
சென்னை காமராஜர் அரங்கத்தின் வெளி வாசல் வரை, மழலைகளின் உற்சாக சத்தம் கேட்டது. உள்ளே நுழைந்து பார்த்தால், குழந்தைகளுக்கான ஒரு தனி கிரகத்துக்குள் நுழைந்துவிட்டோமோ என்று தோன்றியது. அங்கே, ஐந்து முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்காக பிரைன்கார்வ் (BrainCarve) என்கிற நிறுவனம், TALENTIA’18 என்ற போட்டியை நடத்திக்கொண்டிருந்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பிரைன்கார்வ் -ல் படிக்கும் மாணவ, மாணவியருக்கு அபாகஸ் மற்றும் வேதிக் மேத்ஸ் போட்டியும், மற்ற மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்

கலந்துகொண்டனர். குழந்தைகளின் பிஞ்சுக்கரங்களில் கிரையான்ஸ் விளையாடி... மரம், மலை, கிளி, டோரா என விதவிதமான ஓவியங்கள் உருப்பெறுவதைப் பார்க்கப் பார்க்கப் பிரமிப்பாக இருந்தது. இன்னும் பல சுட்டிகள் பரதநாட்டியம், கீபோர்டு, யோகா எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கலக்கினர்.

இதுகுறித்து பிரைன்கார்வ் நிறுவனத்தின் இயக்குநர் பரமேஸ்வரி, ‘`இந்த நிகழ்ச்சியை நான்கு வருடங்களாக நடத்திவருகிறோம். ஐந்தாவது வருடம் மெகா ஈவன்ட்டாக நடத்த முடிவுசெய்தோம். எங்களுடைய பிரைன்கார்வ் இன்ஸ்டிட்யூட், உலகம் முழுவதும் உள்ளது. எங்கள் மாணவர்கள் தவிர, தேசிய அளவிலிருந்தும் பல மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழும் பரிசும் கொடுத்திருக்கிறோம். அடுத்த ஆண்டு, இந்த நிகழ்ச்சியை இன்னும் பெரிய அளவில் எடுத்துச் செல்லும் திட்டம் இருக்கிறது ’’ என்றார்.
- வெ.வித்யா காயத்ரி
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்