Published:Updated:

பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

சு.சூர்யா கோமதி
பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!
பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

உங்கள் வீட்டில் பழைய பயன்படுத்தாத சாக்ஸ்கள் நிறைய இருக்கின்றவா? அவற்றையெல்லாம் வீட்டை அலங்கரிக்கும் பொருள்களாக மாற்றும் வகையில் எளிமையான கிராஃப்ட் செய்யக் கற்றுக்கொடுக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஷோபனா.

பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

சாக்ஸ் பவுச்

பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

தேவையான பொருள்கள்:

சாக்ஸ் - 1

கத்தரிக்கோல்

ஃபெவிக்கால்

டெகரேஷன் பாசிகள்

ரன்னர் (ஜிப்)

ரப்பர் பேண்ட் - 2

செய்முறை:

ஸ்டெப் - 1

சாக்ஸின் வாய்ப்பகுதிக்குக் கீழ் இருக்கும் வளைவு கோட்டில் சாக்ஸைக் கத்தரித்துக்கொள்ளவும்.

ஸ்டெப் - 2

பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

சாக்ஸை உட்புறமாகத் திருப்பிக்கொள்ளவும்.

ஸ்டெப் - 3

சாக்ஸின் நடுப்பகுதியில் ரன்னரை ஒட்டி, ஒரு மணிநேரம் காயவிடவும்.

பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

ஸ்டெப் - 4

பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

சாக்ஸின் மீது ரன்னர் நன்றாக ஒட்டி காய்ந்த உடன், ரன்னரைத் திறந்து மூடி, பயன்படுத்தும் விதமாக ரன்னருக்கு நடுவில் இருக்கும் சாக்ஸ் பகுதியினை கட் செய்து விடவும்.

ஸ்டெப் - 5

மீண்டும் வெளிப்புறமாகத் திருப்பிக்கொள்ளவும்.

ஸ்டெப் - 6 

பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

உங்களுக்குப் பிடித்தாற் போல் டெகரேட் செய்து கொள்ளவும். அவ்வளவுதான் சாக்ஸ் பவுச் ரெடி.

சாக்ஸ் ஸ்நோ மேன்

தேவையானவை:

 சாக்ஸ் -1 (வெள்ளை நிறம்) 

கத்தரிக்கோல்

ஃபெவிக்கால்

ரப்பர் பேண்ட்- 3

கிஃப்ட் ரிப்பன் - அரை மீட்டர்

ரெக்கரேஷன் பாசிகள் 

குண்டூசி

அரிசி - ஒரு கப் 

பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

செய்முறை:

ஸ்டெப் - 1

சாக்ஸில் அரசியை நிரப்பிக்கொள்ளவும்.

பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

ஸ்டெப் -2

சாக்ஸ் பெரியதாக இருந்தால் அரிசி நிரப்பியது போக மீதம் இருக்கும் பகுதியை கட் செய்து கொள்ளவும்.

ஸ்டெப் - 3

அரிசி வெளியே வராமல் இருக்க சாக்ஸின் வாய்ப்பகுதியில் ரப்பர் பேண்ட் போட்டு கட்டிக்கொள்ளவும்.

பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

ஸ்டெப் - 4

அரிசி நிரப்பியுள்ள சாக்ஸின் நடுப்பகுதியில் ரப்பர் பேண்ட் போட்டுக்கட்டி தலைப்பகுதியைத் தனியாகவும், உடல் பகுதியைத்  தனியாகவும் பிரித்து, கிப்ஃட் ரிப்பன் ஒட்டிக்கொள்ளவும்.

பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

ஸ்டெப் - 5

நாம் கட் செய்து வைத்த சாக்ஸின் ஒரு பகுதியை ஸ்நோ மேனின் தலைப்பகுதியில் குல்லா போன்று மாட்டிவிடவும்.

ஸ்டெப் - 6

டெகரேஷன் பாசிகளில் குண்டுசிகளை மாட்டி ஸ்நோ மேனுக்கு கண்கள், மூக்கு ஒட்டி அலங்கரித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

உங்கள் வீட்டு அலமாரியை அலங்கரிக்கும் சாக்ஸ் ஸ்நோ மேன் தயார்.

சாக்ஸ் முயல்

தேவையானவை:

சாக்ஸ் - 2 (கலர் சாக்ஸ்)

கூக்ளி ஐஸ்

ஸ்கெட்ச் - 1

நூல்

ஊசி

ஃபெவிக்கால்

காட்டன் பஞ்சு

செய்முறை:

ஸ்டெப் - 1

சாக்ஸில் உள்ள வளைவுப்பகுதியில் மேற்புறமாகத் தூக்கி சாக்ஸை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளவும்.

பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

ஸ்டெப் - 2

சாக்ஸை உட்புறமாகத் திருப்பி படத்தில் காட்டியுள்ள படி கை, கால்கள் வரைந்து கொள்ளவும்.

பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

ஸ்டெப் - 3

வரைந்துள்ள கோட்டின் மீதே ஊசி பயன்படுத்தி தைத்து காட்டன் பஞ்சினை நிரப்ப்பிக் கொள்ளவும்.

ஸ்டெப் - 4

பஞ்சு வெளியே வராமல் இருக்க சாக்ஸின் வாய்ப்பகுதியை நூல் வைத்துத் தைத்துவிடவும்.

ஸ்டெப் - 5

பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

பொம்மையின் உடல் பகுதி தயார்.

ஸ்டெப் - 7

மற்றொரு சாக்ஸில் வாய்ப்பகுதியை தனியே கத்தரித்துக் கொள்ளவும்.

ஸ்டெப் - 8 

சாக்ஸை உட்புறமாகத் திருப்பி காதுகள் வரைந்து அந்தக் கோட்டின் மீதே தைத்துக்கொள்ளவும்.

ஸ்டெப் - 9 

பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

சாக்ஸை வெளிப்புறமாகத் திருப்பி காட்டன் பஞ்சை நிரப்பவும்.பஞ்சு வெளியே வராமல் இருக்க வாய்ப்பகுதியை நூலால் தைக்கவும்.

ஸ்டெப் - 10

மொம்மையின் உடல்பகுதியை, தலைப்பகுதியுடன் சேர்த்து தைத்துக்கொள்ளவும்.

ஸ்டெப் -11

பயன்படுத்தாத சாக்ஸ் டு டெகரேட்டீவ் பொம்மைகள்... ஈஸி சாக்ஸ் கிராஃப்ட்!

கண்கள், மீசை மற்றும் பற்களை ஒட்டி அலங்கரித்தால் அழகான முயல் பொம்மை தயார்.

Vikatan