அண்மையில் சென்னைப் புறநகரிலுள்ள ஒரு பள்ளியில் சிறிய வகுப்பறை ஒன்றில், நாடகம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அதற்கு இடையூறாகச் சில மாணவர்கள் சத்தமிட்டுக்கொண்டிருந்தனர். பொறுமை காத்தார்; அவர்களின் கவனத்தை ஈர்க்க என்னென்னவோ செய்தார்... பலனில்லை. அவர்களால் மற்றவர்களாலும் நாடகத்துடன் ஒன்ற முடியவில்லை. `என்ன செய்யலாம்?’ ஒரு நிமிடம் யோசித்த நாடகக் கலைஞர், ``நாடகம் பார்க்க விருப்பமில்லாதவர்கள், தாராளமாக வெளியில் சென்று விளையாடலாம்’’ என்றார். எல்லோரும் அமைதியாக இருந்தனர். ஒரு மாணவன் மட்டும் வெளியேறினான். நாடகக் கலைஞர் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. நாடகம் தொடர்ந்தது.

அந்த மாணவன் என்ன செய்கிறான் என நான் பார்த்துக்கொண்டிருந்தேன். பள்ளி மைதானத்தைச் சில நிமிடங்கள் சுற்றி வந்தான். குடிநீர்த் தொட்டியருகே இருந்த குழாயில் நீர் குடித்தான். அங்கிருந்து பார்த்தால் வகுப்பறைக் கதவு, ஜன்னல் வழியே நாடகம் தெரியும். ஐந்து நிமிடங்கள் அங்கே நின்றபடி அவன் நாடகத்தைப் பார்த்தான். பிறகு, ஈரக்கைகளை மேல்சட்டையில் துடைத்துக்கொண்டே, நாடகம் நடக்கும் வகுப்பறைக்குள் நுழைந்தான். அவனை நிறுத்தி, ``பிடிக்கலைன்னு போனியே... ஏன் திரும்ப வந்தே?’’ என்று கேட்டேன். ``இங்கிருந்து பார்த்தப்போ பிடிக்கலை. தூரத்துல இருந்து பார்த்தப்போ நல்லா இருந்துச்சு. அதான் வந்தேன்’’ என்றவன், ``கொஞ்ச நேரம் பார்ப்பேன். மறுபடியும் பிடிக்கலைன்னா வெளியே வந்துடுவேன்’’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமிட்டாய் மொழி: பிடிக்காதவர்கள் என்று யாருமே இவ்வுலகில் இல்லை. சிலரின் செயல்பாடுகளைச் சற்றே விலகியிருந்து கவனிக்கும்போது பிடிக்கக்கூடும்.