Published:Updated:

`எது நார்மல் எனக் கேட்கிறாள் ஜோர்டான் ரீவ்!' - புதுரக பார்பிக்கள் உருவாகக் காரணமான சிறுமியின் கதை

ஜோர்டான் ரீவ்
ஜோர்டான் ரீவ்

இரண்டு கைகள் இருப்பது நார்மலான விஷயம்தானே என்று நீங்கள் நெற்றியைச் சுருக்குவீர்கள். அதுபோல வலதுகை மட்டுமே இருப்பது எனக்கு நார்மல்தான்...

"எது நார்மல்?" என அத்தனை பேர் கூடியிருக்கும் அந்த டெட் டாக் மேடையில் கேட்கிறாள் ஜோர்டான் ரீவ்.

ஜோர்டானுக்கு வயது 14. அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் பிறந்த சிறுமி. பிறக்கும்போதே ஜோர்டான் இடதுகை மூட்டுக்குக் கீழ் வளர்ச்சியில்லாமல் பிறந்தாள். "எனக்குக் இடது கை இல்லாததைப் பார்த்து நீங்கள் வருத்தப்பட்டால் உங்கள் பார்வையில் தவறு இருக்கிறது. ஆம், எனக்கு இடக்கை இல்லை. அது இல்லை என்கிற கவலை எனக்குத் துளியும் இருந்ததில்லை. நண்பர்கள் எனக்கு, அது ஒரு குறையாகவே நினைக்கவிடவில்லை. 'ஒரு கை இல்லாதது உங்களுக்கு எப்படி இருக்கிறது?' எனக் கேட்பவர்களிடம், 'இரண்டு கைகளும் இருப்பது உங்களுக்கு எப்படி இருக்கிறது?' என்பேன். இரண்டு கைகள் இருப்பது நார்மலான விஷயம்தானே என்று நீங்கள் நெற்றியைச் சுருக்குவீர்கள். அதுபோல வலதுகை மட்டுமே இருப்பது எனக்கு நார்மல்தான். இப்போது கூறுங்கள், எது நார்மல்?" என்று புன்னகைக்கிறாள் ஜோர்டான்.

ஜோர்டான் ரீவ்
ஜோர்டான் ரீவ்
சரி, இந்தப் 14 வயதுச் சிறுமிக்கும் உலகின் டாப் பொம்மை உற்பத்தி நிறுவனமான மேட்டல் பார்பி டால் உற்பத்தி நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு இருந்துவிடப்போகிறது?

உறுப்பு வளர்ச்சிச் சிக்கலை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்காகச் செயல்பட்டு வரும் ஜோர்டான், தன் தாய் ஜென் லீ ரீவுடன் சேர்ந்து "பார்ன் ஜஸ்ட் ரைட் (Born Just Right)" எனும் புத்தகம் எழுதியிருக்கிறாள். சரி, 14 வயது இந்தச் சிறுமிக்கும் உலகின் டாப் பொம்மை உற்பத்தி நிறுவனமான மேட்டல் பார்பி டால் உற்பத்தி நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு இருந்துவிடப் போகிறது? வெள்ளைச் சருமம், பென்சில் உடல், பெரிய கண்கள், பெரிய உதடுகள் எனப் பெண்களின் உடல் அமைப்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இவ்வுலகம் உருவாக்கி வைத்திருந்த இலக்கணத்தை அண்மைக்காலமாகவே உடைத்து வருகிறது பார்பி பொம்மை தயாரிப்பு நிறுவனம்.

புதுரக பார்பி
புதுரக பார்பி

அந்த அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கறுப்பு நிறச் சருமத்தையுடைய பார்பி பொம்மைகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. அதன் அடுத்தகட்டமாக ஆண், பெண் எனப் பாலின அடையாளப்படுத்துவதைத் தகர்த்தெறியும் வகையில் பாலினச் சுதந்திரத்தன்மையுடைய பொம்மைகளைச் சந்தையில் அறிமுகப்படுத்தியது மேட்டல் நிறுவனம். தற்போது தனது பொம்மை தயாரிப்பில் அடுத்த பரிமாணத்தை எட்டியிருக்கும் மேட்டல் மேலும் சில புதுரக பொம்மைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

`போனி டெயில்' பார்பி டால் இனி வெண்புள்ளிகளுடன்..!- விழிப்புணர்வு ஏற்படுத்தும் கியூட் பார்பிஸ்
ஜோர்டான் ரீவ்
ஜோர்டான் ரீவ்

மின்மினி ஜோர்டான் மேட்டலின் இந்தப் புதுரக பார்பி பொம்மைகளை உருவாக்குவதில்தான் பங்கெடுத்திருக்கிறார். வெண்புள்ளிச் சரும பார்பி பொம்மைகள், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியான பார்பி பொம்மைகள், சிறிய மார்பகங்களை உடைய பார்பிக்கள், செயற்கைக் கால்/கை பொருத்தப்பட்ட பார்பி பொம்மைகள் ஆகியவற்றை தற்போது மேட்டல் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இவற்றில் பொம்மைகளுக்கான செயற்கைக்கால்/கை தயாரிப்பதில் மேட்டலுக்கு ஜோர்டான் உதவியிருக்கிறார். "எது நார்மல்?" எனச் சிறிய மேடையொன்றில் ஜோர்டான் கேட்ட கேள்வியைத் தனது பொம்மைகளின் வழியாகத் தற்போதுச் சர்வதேச அளவில் சாத்தியப் படுத்தியிருக்கிறது பார்பி நிறுவனம். அவளது கேள்வி இனி நார்மல் பற்றிய உலகின் பார்வையையும் மாற்றக்கூடும்.

பின் செல்ல