
“கூட்டணிக்காக தலைவர் ரொம்பதான் அலையறார்.”
"இந்தப் பாட்டுக்கச்சேரிக்கு ரொம்ப கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கினேன்."
"உள்ள போங்க. இன்னும் கஷ்டப் படணும்னு தலையில் எழுதியிருக்கு."

- கிணத்துக்கடவு ரவி
“கூட்டணிக்காக தலைவர் ரொம்பதான் அலையறார்.”
“எப்படிச் சொல்றே?”
“ `எங்கள் கூட்டணிக்கு முதலில் வருபவர்களுக்கு 10 தொகுதிகள் வழங்கப்படும்… இத்துடன் கோல்டு காயின் இலவசம், 20 தினங்களுக்கு இலவச தேர்தல் பிரசாரம் செய்யப்படும்’னு அறிவிச்சிருக்காரே!”

- மலர்சூர்யா
"பத்துத் தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வெச்சிருக்கீங்கன்னு உங்கமேல குற்றம் சொன்ன எதிர்கட்சித் தலைவரை எப்படி அடக்கினீங்க தலைவரே?"
"என் அடுத்த தலைமுறை ஆளுங்க அவர் வீட்டுக்கு சம்பந்தம் பேச வருவாங்கன்னு சொன்னேன்!"

- அஜித்
“ஆபரேஷன் நாளைக்கு வெச்சுக்கலாமா?”
“ஏன் டாக்டர்?”
“நாளைக்கு சண்டே... உங்க சொந்தக்காரங்க யாரும் லீவு போட வேண்டியதில்லை பாருங்க...”

- மலர்சூர்யா