Published:Updated:

படம் பார்த்து கதை எழுது !

படம் பார்த்து கதை எழுது !

படம் பார்த்து கதை எழுது !

படம் பார்த்து கதை எழுது !

Published:Updated:
படம் பார்த்து கதை எழுது !

பொம்மை உலகம் !

''அண்ணா, இந்த ஏரோப்ளேன் பொம்மை ரொம்ப அழகா இருக்கில்ல?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆமா! குட்டிக் குட்டி ஜன்னல்வெச்சு, அதுக்கு உள்ளே பயணிகள் மாதிரி குட்டியூண்டு பொம்மைகளும் இருக்கு பாரு. இதில் அமெரிக்கா, ஜப்பான் எல்லா நாட்டுக்கும் சீக்கிரமே போய்டலாம்.''

படம் பார்த்து கதை எழுது !
##~##

''சாமிக்கிட்டப் போன நம்ம அப்பாவைப் பார்க்கிறதுக்கு, இதில் போனா எவ்வளவு நேரம் ஆகும்?''

''சேச்சே... அப்படிச் சொல்லக் கூடாது. அங்கே போனா திரும்பவே முடியாது''

''அண்ணே, இந்த வாத்து பொம்மை, நாய்க்குட்டி, கரடி இதுக்கு எல்லாம் பேரு வைப்போமா?''

''ஓ! நீயே சொல்லு பார்ப்போம்''

''ம்... கரடி பேரு ஜீனி. நாய்க்குட்டியோட பேரு லட்டு’.’

அப்போது, ''ஏய் வாலுங்களா...'' என்று ஒரு குரல். புயல்போல் அந்தப் பெண் உள்ளே நுழைந்தாள்.  

''என் புள்ளை விளையாடின பொம்மைகளை  எடுத்து அலமாரில் அடுக்கிவைக்கச் சொல்லி அனுப்பினா, உட்கார்ந்து கதை பேசிக்கிட்டு இருக்கீங்களா? உங்க அம்மாவுக்கு வேலை கொடுத்ததோடு உங்களுக்கும் ஓசி சோறு போடுறேன் பாரு... என்னைச் சொல்லணும்'' என்றாள் எஜமானி கோபமாக.

படம் பார்த்து கதை எழுது !

இருவரும் வேகவேகமாக பொம்மைகளை அடுக்க ஆரம்பித்தார்கள். அப்போது தங்கை சொன்னாள்... ''ஏண்ணே... இந்தப் பொம்மைங்க எல்லாம் நம்மை மாதிரி வேலைக்குப் போகவேண்டியது இல்லை தானே?''

- எம்.ஜி.பரத், திண்டுக்கல்.

நேற்று இல்லாத மாற்றம் !

 ரமேஷின் அப்பா அடிக்கடி பிசினஸ் விஷயமாக மும்பை, டெல்லி எனப் பறந்து செல்வார். ரமேஷ§க்கு புதுப்புதுப் பொம்மைகளை வாங்கி வருவார். அதை வைத்துக் கொஞ்ச நேரம் விளையாடுவான். பொம்மை கொஞ்சம் உடைந்தாலும் அதைத் தொட மாட்டான். அவனுக்கு ஏழைக் குழந்தைகள், வேலைக்காரர்களைக் கண்டாலே பிடிக்காது.

''அம்மா, கடவுள் ஏன் இவர்களைப் படைத்தார்? இவங்களால் யாருக்கு என்ன பயன்?'' என்று கேட்பான்.

படம் பார்த்து கதை எழுது !

''அப்படி எல்லாம் பேசக் கூடாது. அவர்களும் இந்த சமூகத்தில் நிறையச் செய்றாங்க'' என்றார் அம்மா.

ஒரு நாள் ரமேஷ் வீட்டு கார் டிரைவர், அவன் அறையில் நுழைந்து எதையோ எடுப்பதைப் பார்த்துவிட்டான். நேராக அப்பாவிடம் சென்று, ''நம்ம டிரைவர் திருட்டு வேலை செய்றார்'' என்று கோபத்துடன் சொன்னான்.

''அவசரப்பட்டு ஒருத்தரைப்பத்தி தப்பாகப் பேசக் கூடாது. என்னிடம் பெர்மிஷன் வாங்கிக்கிட்டுதான் உன் அறைக்குப் போனார். எதுக்குன்னு சொல்றேன் வா'' என்றார்.

வெளியே காரின் பின் இருக்கையில் ரமேஷ், குப்பை என்று ஒதுக்கிய பழைய பொம்மைகள் இருந்தன. புரியாமல் பார்த்த ரமேஷை அப்பா காரில் ஏறச் சொன்னார்.

கார் ஒரு குடிசைப் பகுதிக்குச் சென்றது. அங்கே ஒரு குடிசையில் அவனைவிட வயதில் சிறிய சுட்டிகள் பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தனர். ''தம்பி... உன்னை மாதிரிப் பசங்க விளையாடிட்டுப் போட்ட பழைய பொம்மைகளை எடுத்துவந்து... இங்கே இருக்கிற குழந்தைகளுக்குக் கொடுப்பேன்.'' என்றார் டிரைவர்.

அவர் கையில் இருந்த பொம்மைகளை அவர்கள் ஆர்வமாய் வாங்கி விளையாடினார்கள். இதைப் பார்த்த ரமேஷ§க்கு, இதுவரை ஏற்படாத உணர்வு தோன்றியது.

அடுத்த நாள்... பள்ளி முடிந்ததும் ரமேஷ் அந்த குடிசைப் பகுதியின் ஒரு வீட்டில் இருந்தான். அவன் எதிரே ஒரு சிறுமி. ''இதுதான் ஏரோப்ளேன். ஒருமுறை நான் அப்பாவோடு இதில் போனப்ப... நிறைய சாக்லேட் கொடுத்தாங்க.'' என்று சொல்லிக்கொண்டு இருந்தான்.  

- பா.ஹரிணி, தேனி.

பவ்யாவும் நானும்...

எனக்கு கரடி, கார், முயல் பொம்மைகளைவிட, ஏரோப்ளேன் பொம்மைதான் ரொம்பப் பிடிக்கும். காரணம், இதைப் பார்க்கிறப்ப எல்லாம் நான் பெரிய ஆள் ஆனவுடன் ஏரோப்ளேன் ஓட்டணும்னு தோணும். ஐய்யோ... என்னைப் பத்தி சொல்லலியே. என் பேர் வேலுமணி, ஏழாம் வகுப்பு படிக்கிறேன். எனக்குத் தங்கை ஒருத்தி இருக்கிறாள். பேரு பவ்யா. பேர்ல மட்டும்தான் பவ்யம். மத்தபடி சரியான வாலு. அவள்கிட்டே எதைக் கொடுத்தாலும் அது இரண்டாகத்தான் திரும்பி வரும்.  கங்காரு, தன் குட்டியை வயிற்றில்வெச்சுக் காப்பத்துற மாதிரி இந்த ஏரோப்ளேனை காப்பாற்ற நான் படும்பாடு இருக்கே....

''அண்ணா! என்னையும் விளையாட்டுல சேர்த்துக்கிறியா?''

போச்சுடா... வந்துட்டா.

படம் பார்த்து கதை எழுது !

''போடி! உன்னையச் சேர்த்துக்கிட்டா, பொம்மையை உடைச்சிருவ!''

''சரி! இந்த ஏரோப்ளேன் எப்படி பறக்குதுனாவது சொல்லேன்'' என்றாள்.

''உன் வாலை சுருட்டிக்கிட்டு உட்காரு, சொல்றேன். இதோ இந்த இரண்டு இறக்கை யினால தான் ஏரோப்ளேன் பறக்குது. இங்கே பைலட் உட்கார்ந்து ஓட்டுவாரு.''

''பெரிய ஏரோப்ளேனை, பெரிய டிரைவர் ஓட்டுவாரு. இந்தச் சின்ன ஏரோப்ளேனை யாரு ஓட்டுவா?''

நான் பதில் சொல்ல வாயெடுக்க, ''வேலு... வேலு...''னு அம்மா கூப்பிட்டாங்க.

படம் பார்த்து கதை எழுது !

அடுப்படிக்கு ஓடினேன். மேலே இருந்த ஒரு தூக்குப் பாத்திரத்தை எடுத்துக் கொடுக்கச் சொன்னாங்க. கொடுத்துட்டு படுவேகமாக ஹாலுக்கு வந்து பார்த்தேன். ஏரோப்ளேன் இரண்டாகக் கிடந்தது. வந்த கோபத்தில், பவ்யா தலையில் இரண்டு குட்டுகள் வைத்து, ''ஏண்டி உடைச்சே?'' என்றேன்.

''இதை யாரு ஓட்டுவாங்கனு கேட்டேன். நீ பதிலே சொல்லலை. அதான் உடைச்சுப் பார்த்தேன்'' என்றாள்.

''போடி... இதுல யாரு இருப்பா. உன் மண்டையப் போலவே எம்ப்ட்டியாத்தான் இருக்கும்.'' என்றேன்.

''வெவ்வே'' என்று அழகு காட்டிவிட்டு ஓடினாள்.

இப்போ, இந்த ஏரோப்ளேனை சரிசெய்ய ஒரு மெக்கானிக் வேணுமே. உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?

      ர.அரவிந்த், தஞ்சாவூர்.