
News
"நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!"
“வேலைக்குச் சேர்ந்தப்ப பகல் டூட்டி மட்டும்தான்னு சொல்லிட்டு இப்போ நைட் ஷிப்ட் எல்லாம் கொடுத்துட்டாங்களாம். அதனால போராட்டம் பண்றாங்க”
“யாரு, கால் சென்டர் பசங்களா?”
“இல்லே. கவர்னருங்க..”

- ஆரவ்
"உங்க கட்சி எம்.எல்.ஏ-க்களைப் பணத்தாசை காட்டி அந்தக் கட்சி இழுத்துட்டதா சொல்லிட்டு கடைசீல நீங்களே அங்கே போய் சேர்ந்துட்டீங்களே..?"
"என்னைக்கூட அந்தப் பாவிங்க விட்டு வைக்கலைன்னா பார்த்துக்கோங்க...!”

- வி. ரேவதி, தஞ்சை
"எங்களை வெற்றி பெறச்செய்தால்..!"
"நாங்க தோற்கடிச்சவங்களை ஆட்சிக்குக் கொண்டு வருவீங்க, அப்படித்தானே?"

- கி.ரவிக்குமார்
"நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!"
"சொல்லிட்டேன் தலைவரே. திரும்பவும் கட்சியில சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க!"

- அஜித்