Published:Updated:

குழந்தைகள் கொண்டாடும் ஸ்லைம்... ஈஸியா செய்யலாம் வாங்க!

ஸ்லைம்களை வீட்டிலேயே எளிமையாகச் செய்யக் கற்றுக்கொள்ளலாம்!

குழந்தைகள்
குழந்தைகள்

சைனாக் க்ளேவவுக்கு அடுத்தபடியாகக் குழந்தைகளின் மனதைத் கவர களம்மிறங்யிருக்கிறது ஸ்லைம். சின்னச் சின்ன பாட்டில்களில் பல வண்ணங்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் ஸ்லைம்கள் கொஞ்சம் காஸ்ட்லிதான். அதன் வழுவழுப்பு தன்மையும் வண்ணங்களுக்கும் குழந்தைகளின் மனதை எளிதில் கவர்ந்துவிடுகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில் நூற்றுக்கணக்கில் விலை வைத்து விற்கப்படும் ஸ்லைம்களை வீட்டிலேயே எளிமையாகச் செய்யக் கற்றுத்தருகிறார்கள் தீப்ஸிகா மற்றும் லக்‌ஷன்யா.

தேவையான பொருள்கள் :

ஸ்லைம்
ஸ்லைம்

ஃபெவிக்கால்

அக்ரலிக் பெயின்ட் - விரும்பிய நிறம்

பிளாஸ்டிக் ஸ்பூன்

பவுல்

ஸ்லைம் மிக்ஸர்- சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.

ஸ்டெப் -1 :

ஃபெவிக்காலை ஒரு பவுலில் ஊற்றிக்கொள்ளவும்.

கிராப்ட்
கிராப்ட்

ஸ்டெப் - 2:

ஃபெவிக்காலுடன் அக்ரலிக் பெயின்ட் மூன்று துளிகள் கலந்து, மிக்ஸ் செய்துகொள்ளவும்.

ஸ்டெப் - 3 :

5 : 1 என்ற விகிதத்தில் ஃபெவிக்காலையும் ஸ்லைம் மிக்ஸரையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்லைம்
ஸ்லைம்

ஸ்டெப் -4 :

பெயின்ட் கலந்த ஃபெவிக்காலுடன் ஸ்லைம் மிக்ஸர் ஊற்றி கலந்தால் உங்களுக்குப் பிடித்த நிறத்தில் ஸ்லைம் தயார்.

ஸ்டெப் -5 :

விருப்பப்படுபவர்கள் இத்துடன் க்ளிட்டர்கள் கலந்து விளையாடலாம்.

ஸ்லைம்
ஸ்லைம்

குறிப்பு : வழுவழுப்பு தன்மை அதிகம் வேண்டுமெனில் ஃபெவிக்காலுடன் சிறிது வெந்நீர் ஊற்றி கலந்து அதன் பின் பெயின்ட் கலக்கவும்.