``போலீஸில் சிக்கிய தலைவர், எல்லாம் ஏத்துக்கிட்டு எப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரு..?’’
``விசாரணையைத் தனி அறையிலே நடத்தாம, அவரை மேடையில பேசச் சொல்லி நாலு பேரை விட்டுக் கைதட்டச் சொல்லியிருக்காங்க... எல்லாத்தையும் கக்கிட்டாரு..!"

- பழ.அசோக்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS" `என்னை யாரும் விலைபேச முடியாது'ன்னு தலைவர் அறிக்கை விட்டிருக்கிறாரே... பரவாயில்லையே!"
"நீ வேற... அவரேதான் அவரோட ரேட்டை ஃபிக்ஸ் பண்ணுவாராம்!"

- ஏந்தல் இளங்கோ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
"இது என் மனைவி செய்த குழம்பு!"
"இதை எதுக்குய்யா மேடைக்கு எடுத்துகிட்டு வந்தே?"
"குழந்தை எதுவும் கிடைக்கலை. அதனால இந்தக் குழம்புக்கு ஏதாவது பேரு வைங்க தலைவரே!"

- அஜித்
"நான் மறுபடியும் எப்ப டாக்டர் வரணும்?"
"போன் நம்பர் குடுத்துட்டுப் போங்க, தேவைப்படும்போது சொல்றேன்..!"

- வி. ரேவதி, தஞ்சை