சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 4

jokes
பிரீமியம் ஸ்டோரி
News
jokes

“தலைவர் இப்போல்லாம் ராத்திரி தூங்காமல் செய்தி சேனலையே பார்த்துக்கிட்டு இருக்கிறாராம்!”

"தலைவரே, நீங்க சொன்ன அதிசயம், அற்புதம் நடக்கப்போகுது...!"

"என்னய்யா சொல்றே...? "

``கவுன்டிங்ல நோட்டாவைத் தாண்டிப் போய்ட்டு இருக்கோம்...!

ஜோக்ஸ் - 4

- வீரணம் சரவணன்.

"தேர்தலில் போட்டியிட என்னிடம் டெபாசிட் தொகை வாங்கும் தேர்தல் ஆணையம், என்னைவிட அதிக அளவில் ஓட்டு வாங்கும் 'நோட்டா'விடம், டெபாசிட் வாங்குகிறதா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்!"

ஜோக்ஸ் - 4

- வி.சி. கிருஷ்ணரத்னம்

"நான் என் சுயசரிதையை எழுதலாம்னு இருக்கேன்யா!"

"உங்களைப் பற்றி நீங்களே கேவலமா எழுதுனா நல்லாருக்குமா தலைவரே?"

ஜோக்ஸ் - 4

- அஜித்

“தலைவர் இப்போல்லாம் ராத்திரி தூங்காமல் செய்தி சேனலையே பார்த்துக்கிட்டு இருக்கிறாராம்!”

“ஏன்?”

“திடீர்ன்னு வேற யாராவது முதல்வராகிட்டாங்கன்னு சொல்லிடுவாங்கங்கிற பயம்தான்!”

ஜோக்ஸ் - 4

- ஹெச். உமர் பாரூக்