Election bannerElection banner
Published:Updated:

``அப்பாவோட அழுகைதான் எங்க சாதனைக்கு அடிநாதம்!'' - தலையால் வேனை நகர்த்திய அக்கா தம்பி!

``அப்பாவோட அழுகைதான் எங்க சாதனைக்கு அடிநாதம்!'' - தலையால் வேனை நகர்த்திய அக்கா தம்பி!
``அப்பாவோட அழுகைதான் எங்க சாதனைக்கு அடிநாதம்!'' - தலையால் வேனை நகர்த்திய அக்கா தம்பி!

``ஒரு சாதனையாளனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத வலி என்னனு எனக்கு நல்லாவே தெரியும். என் புள்ளைங்க சாதிக்கும்னு எனக்குத் தெரியும். அடிக்கடி என்கிட்ட உங்க ஆசையை நாங்க நிறைவேத்துறோம்னு சொல்லிட்டே இருப்பாங்க. நான்கூட நம்மோட வலியை மறைக்க இவங்க விளையாட்டா பேசுறாங்கனு நினைச்சேன். ஆனா, அவங்க அதுக்காக மெனக்கிட்டது ரொம்ப பெருமையா இருந்தது."

உலக சாதனை நிகழ்த்த வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசையாக இருந்தாலும் கூட அதை அடைந்தே தீரவேண்டும் என்ற வேட்கை இருப்பவர்கள் மட்டுமே அதை நிரூபித்துக்காண்பிக்கின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயதான சௌந்தராஜனும் 15 வயதான தேவி பிரியாவும் 1,100 கிலோ எடையுடைய ஆம்னி வேனைத் தலையால் முட்டி நகர்த்தி உலக சாதனை படைத்துள்ளனர். இருவரும் சகோதர சகோதரி என்பது கூடுதல் வெயிட்டேஜ்.

போட்டியின் அடிப்படையே ஒரு நிமிட கால அளவுக்குள் எவ்வளவு தூரம் வேனை தலையால் தள்ளி நகர வைக்கிறார்கள் என்பதுதாம். தலையால் தள்ளப்பட்ட ஆம்னி வேனின் எடை 870 கிலோ. கூடுதலாக அதில் மாணவர்களை ஏற்றி 1,100 கிலோவாக உயர்த்தியுள்ளனர். போட்டியில் முதலாவதாகக் கலந்துகொண்ட சௌந்தராஜன், தலையால் கொடுத்த அழுத்தத்தில் வேன் 331 அடி நகர்ந்துள்ளது. அடுத்ததாக வந்த தேவிபிரியா 56 நொடியில்... அதாவது ஒரு நிமிடத்திற்குள் வேனை 351 அடிக்கு நகர்த்தியிருக்கிறார். இந்த சாதனை சூப்பர் டேலன்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் `உலக சாதனை' யாக இடம் பிடித்துள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய தேவி பிரியாவிடம் பேசினோம். 

"என் அப்பா நடராஜ், அம்மா சரஸ்வதி. நாங்க ரெண்டு பேரும் இளம்பிள்ளை அரசு மாதிரி பள்ளியில் படிக்கிறோம். நான் பத்தாவது படிக்கிறேன், என் தம்பி ஒன்பதாவது படிக்கிறான்.

``அப்பாவோட அழுகைதான் எங்க சாதனைக்கு அடிநாதம்!'' - தலையால் வேனை நகர்த்திய அக்கா தம்பி!

ஆக்சுவலா சாதனை செய்யுற எண்ணம் வந்ததே எங்க அப்பாவைப் பார்த்துத்தான். அப்பா தன்னோட மீசையால ஆட்டோவை இழுத்தது, தலை முடியால் பொலிரோவை இழுத்தது, குரல்வளையால் டவேரா கார், நெற்றியால் மகேந்திரா வேனையும், பற்களால் டிராக்டரையும் இழுத்து சாதனை படைச்சிருக்காங்க. கூடவே நின்ன நாங்க அப்பாவோட செயல்களையெல்லாம் பார்த்து மிரண்டு போனோம். அப்பா செய்த செயல்களால் அவருக்கு வருமானமும் வரலை, தகுதியான பாராட்டுகளும் வரலை. அதுக்குப் பதிலா அப்பாவை எல்லாரும் வித்தைக்காட்டுறவர் மாதிரிதான் பார்த்தாங்கங்கிறது அப்பாவோட பெரும் வருத்தம். இதைச்சொல்லி அப்பா பல முறை அழுதிருக்காங்க. தன்னை ஒரு சாதனையாளரா ஏன் இந்த உலகம் பார்க்கலைங்கிறதுதான் அப்பாவோட வருத்தத்துக்குக் காரணம். அப்பதான் ஒரு அங்கீகாரம் மனுஷனை என்னலாம் செய்யும்னு யோசிக்க ஆரம்பிச்சோம். அப்பாவுக்கு தன்னோட செயல்கள் எல்லாம் கின்னஸ்ல இடம்பெறணும்னு விரும்பினாங்களாம். ஆனா, அவரோட வருமானத்தில்தான் குடும்பம் தலைநிமிர வேண்டியதிருந்தது. அதனால தனக்குள்ளேயே அந்த ஆசையை அப்பா போட்டு புதைச்சுகிட்டாங்க. 

இதையெல்லாம் கேட்டு, பார்த்து வளர்ந்ததுனால எனக்கு இது மேல எல்லாம் ஒரு வெறியே வந்திருச்சு. அந்த வெறிதான் சாகசங்கள் செய்ய ஊக்கமா இருந்தது. அதனாலதான் 1100 கிலோ எடையுடைய ஆம்னி வேனை தலையால் முட்டி நகர்த்தினேன். இந்தச் சாகசம் தற்போது வேல்டு சூப்பர் டேலன்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் உலக சாதனையாக இடம் பெற்றிருப்பது ரொம்ப சந்தோசாம இருக்கு. என் சாதனைகள் எல்லாமே எங்க கிராமத்தோடதான் இருந்தது. இப்போதான் மீடியா மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அடுத்தது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதுதான் எங்க லட்சியம், குறிக்கோள்'' என்ற தன் மகளைப் பெருமையோடு பார்த்துக்கொண்டிருந்தார் தந்தை நடராஜன். அவர் பேசினார்.

``அப்பாவோட அழுகைதான் எங்க சாதனைக்கு அடிநாதம்!'' - தலையால் வேனை நகர்த்திய அக்கா தம்பி!

``ஒரு சாதனையாளனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத வலி என்னனு எனக்கு நல்லாவே தெரியும். என் புள்ளைங்க சாதிக்கும்னு எனக்குத் தெரியும். அடிக்கடி என்கிட்ட உங்க ஆசையை நாங்க நிறைவேத்துறோம்னு சொல்லிட்டே இருப்பாங்க. நான்கூட நம்மோட வலியை மறைக்க இவங்க விளையாட்டா பேசுறாங்கனு நினைச்சேன். ஆனா, அவங்க அதுக்காக மெனக்கிட்டது ரொம்ப பெருமையா இருந்தது. அதுக்கு அப்புறம் நானே அவங்களுக்குப் பயிற்சியாளரா மாறிட்டேன். நாமதான் சாதிக்கலை. நம்ம புள்ளைங்க சாதிக்கிறதுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கணும்ல. என் பசங்க மட்டுமல்லாம என் மனைவியும் சாதனை செய்திருக்காங்க. ஆனா என்ன பண்ணுறது இந்தக் காலத்துல திறமை இருந்தாலும் சாதனை பண்ணுறதுக்குப் பணம் ஒரு தடையா இருக்குது. இருந்தாலும் நான் செய்யணும்னு நினைச்சத என் புள்ளைங்க செஞ்சிருவாங்க என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது இப்ப நினைவாகி இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு" என்றார்.

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு