
News
"உங்கள டாக்டராகவிடாமத் தடுத்தது எது தலைவரே..?"
"பள்ளிக்கூடம்..!"

- சி.சாமிநாதன்
“ஏன் மன்னர் முதுகுல சிமென்ட் விளம்பரம் வரைஞ்சிருக்கு..?”
“அடிக்கடி புறமுதுகிட்டு ஓடி வர்றதால சிமென்ட் கம்பெனிக்காரங்க விளம்பரம் வரைஞ்சுட்டாங்க”

- மலர்சூர்யா
"அவர் ஒரு போலி டாக்டரா,எப்படிச் சொல்ற?"
"பிளட் டெஸ்ட் எடுத்துட்டு வாங்கன்னு சொல்றதுக்குப் பதிலா, ‘எழுதிட்டு வாங்க’ன்னு சொல்றாரே..!"

- கோவை.நா.கி.பிரசாத்
"போலீஸ்காரங்ககிட்ட நட்பே வச்சிக்கக்கூடாதா, ஏன் சொல்றீங்க?"
"எப்படி இருக்கீங்கன்னு கேட்டார். ஏதோ வண்டி ஓடுதுன்னேன்...
எங்க `ஹெல்மெட்' ன்னு கேட்கிறார்!"

- ச.புகழேந்தி