``கடந்த வாரங்களில் ஒருநாள் நீ உங்க வீட்டுலயே திருடினேன்னு உன் மனைவியே புகார் கொடுக்குறாங்களே... ஒப்புக்கொள்கிறாயா?"
"அன்றைக்கு, `ஒர்க் ஃப்ரம் ஹோம்' கடைப்பிடித்தேன் ஐயா!"

- வி.சி. கிருஷ்ணரத்னம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
“மன்னர் ஸ்கூல் பசங்களைவிட மோசமா இருக்கார்!’’
“எப்படி?”
“மழை வந்ததாலே போருக்கு விடுமுறை விடணுமாம். எதிரிக்குக் கடிதம் அனுப்பியிருக்கார்!’’

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்
“காலத்தின் அருமை கருதி, தலைவர் இப்போது கூட்டத்துக்கு வந்து கொண்டிருக்கும் மக்களைத் தேடிச்சென்று லாரியிலேயே பேசுவார் என்பதை...”

- அஜித்
“தலைவருக்கு அரசியல் புதுசு…”
“இருக்கட்டும்... அதுக்காக உட்கட்சித் தேர்தலுக்கும் கூட்டணி வைக்கப்போறேன்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவர்!”

- மலர்சூர்யா