"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வருடத்திற்கு ஒரு இடைத்தேர்தலை அனைத்துத் தொகுதிகளுக்கும் கொண்டுவருவோம் என்பதை..."

- மாணிக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS"படம் எப்படி வந்திருக்கு?"
"என் படம்னு யாரும் கேஸ் போடாம, ஆளும்கட்டசிக்கெதிரா பன்ச் பேசாம வியாபாரம் ஆகிற அளவுக்கு வந்திருக்கு சார்!"

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
“நான் கட்சி ஆபீஸுக்கு, முன்னால சைக்கிள்ல வந்தேன், அப்பறம் டூ வீலர்ல வந்தேன்... இப்போ கார்ல வர்றேன். இதுல இருந்து என்ன தெரியுது?”
“கூடிய சீக்கிரத்துல நீங்க போலீஸ் ஜீப்ல போவீங்கன்னு தெரியுது தலைவரே!”

- மலர்சூர்யா
``எதுக்கு பள்ளியில் படிச்சுக்கிட்டிருக்கும் உங்க மகனை அரசியல் கட்சியில சேர்க்கறீங்க..?’’
``அவனை டாக்டராக்க வேற வழி தெரியலைங்க...!’’

- வீரணம் சரவணன்