Published:Updated:

ஜோக்ஸ்: யுவர்ஸ்- ஹியூமர்லி !

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஓவியம்: ஜெயசூர்யா

ஜோக்ஸ்: யுவர்ஸ்- ஹியூமர்லி !

ஓவியம்: ஜெயசூர்யா

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ந்த ஓவியங்களை ஆனந்த விகடன் சமூகவலைதளங்களில் பதிவிட்டு, வாசகர்களிடம் ஜோக்ஸ் எழுதச் சொல்லியிருந்தோம். வந்து குவிந்ததில் சிறந்த ஸ்மைலிகள்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இவ்வளவு மும்முரமாக வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணுகிறீர்களே? இப்படி ஒரு நாளாவது என்னுடைய ஹோம் வொர்க் பண்ணி குடுத்து இருக்கிறீர்களா?”

Jayashree Sainath

“எனக்கு ஆன்லைன் கிளாஸ் இருக்கு, ரெண்டு பேர்ல யார் லேப்டாப் தரப்போறீங்க?”

Sudersan Srinivasan

ஜோக்ஸ்: யுவர்ஸ்- ஹியூமர்லி !

“அப்பா! உங்க ரெண்டு பேருடைய மேனேஜர்களை விட, எங்க க்ளாஸ் மிஸ் பெஸ்ட்டுப்பா..” “ஏண்டா அப்படி சொல்றே? “உன்னையையும், அம்மாவையும் கழுவி ஊத்தற அளவுக்கு என்னைத் திட்டமாட்டாங்களே!

Ramkumar Kumar

படிச்சு படிச்சு சொன்னேன். அன்னைக்கு வேலையை அன்னைக்கே முடிச்சிருங்கன்னு! இப்போ, லாக்டவுன் முடியப்போற சமயத்துல மொத்த வேலைகளையும் இழுத்துப்போட்டு செஞ்சா இப்படி தான் டென்சனா இருக்கும்

Ravikumar Krishnasamy

“இரண்டு பேரும் ஒர்க் பண்ற மாதிரி ஓவரா சீன் போடறீங்களே... இன்னிக்கி யார்தான் சமைக்க போறது....பசிக்குது...!”

Thillai Raja

“அம்மா டீ, காபி எதாச்சும் கொடு”

இருடா வாங்கின பால் திரிஞ்சி போச்சு.. சிஎம் கு டேக் பண்ணி ‘போஸ்ட்’ போட்டிருக்கேன் , புது பால் வரட்டும் காச்சி தரேன்”

@KayathaiS

“கம்யூட்டரையும் தர மாட்டேங்கிறாங்க... மேனேஜர் கால் பண்ணுவார்னு சொல்லி மொபைலையும் தர மாட்டேங்கிறாங்க... நான் எதை வெச்சுத்தான் வீடியோ கேம் விளையாடறதாம்...?!

@KLAKSHM14184257

சோறு போடுவீங்களா போட மாட்டீங்களா? இல்ல CMOTamilnaduக்கு WFHAtrocitiesனு டேக் பண்ணி சோறு போடாம கொல்றாங்கனு ட்வீட் போடவா?

@JaNeHANUSHKA

அப்பா: நாங்க ரெண்டு பேரும் வேலை செய்யறதைப் பார்த்து நீ என்ன நினைக்கிறே பாபு?

மகன்: உங்ககிட்ட நான் மட்டும் மாட்டிக்கிட்டு முழிக்கலேன்னு!

@POONKATHIR

எங்கம்மா நல்லாவே தூங்குது. எங்கப்பா முழிச்சுக்கிட்டே தூங்குறாரு. இவங்களை நம்பி ரெண்டு கம்பெனி வேற இருக்கு.. அய்யோ ராமா..

பெ.பாலசுப்ரமணி