Published:Updated:

உறை குளிர், டைவிங் சூட் இல்லை.. பனிக்கட்டிக்கு அடியில் 295 அடி தூரம் நீந்திய பெண்ணின் கின்னஸ் சாதனை!

ஆம்பர் ஃபில்லரி ( ட்விட்டர் )

உறைய வைக்கும் பனிக்கட்டிகளுக்கு அடியில் நீந்தி சாதனை படைத்துள்ளார், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஆம்பர் ஃபில்லரி. சுமார் 295 அடி மூன்று அங்குல தூரம் வரை பனிக்கட்டிகளுக்கு அடியில் நீந்திச் சென்று, இரண்டாவது முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

கடலில், ஆற்றில் எனப் பலரும் நீந்தி சாதனை படைப்பதை பார்த்திருப்போம். ஆனால் அனைவரும் வியக்கும் வகையில் உறைய வைக்கும் பனிக்கட்டிகளுக்கு அடியில் நீந்தி சாதனை படைத்துள்ளார், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஆம்பர் ஃபில்லரி. சுமார் 295 அடி மூன்று அங்குல தூரம் வரை பனிக்கட்டிகளுக்கு அடியில் நீந்திச் சென்று, இரண்டாவது முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

ஆம்பர் ஃபில்லரி
ஆம்பர் ஃபில்லரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு, நார்வேயின் ஒப்ஸ்ஜோவில் 229 அடி மற்றும் 7.9 அங்குல தூரம் வரை நீந்தி கின்னஸ் சாதனை படைத்திருந்தார் ஆம்பர் ஃபில்லரி. இந்நிலையில் தற்போது அந்த சாதனையை தானே முறியடித்து 295 அடி வரை நீந்தி உள்ளார். அது மட்டுமல்லாமல் டைவிங் சூட் இல்லாமலேயே இந்தச் சாதனையை செய்து முடித்துள்ளார்.

இந்த சாதனை நிகழ்த்தியபோது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆம்பர் ஃபில்லரி, தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும், நார்வே குழுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு முறை கின்னஸ் சாதனை படைத்துள்ள இந்தப் பெண்ணுக்குப் பலரும் தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism