Published:Updated:

புத்தக விமர்சனம்

புத்தக விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தக விமர்சனம்

புத்தக விமர்சனம்

சத்யாவும் மாயப் பென்சிலும்

ஃபேன்டஸி, இயற்கை மீதான நேசம், விலங்குகள் மீதான பாசம், நகைச்சுவை என இதில் இடம்பெற்றிருக்கும் 10 சிறுகதைகளையும் ஒவ்வொரு சுவையில் எழுதியிருக்கிறார், எழுத்தாளரும் பள்ளி ஆசிரியருமான க.சரவணன். கதைகளுக்கு அவரின் மகள் வரைந்திருக்கும் ஓவியங்கள் புத்தகத்துக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இந்தத் தொகுப்பில் இருக்கும் ‘சத்யாவும் மாயப் பென்சிலும்’ கதையைக் குறித்து சுட்டி ஸ்டார்களின் விமர்சனம்...

புத்தக விமர்சனம்

ந்தக் கதை சிரிப்பாகவும் சிந்திக்கும் விதமாகவும் இருக்கிறது. கதையில் முதலில் நிஜமும் கனவுபோல தெரிந்தது. அந்தப் பென்சிலை வைத்து சத்யா வரைவது எல்லாமே நிஜமாக உருவாவது ஒரு மாயாஜால படம் மாதிரி இருந்தது. தனக்குக் கிடைத்த மாயப் பென்சில் மூலம் அடுத்தவர்களுக்கு உதவியது, எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
புத்தக விமர்சனம்

பசியால் வாடிய பாட்டிக்கு உணவு அளித்தான். ஆனால், பென்சிலிடம் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை மீறி, ரகசியத்தைச் சொல்லி, பென்சில் மறைந்துவிடும்போது மனசுக்கு கஷ்டமாக இருந்தது. மாயாஜால பென்சில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பிறருக்கு உதவும் மனப்பான்மை நமக்கு வரவேண்டும்.

- வெ.தான்யா

- அனு சி மெயின்சன்


சத்யாவும் மாயப் பென்சிலும்

ஆசிரியர்: க.சரவணன்
விலை: ரூ. 50
புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை
சென்னை - 600018

பள்ளிப் பைக்கட்டு

பள்ளிப் பிள்ளைகள் அன்றாடம் பயன்படுத்தும் மற்றும் நம்மைச் சுற்றியிருக்கும் பொருள்கள் உருவாகி, நம் கரங்களுக்கு வரும் விதத்தை, கதை போன்ற விறுவிறுப்புடன் சொல்லும் கட்டுரைகள். நம்முடன் உரையாடும் வகையில் எழுதியிருப்பது, படிக்கையில் கொஞ்சமும் அலுப்பின்றி செல்கிறது. இதில், தங்களை கவர்ந்த கட்டுரைகளை விமர்சிக்கிறார்கள் சுட்டி ஸ்டார்கள்...

புத்தக விமர்சனம்

‘பென்சிலின் கதை’ படித்து, பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். பென்சில் உருவாகத் தேவையானது பைன் மரக்கட்டை. அங்கே தொடங்கி பென்சில் உருவாகும் விதத்தை, வண்ணப் பென்சில்கள் எனப் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். இத்தனை பேரின் உழைப்பில் வரும் பென்சிலை, சில சமயம் தேவையில்லாமல் சீவி வீணாக்கி இருக்கிறோமே என நினைத்து வருத்தப்பட்டேன். இனி அப்படிச் செய்யாமல் சரியாகப் பயன்படுத்துவேன்.

- சீ.சூர்யா

ந்தக் கட்டுரைகளின் எழுத்தாளர், உயிரில்லாப் பொருள்களுக்கும் உணர்வு கொடுத்து மெய்சிலிர்க்கச் செய்துள்ளார். ‘பேனாக்கத்தியின் கதை’ தனித்துவமாக இருக்கிறது. நவீன கத்தியில் ஆரம்பித்து, பண்டைய கத்தி வரை அறிந்துகொண்டேன். கத்தியை எதற்குப் பயன்படுத்த வேண்டும் எங்கே பயன்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார். சுரங்கத்தில் நடக்கும் விஷயம், கற்பனை உலகுக்கே அழைத்துச் சென்றது. உயிரில்லாப் பொருள்களுக்கும் மரியாதை கொடுப்போம்.

- ரா.திருசெல்வன்

பள்ளிப் பைக்கட்டு

ஆசிரியர்: மி.இலியன், பெ.செகால்
தமிழில்: எஸ்.தோதாத்ரி
விலை: ரூ. 60
நீலவால் குருவி
1/11 அன்பு காலனி, நந்தனம்
சென்னை - 600035

அஞ்சலிக்கு அப்பா சொன்ன கதைகள்

முத்து மணிகளை கோத்தது போன்ற 8 சிறுகதைகளின் தொகுப்பு. இவற்றில் 7 சிறுகதைகள் நமது சுட்டி விகடனில் முன்பே வெளியானது என்பது சிறப்பு. இரண்டு கதைகள் தவிர, மற்றவற்றில் அஞ்சலி என்ற சிறுமியே நாயகியாக வருகிறாள். இந்தப் புத்தகம் பற்றிச் சொல்கிறார்கள் சுட்டி ஸ்டார்கள்...

புத்தக விமர்சனம்

‘அஞ்சலிக்கு அப்பா சொன்ன கதைகள்’ என்ற நூலிலிருந்து, ‘நன்றி என்றது கன்றுக்குட்டி’ சிறுகதையைப் படித்தேன். மிகவும் எளிய சொற்களில் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருந்தது. இயற்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கூறப்பட்டிருந்தது. ஆனால், அப்பாவிடம் கேட்டு அந்தக் கன்றுக்குட்டியை அஞ்சலியே வளர்ப்பதுபோல முடித்திருக்கலாம் எனத் தோன்றியது. மேலும், தினமும் பார்க்கும் கன்றுக்குட்டியைப் பெயர்வைத்து அழைத்திருக்கலாமே.

- த.சந்தோஷ்

ஞ்சலிக்கு அவர் அப்பா சொன்ன கதைகள் நன்றாகவே இருந்தன. ‘பகுத்தறிவு’ கதையில் அஞ்சலில் கேட்ட கேள்விக்கு அப்பா பதில் சொல்லவே இல்லை. அவள், ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால், இப்போ உள்ள குரங்கு மட்டும் மனிதனா மாறவே இல்லியே ஏன்?’ என்று கேட்டாள். அதற்கு அவர் பதில் சொல்லவே இல்லை.

- ச.அன்பரசன்

அஞ்சலிக்கு அப்பா சொன்ன கதைகள்

ஆசிரியர்: தமிழ்மகன்
விலை: ரூ.50
உயிர்மை பதிப்பகம்
79, மேற்கு போயஸ் சாலை, தேனாம்பேட்டை
சென்னை-600018

அனிதாவின் கூட்டாஞ்சோறு

செவ்வாய் கிரகத்தில் நடக்கும் கருத்தரங்கமாக (புசிட்போலோ) ஃபேன்டஸி கதை, சென்னையில் நடந்த ஓர் உண்மை நிகழ்வுக்குள் சென்டிமென்ட் கதை (கன்ஸ் மாமா), காட்டுக்குள் நடக்கும் படப்பிடிப்பில் விலங்கு நடிகர்களின் ஜாலியான கதை (ரோலிங்சர்ர்ர்) என 21 கதைகளும் வெவ்வேறு ரகம். பல சிறார் கதைகள் எழுதிய விழியன், தனது அனுபவத்தால் ‘கூட்டாஞ்சோறு’ படைத்திருக்கிறார். இதுபற்றிச் சொல்றாங்க சுட்டி ஸ்டார்கள்...

புத்தக விமர்சனம்

‘சைக்கிளில் பறந்த விநோதன்' என்ற முதல் கதையே வித்தியாசமாக இருந்தது. என் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியது. நானும் என் சிறுவயதில் குரங்குப் பெடல் போட்டு சைக்கிளை ஓட்டிய அனுபவம் இருக்கு. இந்தக் கதையில் விநோதனுக்குக் கிடைச்ச மாதிரி மாயாஜால அனுபவம் எனக்கும் கிடைச்சிருந்தா, எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சு, கற்பனை சைக்கிளில் பறந்தேன்.

‘அறிவரசனின் விடுதி நாட்கள்" கதையைப் படிக்கப் படிக்க ‘அச்சச்சோ பாவம் அறிவரசன்' என இருந்துச்சு. கடைசி வரியைப் படிச்ச பிறகுதான், ‘ஆஹா'ன்னு சிரிப்பு வந்துச்சு. அப்படி ஒரு சஸ்பென்ஸ் கதை. ஆனால், ஓவியத்தை முன்னாடியே பார்த்துடறதால அந்த சஸ்பென்ஸ் முன்னாடியே உடைஞ்சுடுதே.

- சக்திவேல்

- லிபி வரிஷினி

அனிதாவின் கூட்டாஞ்சோறு

ஆசிரியர்: விழியன்
விலை: ரூ. 90
புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை
சென்னை - 600018

வானத்துடன் டூ

கையில் எடுத்தால் சீக்கிரமே படித்து முடித்துவிடும் சின்னச் சின்னதான 12 கதைகளின் தொகுப்பு. ஆனால், படித்து முடித்த பிறகும் கதைகளுடன் பயணிக்கும் வகையில் சின்னச் சின்ன ட்ரிக்ஸ் ஒளிந்திருக்கும் கதைகள். அது என்ன? ஓவியர் பிள்ளை ஒவ்வொரு கதைக்கும் இரண்டிரண்டு ஓவியங்களை வரைந்து, ‘டபுள் ட்ரீட்’ கொடுத்திருக்கிறார். என்ன சொல்றாங்க நம்ம சுட்டி ஸ்டார்ஸ்?

புத்தக விமர்சனம்

‘வானத்துடன் டூ’ என்ற புத்தகத்தின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது. இதில் எனக்குப் பிடித்த கதை, ‘கண்டுபிடி... கண்டுபிடி’. எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். இதில் இரண்டு கதாபாத்திரங்கள் நிஷா மற்றும் லிவின். இரண்டு பேரும் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்கள். இவர்களுக்கு பள்ளி மைதானத்தில் சாவி கிடைக்கிறது. அது யாருடையது, எந்த வண்டியுடையது என்று கண்டுபிடிக்கும் விதம் அருமை. எதையும் முழுதாக ஆராய்ந்தால் விடை கிடைக்கும் எனப் புரிந்துகொண்டேன்.

- இராம.அபிராமி

க்கதை (வேட்டை ராஜா) விலங்குகளின் மனதைப் பற்றி விளக்குகிறது. நாட்டு ராஜாவால் வதைக்கப்படப் (வேட்டையாடும்போது) போகிறோம் என்று நினைத்து வருந்துகின்றன. ராஜா வேட்டையாட வரும் ஒவ்வொரு பௌர்ணமியின்போதும், அவை காட்டின் மறுபக்கத்துக்குச் செல்கின்றன. இதுபற்றி ராஜாவிடம் துணிந்து சொல்கிறது ஒரு விலங்கு. அது எது? ராஜா என்ன முடிவு எடுத்தார்? புத்தகத்தைப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க.

- ர.ஸ்ரீஅக்‌ஷயா

வானத்துடன் டூ

ஆசிரியர்: விஷ்ணுபுரம் சரவணன்
விலை: ரூ.50
வானம் பதிப்பகம்
M 22,6-வது அவின்யூ, அழகாபுரி நகர்
ராமாபுரம்,
சென்னை- 600089

குட்டியானைக்கு பச்சைத் தொப்பி

நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் செயல்பாடுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கலாம். அவற்றை அறிந்தும் வைத்திருக்க வேண்டும். அதேநேரம், அவற்றுக்கு கற்பனையான ஒரு கதையை உருவாக்கி சொல்லும் விதமும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அப்படியான 20 கதைகளின் தொகுப்பு. இதில், இரண்டு கதைகள் பற்றிச் சொல்கிறார்கள் சுட்டி ஸ்டார்கள்...

புத்தக விமர்சனம்

‘ஓட்டப்பந்தயம்’ என்ற கதையில் ஒளியும் இருளும் நண்பனாக இருக்கின்றன. வெவ்வேறு நிறமாக, வெவ்வேறு குணங்களாக, வெவ்வேறு கொள்கையில் பயணிக்கிறார்கள். அவர்கள் இந்தப் பூமியில் போட்டியிட்டு செயல்படுவதால்தான் இருளும் பகலும் வருகிறது. நாமும் படிப்பிலும் பல நல்ல விஷயங்களிலும் ஆரோக்கியமாகப் போட்டியிடுவோம்.

- செ.வித்யஸ்ரீ

‘வானத்துக்குப் போன தண்ணீர்’ கதையில், வானமும் தண்ணீரும் எப்படி நண்பர்களாக மாறின என்பதை கற்பனையுடன் சொல்லியிருக்கிறார்கள். அதன்மூலம் மேகம், மழை உருவாவது பற்றிப் படிக்கவே அழகாக இருக்கிறது. அத்துடன் நிலத்தையும் நண்பனாக மாற்றியிருந்தால் கதை இன்னும் அழகாக இருந்திருக்கும் என எண்ணுகிறேன். இதுபோல ஒவ்வொரு கதையும் நன்றாக உள்ளது.

- டி.மாளவிகா

குட்டியானைக்கு பச்சைத் தொப்பி

ஆசிரியர்: கார்த்திகா முகுந்த்
விலை: ரூ.90
உயிர்மை வெளியீடு
79, மேற்கு போயஸ் சாலை, தேனாம்பேட்டை
சென்னை-600018


தொகுப்பு: யுவா

படங்கள்: கார்த்திகா