சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 10

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 10
பிரீமியம் ஸ்டோரி
News
குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 10

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 10

ஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, `ஆறாம் வகுப்பில் ஒரு ஆப் டெவலப்பர்’ தொடரைப் பற்றி `நச்’ என்று விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் எழுதி அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.

கடைசித் தேதி: 15.10.2018

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 10

இடமிருந்து வலம்:

1. இந்தியர்களின் முக்கியப் பொழுதுபோக்குகளில் ஒன்று (6)
6. மார்கழி மாதம் இது அதிகம் (2)
8. சிரசு (2)
9. கண்களை ஈரமாக வைக்கவும் சுத்தப்படுத்தவும் இது அவசியம். (4)
13. பொருள்கள் வாங்கவும் விற்கவும் கூடிய இடம் (3)
14. கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி (4)
15. வெளியே முள்; உள்ளே இனிப்பு (2)
18. ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் இது (3)
19. ஆமைக்கு இது அவசியம் (2)
20. போரும் அமைதியும் எழுதிய ரஷ்ய எழுத்தாளரின் பிற்பாதி பெயர் (5)

வலமிருந்து இடம்

3. நரிக்கு இந்தப் புத்தி இருப்பதாகச் சொல்லுவதில் உண்மை இல்லை (5)
4. இல்லம் (2)
5. மாட்டின் ------------ மூலம் சமையல் எரிவாயு தயாரிக்கலாம் (3)
10. ஏகலைவன் என்றதும் நினைவுக்கு வருவது (3)
11. கொடியில் காய்க்கும் காய் (2)
12. பிரபலமான வாசகம்: கண்ணைப் பார்,  --------- (2)
17. துள்ளி ஓடும் புள்ளி ------- (2)
23. கட்டியாகப் பொழியும் மழை (6)

மேலிருந்து கீழ்

1. பூட்டுக்குப் புகழ்பெற்ற ஊர் (6)
2. பஞ்சம் ஏற்பட்டால் இதுவும் வரும் (4)
3. தலையாட்டி பொம்மைக்குப் புகழ் பெற்ற ஊர் (5)
14. ஹைதராபாத்தில் வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி (5)
16. பஞ்சு -------- சாப்பிட எல்லோருக்கும்          பிடிக்கும் (4)

கீழிருந்து மேல்

7. நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று (4)
11. மனிதர்களுக்கு இது அவசியம் (6)
21. சரக்கு கொண்டு செல்லும் சிறு வாகனம் (6)
22. கிருஷ்ணரின் மாமா (4)
23. ம்ம்மே... கூட்டம் (6)

இந்தப்  போட்டிக்கான விடை நவம்பர் 15, 2018 இதழில் இடம்பெறும்.

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 10

- செ.சங்கீதா