
தேவையான பொருள்கள்:
ஃபோர்ம் போர்டு (சதுர வடிவில்) - 2, லிக்யூடு எம்பிராய்டரிங் லைனர் ( liquid embroidery) - சிவப்பு மற்றும் வெள்ளை, அக்ரலிக் (கறுப்பு வண்ணம்) - 1, பிரஷ், வளையம் - 2, ஹூக் - 2, ப்ளையர் - 1 (ஹூக்கை டைட் செய்யும் கருவி)


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
செய்முறை:
ஸ்டெப் 1: சதுர வடிவ ஃபோர்ம் போர்டின் நான்கு பக்கங்களிலும், அக்ரலிக் வண்ணத்தைப் பூசவும்.
ஸ்டெப் 2: ஓர் ஓரத்தில் ஊசியினால் சிறு துளை ஒன்று போடவும்.
ஸ்டெப் 3: காய்ந்ததும், வெள்ளை நிற லிக்யூடு எம்பிராய்டரிங் லைனரால் ஃபோர்ம் போர்டில் வரையவும்.

ஸ்டெப் 4: படத்தில் காட்டியபடி, உங்களுக்குத் தேவையான டிசைனை வரைந்துகொள்ளவும்.
ஸ்டெப் 5: சிவப்பு நிற லிக்யூடு எம்பிராய்டரிங் லைனரால் கோடு இழுத்துக்கொள்ளவும்.
ஸ்டெப் 6: இந்த ஐந்து ஸ்டெப்களையும் இன்னொரு ஃபோர்ம் போர்டிலும் செய்துகொள்ளவும்.
ஸ்டெப் 7: இரண்டும் காய்ந்த பின்னர், ஹூக் மாட்டி, ப்ளையர் மூலம் டைட் செய்யவும்.

அழகான லைட் வெயிட் இயரிங் ரெடி!
படங்கள்: செ.விவேகானந்தன்