Published:Updated:

ஜோக்ஸ் - 3

jokes
பிரீமியம் ஸ்டோரி
News
jokes

“ஏன் தலைவரே இப்பவெல்லாம் கட்சிப் பொதுக்குழுக் கூட்டம் போடறதே இல்லை?”

“நாள் முழுக்கத் தனியா உட்கார்ந்திருக்க கடுப்பா இருக்குய்யா!”

ஜோக்ஸ் - 3

- எஸ்.எஸ்.பூங்கதிர்

“பேஷன்ட் எந்த ரூட்ல வாக்கிங் போகணுங்கறதைக்கூட இந்த டாக்டர் எழுதிக் கொடுக்கிறாரே?”

“அவர் திறந்திருக்கிற சின்னச் சின்னக் கடைகள்ல வியாபாரம்

நடக்கணும்னுதான்!”

ஜோக்ஸ் - 3

- மலர்சூர்யா

``தொடர்ச்சியாகக் கட்சிப்பணியில் ஈடுபட்ட தலைவர் களைப்பில் உறங்குவதால், மேடையில் பேசுபவர்கள் மெதுவாகப் பேசும்படி கேட்டுக் கொள்கிறோம்..!"

ஜோக்ஸ் - 3

- எஸ்.எஸ்.பூங்கதிர்

“கோவிலில் பிரார்த்தனை செய்யும்போது மனைவி பேரையே திரும்பத் திரும்பச் சொல்றாரே?”

“கஷ்டத்தைச் சொல்லிப் பிரார்த்தனை பண்றாராம்..!”

ஜோக்ஸ் - 3

- வீரணம் சரவணன்