"எங்க தலைவரை மீறி கட்சியில எதுவும் நடக்காது..."
"பரவாயில்லையே..!"
"ஆமாம்... போஸ்டர் ஒட்டறது, கொடி கட்டறதுன்னு எல்லா வேலையையும் தலைவரையே பண்ண வெச்சுடுவோம்..!"

- ஜெ. மாணிக்கவாசகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS"நாளுக்கு நாள் ஞாபக மறதி அதிகமாயிட்டே போகுது டாக்டர்!"
"அதைப் பக்கத்துல இருக்குற க்ளினிக்ல போய்ச் சொல்லுங்க. இது மளிகைக்கடை!"

- அஜித்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
"எதிரி மன்னன் தன் மகனுக்கு முடிசூட்டியுள்ளான் மன்னா!"
"ஐயகோ... முதல் போரில் ஜெயிச்சாகணும்கற சென்டிமென்ட்டுக்காகவே நம்மீது போர் தொடுப்பானே!"

- அஜித்
"போரில் சூப்பர் ஓவரா, அப்படியென்றால் என்ன மன்னா?"
"போர் முடிந்த பிறகும் சிறிது நேரம் வைத்து அடித்து அனுப்பினானே எதிரி!"

- தஞ்சை சுபா