ஸ்பெஷல் -1
Published:Updated:

முகவரி இலக்கம் - கவிதை

அறிவுமதி, ஓவியம்: டிராட்ஸ்கிமருது

முகவரி இலக்கம் - கவிதை

மக்கெனப் பிறந்தான்
தமிழ்ப் பிள்ளை
அவன்
உயரத்தை அளக்க
மலையில்லை!

வல்வெட்டித் துறை
கொடுத்த
கலங்கரை விளக்கம்

அவன்
முகம்தானே
நமக்கெல்லாம்
முகவரி இலக்கம்

அறுபதைத் தொட்டுத்
தாண்டுகிறான்
அவன்தான்... அவன்தான்
அறத்தமிழ் விடுதலை
தூண்டுகிறான்

துணிவுடன் கிழித்தான்
போர்க்கோடு
அவன்
துளியும் நெளியா
நேர்க்கோடு

ஈழம்
அவனது
தேன்கூடு
அதை
மீட்டுத் தருவார்
எங்கள்
இளையோர்...
அவன் ஊட்டிய  
விடுதலை உணர்வோடு!

அன்று
தெரிவான் பாரடா...
தெரிவான் பாரடா...
எம் தலைவன்
அந்த
முருகனைப் போன்ற
பொலிவோடு!

திரியின் கனவு
நீர்க்கோடு
அதை அழிப்போம்
அற மன்றத்
தீர்ப்போடு 

தலைவன்
எங்கள் மூச்சோடு
அவன்
மூட்டிய நெருப்பு
அணையா
விழிப்பில்
மீட்டு எடுப்போம்
தாய் நாடு!

அன்று
தெரிவான் பாரடா...
தெரிவான் பாரடா...
எம் தலைவன்
அந்த
முருகனைப் போன்ற
பொலிவோடு!