Published:Updated:

``என் சமூகத்துக்கு இந்த விருது சமர்ப்பணம்!" - கோல்டன் குளோப் வென்ற அமெரிக்க திருநங்கை

MJ Rodriguez
News
MJ Rodriguez ( Instagram Photo: @mjrodriguez7 )

2017-ல் நெட்ஃப்ளிக்ஸின் `போஸ்' தொடரில் நடிப்பதற்குத் தேர்வு செய்யப்பட்டர். 26 தொடர்களைக்கொண்ட இந்தத் தொடர், ஜூன் மாதம் 2018 முதல் ஒளிப்பரப்பாகியது. இதே தொடருக்காக 2021-ல் எம்மி விருத்துக்கான பரிந்துரைப் பட்டியலில் இவர் இடம்பெற்றிருந்தார்.

நெட்ஃப்ளிக்ஸில் வெளியான `போஸ்' (Pose) என்ற நிகழ்ச்சிக்காக அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை எம்ஜெ.ரோட்ரிகியுஸ், சிறந்த நடிகைக்கான 79-வது கோல்டென் குளோப் விருதைப் பெற்றுள்ளார். கோல்டன் குளோப் வரலாற்றில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற முதல் திருநங்கை என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார்.

Golden Globe Awards
Golden Globe Awards

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

31 வயதான ரோட்ரிகியூஸ் அமெரிக்காவில் பிறந்தவர். ஆணாகப் பிறந்த இவர் 7 வயதில் பெண் ஆக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தனது 14-ம் வயதில் பெற்றோரின் ஒத்துழைப்பால், ரோட்ரிகியூஸ் என்ற திருநங்கையானார். கலைக்கல்லூரியில் படித்த இவர், இசைக் கல்லூரியிலும் இணைந்து படித்தார். அதைத் தொடர்ந்து ஒரு பாடகியாக உருவெடுத்தார். சிறுவயதிலிருந்து நடிகை ஆக வேண்டும் என்பதும் இவருடைய ஆசையாக இருந்தது.

இவர் 2011-ல் `ரென்ட்' எனும் நாடகத்தின் மூலம் மேடை நடிகையாக அறிமுகமானர். 2012 முதல் 2016 வரை மேடை நாடகங்களிலும், `நர்ஸ் ஜாக்கி' (Nurse jackie), `தி கேரி டைரிஸ்' (The Carrie Diaries), `லுக் கேஜ்' (Luke Cage) போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மார்வெல் காமிக்சில் இடம்பெற்றுள்ள எம்.ஜெ வாட்சன் எனும் கதாபாத்திரத்தின் தாக்கத்தால், ரோட்ரிகியூஸ் தனது பெயரில் எம்.ஜெ என்பதையும் இணைத்துக்கொண்டார்.

MJ Rodriguez
MJ Rodriguez
Instagram Photo: @mjrodriguez7

2017-ல் நெட்ஃப்ளிக்ஸின் `போஸ்' தொடரில் நடிப்பதற்குத் தேர்வு செய்யப்பட்டர். 26 தொடர்களைக்கொண்ட இந்தத் தொடர், ஜூன் மாதம் 2018 முதல் ஒளிப்பரப்பாகியது. இதே தொடருக்காக 2021-ல் எம்மி விருத்துக்கான பரிந்துரைப் பட்டியலில் இவர் இடம்பெற்றிருந்தார். எம்மி விருதுக்காகப் பரிந்துரை செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெருமையும் இவருக்கு உண்டு. விருதைப் பெற்றவுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``இந்த விருதை LGBTQA சமூகத்துக்கு அர்ப்பணிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.