Published:Updated:

`தமிழ் எம் உயிர் என்போமே!"- இலங்கைத் தமிழ் இசைத்துறையில் புதிய சாதனை

'தமிழ் எம் உயிர் என்போமே" என்ற தொடங்கும் பாடல், உலகம் முழுதும் வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்

இலங்கைத் தமிழர்
இலங்கைத் தமிழர்

பாரம்பர்ய மற்றும் நவீனக் கலைகளில் சிறந்து விளங்கும் அக்கலைகளுக்கு பங்களிப்பு செய்து வரும் தமிழ்க் கலைஞர்களுக்கு அரசு சார்பில் விருது வழங்கும் விழா பெரிய அளவில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தீம் பாடலைத்தான் இலங்கையில் பிரபலமாக உள்ள தமிழ்ப் பாடகர்கள் இணைந்து பாடி சாதனை செய்துள்ளார்கள்.

`தமிழ் எம் உயிர் என்போமே!"- இலங்கைத் தமிழ் இசைத்துறையில் புதிய சாதனை

இப்பாடல் அதிகாரபூர்வமாக வெளியிட்ட பின் உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் இப்பாடலை எழுதியவரும், தமிழ்த் திரைப்படங்களில் பாடல் எழுதி வருபவருமான பொத்துவில் அஸ்மினிடம் பேசினோம்.

``இலங்கையில் கலைத்துறைக்கு ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக பங்களிப்பு செய்துவரும் மூத்த, இளம் படைப்பாளிகள் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர். அதிக எண்ணிக்கையான தமிழ்க் கலைஞர்கள் அரசாங்கத்தினால் பாராட்டப்படவிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இலங்கை தமிழ்க் கலைஞர்கள்
இலங்கை தமிழ்க் கலைஞர்கள்

கொழும்பு தாமரைத் தடாகம் கலை அரங்கில் கெளரவ அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கான கருப்பாடலை நான் எழுதியுள்ளேன். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள இலங்கை இசையமைப்பாளர் சுருதி பிரபாவின் இசையில்

இலங்கையின் பிரபலமான மூத்த, இளம் பாடகர், பாடகிகள் 30 பேர் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர். இலங்கையில் அதிக எண்ணிக்கையான தமிழ்க் கலைஞர்கள் இணைந்து ஒரு பாடலைப் பாடுவது இதுவே முதல் முறையாகும்.

`தமிழ் எம் உயிர் என்போமே!"- இலங்கைத் தமிழ் இசைத்துறையில் புதிய சாதனை

இது இலங்கை தமிழ் இசைத்துறையில் ஒரு சாதனை. இப்பாடல் உலக தமிழ் இசை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ''தமிழ் எம் உயிர் என்போமே" என்ற தொடங்கும் பாடல், உலகம் முழுதும் வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்'' என்றார்.