Published:Updated:

ஜோக்ஸ்: யுவர்ஸ் ஹியூமர்லி!

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஓவியம்: ஜெயசூர்யா

ஜோக்ஸ்: யுவர்ஸ் ஹியூமர்லி!

ஓவியம்: ஜெயசூர்யா

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

“இன்னிக்கு மார்க்கெட்ல நீங்க வாங்கிட்டு வந்த காய்கறிகளில், மூணு கத்தரிக்கா, நாலு உருளைக்கிழங்கு, ரெண்டு தக்காளி சொத்தையா இருக்கு... அதான் சி.எம்.முக்கு டேக் பண்ணிட்டு இருக்கேன்..!”

- கே.லக்‌ஷ்மணன், திருநெல்வேலி-11.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ஆப் மூலமா லாக் பண்ணாதேன்னு சொன்னா, கேட்டாதானே...! இப்ப பாரு டிரஸ்ஸெல்லாம் உள்ளே இருக்கு. ஆபீஸுக்கு நேரமாகிக்கிட்டே இருக்கு... சீக்கிரம் ‘பீரோ ஆப்’பை ஓப்பன் பண்ணு...”

“இருங்க, பாஸ்வேர்டு மறந்துட்டேன்...!’’

வீரணம் சரவணன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``அப்படியே அந்த மளிகை சாமான் லிஸ்ட்ல நாலு மாஸ்க்கு, ரெண்டு சானிட்டைசர் சேர்த்துக்க சித்ரா’’

ஹனுஷ்கா NJ

``பாஸ்வேர்டு மறந்துட்டேன்னு சொன்னா விடாம எங்க அம்மா அப்பா தங்கச்சின்னு எல்லோருடைய பேரையும் போட்டு மொத்தமா லாக் பண்ணி விட்டுடாதே..!’’

சிலந்தி

``என் ஆபீஸ் அக்கவுன்ட்ஸ்ல என்ன தெரியணும் உனக்கு?”

``உங்க சேலரில எதுவும் குறைச்சிருக்காங்களான்னு செக் பண்ணுறேன்!”

Palani Balaraman

“இட்லிக்குள்ள எப்படிக் கறி வைக்குறதுன்னு யூடியூபுல தேடிக்கிட்டு இருக்கேங்க’’

எம்.விக்னேஷ், மதுரை

கணவன்: நீ சொன்ன டையைத்தான் தலைல தேய்ச்சு இருக்கேன். பத்து நிமிஷம் ஆச்சு, அடுத்து என்ன பண்ணணும்?

மனைவி: எனக்கும் தெரியாது. பொறுங்க, யூடியூப்ல பார்த்துச் சொல்றேன்.

பெ.பாலசுப்ரமணி, திண்டுக்கல்

கணவன்: இப்ப எதுக்கு தட்டும் டார்ச் லைட்டும் ஆர்டர் பண்ணிட்டு இருக்க?

மனைவி: ஏதோ ‘கோ கொரோனா சேல்’ ஆஃபராம். முதல் இரண்டு டாஸ்க் பொருள்கள் வாங்குனா அடுத்த டாஸ்க் பொருள்களை இலவசமா அனுப்பி விடுவாங்களாம்.

Journey SaravanaDolphin

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism