
“புறமுதுகிட்டு ஓடிவந்த மன்னர் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததும் கடுப்பாயிட்டாரே ஏன்?”
"எங்க டாக்டர் சினிமா பார்க்க மாட்டார். ஷார்ட் பிலிம்தான் பார்ப்பார்!"
"ஏன் சிஸ்டர்?"
"அவருக்கு பத்து நிமிஷத்துக்குள்ள கதையை முடிக்கறதுதான் பிடிக்கும்!"

- அஜித்
"எனக்கு சாதாரண ஜுரம்தானே டாக்டர். மாத்திரை எடுத்துக்கிட்டா சரியாயிடுமே. எதுக்கு ஸ்கேன் எடுக்கணும்?"
"மாத்திரையை உங்க குடல் சரியா ஜீரணம் செய்யுமான்னு பார்க்க வேண்டாமா?"

- அஜித்
“புறமுதுகிட்டு ஓடிவந்த மன்னர் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததும் கடுப்பாயிட்டாரே ஏன்?”
“நாட்டு எல்லை ஆரம்பமாகிவிட்டது. பயமில்லாமல் மெதுவாக ஓடவும்னு யாரோ போர்டு வெச்சிருந்தாங்களாம்!”

- எஸ்.முகம்மது யூசுப்
"நீங்க தினமும் வாக்கிங் போகணும். என் க்ளினிக் இருக்குற தெரு வழியாப் போனீங்கன்னா சந்தோஷப்படுவேன்!"
"ஏன் டாக்டர்?"
"என்கிட்ட சிகிச்சை எடுத்துட்டிருக்குற ஒருத்தர் நடமாடிக்கிட்டு இருக்கறதைப் பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை!"

- அஜித்