிரசாத்

"கடைசி வரிசையில உட்கார்ந்திருக்கிறவருக்கு நான் பேசறது கேட்குமா?"

"கேட்கக் கூடாதுன்னுதான் அவர் கடைசி வரிசைல போய் உட்கார்ந்திருக்கார் தலைவரே!"

ஜோக்ஸ் - 2

- அஜித்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"மன்னர் படைகளுடன் எங்கே சென்றிருக்கிறார்?"

"எதிரியின் சிறைச்சாலையில் உள்ள வெற்றிடத்தை நிரப்பப் போயிருக்கிறார்!"

ஜோக்ஸ் - 2

- கி.ரவிக்குமார்

"கதையை ஒரே வரியிலே சொல்லிடறேன் கேளுங்க சார்.."

"இந்த ஒரு வரிக்காகவா வெளிநாட்டுல ஒரு மாசம் தங்கி இருந்தே..?"

ஜோக்ஸ் - 2

- அதிரை யூசுப்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு