தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அவள் விகடன் 25.10.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம்.

வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“எல்லா கார்டுகளும் ஏற்கப்படும்னு நாங்க போர்டு போட்டது உண்மைதான். அதுக்குன்னு ரேஷன் கார்டுக்கு பெட்ரோல் போடுவீங்களான்னு நீங்க கேட்கறது ரொம்ப ஓவர் மேடம்!”

- எஸ்.விஜயலக்ஷ்மி, சென்னை-50

என்னய்யா... பெட்ரோல் போட்டும் வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது!”

“ஸாரிம்மா... எங்க பம்ப்ல ஏதோ மிஸ்டேக் இருந்துருக்கு... பெட்ரோல் விழுறதுக்கு பதிலா, உங்க ஸ்கூட்டர்ல இருந்ததை எல்லாம் உறிஞ்சிருச்சு!”

- சத்யா சோமசுந்தரம், சென்னை-129

“பெட்ரோல் விலையைக் கேட்டு வயிறு எரியுது. பேசாமல் எலெக்ட்ரிக் பைக் வாங்கிடலாம்னு பார்க்கிறேன்!”

``அப்படி வாங்கினீங்கன்னா பைக்கே எரியும் பரவாயில்லையா?!”

- க.விண்ணரசி, திருவாரூர்

``சீக்கிரம் இறங்கி வாம்மா பெட்ரோல் விலை கூடி விடப்போகுது.’’

- சுந்தரி காந்தி, சென்னை-56

அவள் விகடன் 25.10.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம்.

வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“நாம ரெண்டு பேரும் சண்டை போடுற வீடியோவை உன் ஐடி-யிலயும் என் ஐடி-யிலயும் தனித்தனியாக அப்லோடு செய்வோம். யாரோட வீடியோவுக்கு அதிக லைக் வருதோ அவங்களுக்கே

இந்த லேப்டாப்... ஓகேவா..?’’

- வெ.ராஜம்மாள், அரூர்

‘`எதுக்கு என்னை அடிக்கறே..?”

‘`ஆன்லைன் கிளாஸ் எடுக்க வந்த எங்க இந்தி டீச்சரைப் பார்த்து, ‘இந்தியை திணிக்காதே’னு கோஷம் போட்டு என் மார்க்குக்கு வேட்டு வெச்சிட்டியேடா..!’’

- எம்.கலையரசி, சேலம்

“சண்டை போடுற மாதிரி நடிச்சது போதும். சீக்கிரமா ரீல்ஸ் வீடியோவுல போடு... எத்தனை லைக்ஸ் வருதுன்னு பார்க்கலாம்!”

- செ.செளமியா, தர்மபுரி

‘‘அம்மாவும் அப்பாவும் நம்மை வந்து பார்க்கற வரைக்கும்

நாம சண்டை போட்டுக்கிட்டே இருப்போம். அப்பத்தான் ஆளுக்கொரு லேப்டாப் கிடைக்கும்!”

- கே.பி.ஜெயந்தி, மதுரை-1

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்... `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 1.11.2022