Published:Updated:

`கடுமையான சூழலில் காஷ்மீரின் நிலையை விளக்கிய படங்கள்! -`புலிட்சர்’ விருதை வென்ற 3 இந்தியர்கள்

`இந்த விருதை குறித்து அறிந்து இருந்தாலும், ஒருபோதும் அதை நான் வெல்வேன் என நினைத்தது கிடையாது’ என புலிட்சர் விருது வென்ற சன்னி ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜம்மு - காஷ்மீரில் கடந்த வருடம் ஜூலை மாதம் முதலே பதற்றமான சூழல் நிலவிவந்தது. திடீரென அங்கு பல பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டார்கள். அந்த மாநிலத்துக்குச் சுற்றுலா சென்ற பயணிகள், அமர்நாத் சென்ற பக்தர்கள் உள்ளிட்டவர்கள், அவசரமாக அம்மாநிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

அமித் ஷா
அமித் ஷா

அங்கு என்ன நடக்கிறது எனத் தெரியாமல் அம்மாநில அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் குழம்பியிருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 35A, 370 ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும், காஷ்மீர் மூன்றாகவும் பிரிக்கப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் ஜம்மு - காஷ்மீரில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன. இணையதளம், மொபைல் நெட்வொர்க் என மக்களின் அத்தியாவசியத் தேவைகளாகிப் போன பல விஷயங்கள் முடக்கப்பட்டன. காஷ்மீருக்கு வெளியே படிப்புக்காகவும் வேலைக்காகவும் சென்றிருந்த காஷ்மீர் மக்கள் தங்களின் குடும்பத்தினர் நிலை குறித்து தெரியாததால் கடுமையான இன்னல்களைச் சந்தித்தனர். காஷ்மீருக்குள் வெளிமாநில மக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஜம்மு - காஷ்மீரில் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடப்பதாக, பாகிஸ்தான் உலக நாடுகளிடம் முறையிட்டது. எனினும் இந்தியா, `காஷ்மீர் என்பது உள்நாட்டு விவகாரம்’ என யாரையும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டது.

புலிட்சர்
புலிட்சர்

இந்தக் கடுமையான காலகட்டத்தில் காஷ்மீர் பகுதியில் பணியாற்றிய மூன்று இந்திய புகைப்படக் கலைஞர்களுக்கு உலகின் மிக உயரிய விருதான `புலிட்சர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் புலிட்சர் விருது வழங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊடகத்துறையில் பொதுச் சேவை, பிரேக்கிங் நியூஸ் ரிப்போர்ட்டிங், புலனாய்வு ரிப்போர்ட்டிங், உள்ளுர், தேசிய, சர்வதேச ரிப்போர்ட்டிங் என பல்வேறு பிரிவுகளில் ஒவ்வோர் ஆண்டும் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். இதேபோன்று ஊடகத்துறையில் பணியாற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படும். Breaking News Photography, future photography என்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுன்றன. ஊடகத்துறையில் இந்த விருது மிக உயரிய விருதாகப் பார்க்கப்படுகிறது.

புலிட்சர் விருது வென்ற புகைப்படம்
புலிட்சர் விருது வென்ற புகைப்படம்

இந்த ஆண்டுக்கான Breaking News Photography விருதை ராய்ட்டர்ஸ் ஊடக புகைப்படக் கலைஞர், ஹாங்காங் போராட்டக் களத்தில் எடுத்த புகைப்படத்துக்காக தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார். Feature Photography-க்கான விருது இந்த ஆண்டு Associtaed Press(AP) ஊடக புகைப்படக்கலைஞர்களான சன்னி ஆனந்த், முக்தர் கான் மற்றும் தார் யாசின் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்தமுறை இந்த விருது அறிவிக்கும் விழா இணையத்தில்தான் நடத்தப்பட்டது.

Feature Photography-க்கான விருதை வென்ற சன்னி ஆனந்த், முக்தர் கான் மற்றும் தார் யாசின் ஆகிய மூவரும் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள். இவர்கள் அனைவரும் காஷ்மீரில் ஆகஸ்ட் மாதம் அமலில் இருந்த கடுமையான ஊரடங்குக்கு மத்தியிலும், தங்களின் லென்ஸின் வழி காஷ்மீரின் உண்மை நிலையை உலகத்துக்கு எடுத்துரைத்தனர்.

காஷ்மீரின் கடுமையான கட்டுப்பாடுகள், மாதக் கணக்கில் துண்டிக்கப்பட்ட இணைய மற்றும் மொபைல் சேவை, கடுமையான காலநிலை என அனைத்துக்கும் மத்தியில் இவர்களின் லென்ஸ் எடுத்ததெல்லாம் கிளாஸ் படங்கள். வலி, கோபம், போராட்டம் என உணர்வுகளை இவர்களது கேமராக்கள் பதிவு செய்திருக்கின்றன.

விருது வென்ற புகைப்படம்
விருது வென்ற புகைப்படம்

இது மிகவும் கடுமையான பணியாக இருந்ததாக குறிப்பிட்ட யாசின், யாரென்று தெரியாத நபர்களுடன் பல நாள்களை கழிக்க வேண்டி இருந்ததாகவும் யாருக்கும் தெரியாமல் காய்கறிக் கூடையில் தங்களின் கேமராக்களை வைத்து எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தார். மேலும், `காஷ்மீர் அனுபவம் உறுதியை அளித்தது. அது ஒரு மிக்கி மவுஸ் விளையாட்டு போன்றது என அந்த நாள்களை நினைவுகூர்கிறார் யாசின்.

View this post on Instagram

AP photographers in Kashmir win Pulitzer⁠⠀ ⁠⠀ The story of India’s crackdown on Kashmir was difficult to show to the world: The unprecedented lockdown included a sweeping curfew and shutdowns of phone and internet service.⁠⠀ ⁠⠀ But Associated Press photographers Dar Yasin, Mukhtar Khan and Channi Anand found ways to let outsiders see what was happening last August in the region of 7 million people.⁠⠀ ⁠⠀ Snaking around roadblocks, sometimes taking cover in strangers’ homes and hiding cameras in vegetable bags, the three captured images of protests, police and paramilitary action and daily life -- and then headed to an airport to persuade travelers to carry the photo files out with them and get them to AP’s office in New Delhi.⁠⠀ ⁠⠀ “It was always cat-and-mouse,” Yasin recalled Monday as he, Khan and Anand won the 2020 Pulitzer Prize for feature photography. He added by email: “These things made us more determined than ever to never be silenced.” ⁠⠀ ⁠⠀ Anand said the award left him speechless.⁠⠀ ⁠⠀ “I was shocked and could not believe it,” he said, calling the prize-winning photos a continuation of the work he’s been doing for 20 years with AP.⁠⠀ ⁠⠀ Click the link in bio to see all of the winning images.⁠⠀ #APPhotos #PulitzerPrize Dar Yasin @daryasinap, Mukhtar Khan @mukhtarap and Channi Anand @channipictures⁠⠀

A post shared by AP (@apnews) on

சன்னி ஆனந்த் தனக்கு விருது கிடைத்ததை நம்பமுடியவில்லை என்றும் பேச வார்த்தை இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். `இந்த விருதை குறித்து அறிந்து இருந்தாலும், ஒருபோதும் அதை நான் வெல்வேன் என நினைத்தது கிடையாது’ என அவர் தெரிவித்திருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான் எல்லைகளில் அசாதாரண சூழலில் பலமுறை புகைப்படம் எடுத்த அனுபவம் கொண்டவர் சன்னி ஆனந்த்.

புலிட்சர் விருது வென்ற புகைப்படம்
புலிட்சர் விருது வென்ற புகைப்படம்

முக்தர் கான், ஸ்ரீநகர் பகுதியில் வசிக்கிறார். தனக்கு விருது அறிவிக்கப்பட்டதை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார் முக்தர். இந்த நேரத்தில் தங்களின் குடும்பத்தாருக்கும் உடன் பணியாற்றும் நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார் முக்தர் கான்.

இதேபோன்று புத்தகம், நாடகம், இசை உள்ளிட்ட பிரிவுகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு