Published:Updated:

உங்கள் குழந்தைகளின் கவனிக்கும் ஆற்றலை வளர்க்கும் ஜாலி விளையாட்டுகள் - வீக்எண்ட் ஸ்பெஷல்!

விடுமுறை
விடுமுறை ( pixabay )

வார விடுமுறை வந்தாச்சு... பாடப்புத்தகத்தை மறந்துட்டு வீட்டை அதகளம் பண்றதுக்குத் தயாராகும் உங்க குழந்தைகளை, உட்காரவெச்சு சில விளையாட்டுகளைச் சொல்லிக்கொடுங்க. இது, ஜாலியாகவும் இருக்கும். அவர்களின் கவனிக்கும் திறனுக்கும் தீனி போடும்.

வார விடுமுறை வந்தாச்சு. பாடப்புத்தகத்தை மறந்துட்டு வீட்டை அதகளம் பண்றதுக்குத் தயாராகும் உங்க குழந்தைகளை, உட்காரவெச்சு சில விளையாட்டுகளைச் சொல்லிக்கொடுங்க. இது, ஜாலியாகவும் இருக்கும். அவர்களின் கவனிக்கும் திறனுக்கும் தீனி போடும்.

லெவல், பாயின்ட், கோல்டு காய்ன்ஸ்... உங்க குழந்தைகள் நல்ல விஷயம் செய்ய புது வழிகள் #ChildCare

எத்தனை எத்தனை?

இந்த விளையாட்டு, குழந்தைகளின் கவனிக்கும் திறனுக்கு மட்டுமல்லாம, உடற்பயிற்சிக்கும் குரல் வளத்துக்கும் ஜாலியா தீனி போடும். ஒரு விலங்கு அல்லது பறவையின் பெயரை ஏற்ற இறக்கத்துடன் நீங்க சொல்ல, அதுக்கு ஏற்ப குழந்தைகளின் ரியாக்‌ஷன் இருக்கணும்.

உதாரணமா, குழந்தைகள் வரிசையா நிற்கணும்.`கங்காரு' எனச் சொன்னதும் ஒரு ஜம்ப். `கங்காரு... கங்காரு' என ரெண்டு முறை சொன்னால், ரெண்டு ஜம்ப். எத்தனை முறை சொல்றோமோ அத்தனை ஜம்ப். இந்த எண்ணிக்கையைக் கூட்டியும் குறைத்தும் மாற்றி மாற்றிச் சொல்லுங்க.

அதேபோல, வேகவேகமாகவும் மெதுவாகவும் மாற்றி மாற்றிச் சொல்லுங்க. எவ்வளவு வேகமாகச் சொல்றோமோ, அவ்வளவு வேகமாக ஜம்ப் பண்ணணும். `கங்ங்ங்ங்ங்ங்...காரு' என இழுத்து மெதுவாகச் சொல்லும்போது, ரொம்ப மெதுவாக ஜம்ப் பண்ணணும். தவறாகச் செய்யறவங்க ஒவ்வொருத்தராக அவுட் ஆகி வெளியேறணும். கடைசி வரைக்கும் யார் சரியாக கவனிச்சு செய்யறாங்களோ அவங்கதான் வின்னர்!

விடுமுறை
விடுமுறை
pixabay

உடற்பயிற்சி மாதிரியே குரல் பயிற்சிக்கும் இதே விளையாட்டை நடத்தலாம். உதாரணமா, `நாய்' என்ற சொல்லை நீங்க மெதுவாகவும், வேகமாகவும், எத்தனை முறை சொல்றீங்களோ அதுக்கு ஏற்ப, குழந்தைகளும் ஏற்ற இறக்கத்துடன் `லொள்', `வெளவ்' எனக் குரைத்து வெளிப்படுத்தணும்.

இப்படிப் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் செய்கைகளாகவும் ஒலிகளாகவும் விளையாடலாம். பல குழந்தைகள் சேர்ந்து கூட்டமாக இதைச் செய்யும்போது உற்சாகமாகப் பொழுதுபோகும். கவனிக்கும் ஆற்றலும் உருவாகும்.

மாற்றி மாற்றிச் சொல்!

சில வெள்ளைத் துண்டுத்தாள்களை எடுத்துக்கங்க. ஒவ்வொன்றிலும் 10-ல் 9 எண்களை மட்டும் வெவ்வேறு மாதிரி மாற்றி எழுதணும். எப்படியென்றால்...

1, 3, 5, 7, 6, 2, 4, 8, 10

1, 10, 2, 9, 3, 7, 4, 6, 5

2, 1, 4, 3, 6, 5, 8, 10, 9

1, 3, 5, 7, 9, 10, 8, 4, 2

10, 9, 1, 2, 8, 7, 3, 4, 6

இப்படி எழுதப்பட்ட தாள்களை குழந்தைகளிடம் கொடுத்து கொஞ்ச நேரம் பார்த்துக்கச் சொல்லிட்டு, எல்லாவற்றையும் வாங்கிடுங்க. அப்புறம், ஒரு தாளை எடுத்து சில நொடிகள் எல்லோருக்கும் காண்பிச்சுட்டு, உங்க பக்கம் திருப்பிக்கணும். இப்போ, அதில் விடுபட்ட எண் எது? எந்த எண்ணுக்கு அடுத்து எந்த எண் வருது எனக் குழந்தைகள் ஒவ்வொருத்தராகச் சொல்லணும்.

kids
kids
pixabay

விடுபட்ட எண் எது என்று சொல்வதற்கு ஒரு மதிப்பெண். மற்றும் வரிசை மாறாமல் எத்தனை எண்களைச் சொல்றாங்களோ, அத்தனை மதிப்பெண். இப்படிப் பலமுறை விளையாடலாம். ஆரம்பத்தில், நினைவில் இல்லாமல் குறைவான மதிப்பெண்ணே எடுப்பார்கள். திரும்பத் திரும்ப விளையாடும்போது, கூர்ந்து கவனிக்க ஆரம்பிப்பார்கள். அந்த எண்களின் சரியான வரிசைகள் மனதில் பதிய ஆரம்பிக்கும். விளையாட்டு விறுவிறுப்பாகி மதிப்பெண்ணும் கூடிக்கொண்டே போகும்.

10 முறையோ 20 முறையோ விளையாடிவிட்டு, ஒவ்வொருவரின் மொத்த மதிப்பெண்ணைக் கூட்டிப் பார்க்கலாம். யார் அதிகம் எடுத்தாரோ அவர் வின்னர்.

இதுபோல தேர்வுக்கான பாடங்களையும் திரும்பத் திரும்ப கவனித்துப் படிக்கும்போது, அதிக மதிப்பெண் எடுக்கலாம் என்றும் போகிறபோக்கில் சொல்லிவைக்கலாம்.

மாற்றாமல் கதை சொல்!

"ஒரு கதை சொல்வேன். கவனமா கேளுங்க. கதையில் எந்தெந்த பெயர்கள், சொற்கள் எத்தனை முறை வந்ததுனு கடைசியில் சொல்லணும்'' என்று சொல்லி, ஒரு கதையைச் சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் கதையில் திரும்பத் திரும்ப சில சொற்களோ, பெயர்களோ வர வேண்டும்.

kids
kids
pixabay

ராகத்துடன் கூடிய பாடல்கள் நிறைந்த கதைகள் நிறைய உள்ளன. அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள். அல்லது அந்தப் புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக் காட்டுங்கள். பிறகு, அந்தக் கதையில், எந்தெந்த சொல் எத்தனை முறை வந்தது? எத்தனை கதாபாத்திரங்கள் வந்தன? எத்தனை முறை வந்தன என்பதை குழந்தைகள் சொல்ல வேண்டும்.

பிறகு, அதே கதையைக் குழந்தைகள் திரும்பச் சொல்ல வேண்டும். அப்போது, அதே சொற்களும் பெயர்களும் எத்தனை வந்தன? நீங்கள் சொன்னதுபோலவே ஓரளவுக்குக் கூடாமல், குறையாமல் சொல்பவர்கள் யார் எனப் பார்த்து, அந்தக் குழந்தையை வெற்றியாளராக அறிவிக்கலாம்.

எது ஜாலி... எது உருவ கேலி... உங்க குழந்தைகளுக்கு வித்தியாசத்தை புரியவைங்க!

சுவாரஸ்யமாகக் கதைகள் கேட்டதாகவும் இருக்கும். ஒருவர் சொல்வதை நினைவில் நிறுத்தி, சரியாகத் திருப்பிச் சொல்லும் திறனும் வளரும். இதையே வேற மாதிரியும் நடத்தலாம். ஒரு குழந்தையை ஒரு கதையைச் சொல்ல சொல்லிவிட்டு, அதையே திரும்பவும் அதே குழந்தை சொல்லணும். முதலில் சொன்னதிலிருந்து எந்த அளவுக்கு வார்த்தைகள் மாற்றாமல் சொல்கிறார்கள் என்பதுதான் சவால்.

இந்த விடுமுறை நாளை இந்த விளையாட்டுகளால் நிறைவாக்குங்க!

பின் செல்ல